என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former union minister"

    • அவருக்கு வயது தனது 94
    • வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபிந்திர புர்கயஸ்தா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது தனது 94

    அசாமில் பாஜகவை வளர்த்தெடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சில்சார் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கபிந்திர புர்கயஸ்தா அவர்கள் அசாமில் கட்சியை வலுப்படுத்தியவர். அவரது அர்ப்பணிப்புள்ள சேவை என்றும் நினைவுகூரப்படும்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

    அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • கிரிஜா வியாசின் இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது.
    • அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தார்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கிரிஜா வியாஸ் (79), ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் வசித்து வந்துள்ளார்.

    கடந்த மார்ச் 31-ம் தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில், ஒருமாத கால சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது. அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல் மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை நேற்று வெளியிட்டது.
    • டெல்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்ற ஒருவரை வேட்பாளராக அறிவிப்பு.

    பாஜக எம்.பி-யும் மத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில் ஹர்ஷ்வர்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    டெல்லியில் உள்ள தனது இஎன்டி (ENT) மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.

    ஹர்ஷ்வர்தன் தற்போது எம்.பி-யாக உள்ள டெல்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்ற ஒருவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:-

    முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தேர்தல் வாழ்க்கைக்குப் பிறகு, நான் முன்மாதிரியான வித்தியாசத்தில் போராடிய ஐந்து சட்டமன்ற மற்றும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, கட்சி அமைப்பு மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தேன்.

    எனக்கு ஒரு கனவு இருக்கிறது .. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என்னுடன் இருக்கும் என்று எனக்குத் தெரியும் . கிருஷ்ணாவில் என் ENT கிளினிக், எனது வருகைக்காக காத்திருக்கிறது.

    எனது வேர்களுக்குத் திரும்புவதற்கு நான் இறுதியாக தலைவணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்,

    ------

    உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சத்ய பிரகாஷ் மால்வியா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். #RIPSatyaPrakashMalviya
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மால்வியாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெட்ரோலிய துறை முன்னாள் மத்திய மந்திரி சத்ய பிரகாஷ் மால்வியா மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு வயது 84.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான ஆட்சியில் பெட்ரோலியத்துறை மந்திரியாக இருந்தவர். மேலும், உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக இருந்த சிறப்பும் பெற்றவர்.

    இளம் வயதிலேயே பிரஜாத் சோஷியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கி, உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். #RIPSatyaPrakashMalviya
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருடிய வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். #PChidambaram #HouseRobbery
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், குடும்பத்துடன் வசிக்கிறார். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.



    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவை திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில், ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடன்பிறந்த சகோதரிகளான இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது நகைகள் மற்றும் பொருட்கள் திருடியதை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி, தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று முதலில் போலீசார் கூறினார்கள்.

    இதற்கிடையே திருட்டுப்போன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து நேற்று திடீரென் நுங்கம்பாக்கம் போலீசார் வெண்ணிலா, விஜி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பிறகு நேற்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

    திருட்டுப்போன நகைகளும் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்று சட்டநிபுணர்கள் கூறியதால், இருவரும் கைது செய்யப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.   #PChidambaram #HouseRobbery  #Tamilnews
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசில் கொடுத்த புகாரை திடீர் என வாபஸ் பெற்றுவிட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி நேற்று முன்தினம் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த திருட்டு வழக்கில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வெண்ணிலா, விஜி ஆகியோர் உடன்பிறந்த சகோதரி ஆவார்கள். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்கள் திருடிய குற்றத்தை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும், வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 
    ×