என் மலர்
நீங்கள் தேடியது "NEET Suicide"
- அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
- இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!
நீட் தேர்வு ரத்து என்ற பொய்யால் 21 மாணவர்கள் உயிர் பறிபோய் இருக்கிறது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா ? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
"ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?
உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?
"நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது.
- தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மலிந்தது கோட்டா நகரம்.
நாடு முழுவதிலும் இருந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினீயரிங் என்ற கனவுகளுடன் பிள்ளைகளும் வீட்டையும், பெற்றோராயும் பிரிந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
ஆனால் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு தீர்வாக விடுதி அறைகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்தி தற்கொலைகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயன்றது. ஆனால் மாணவர்கள் தற்கொலை நின்றபாடில்லை.
இந்நிலையில் கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பயின்று வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், மாணவர் தனது குடும்பத்தினரோ அல்லது நீட் தேர்வுக்காக படித்து வந்ததோ தனது முடிவுக்கு காரணம் அல்ல என்று எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரில் உள்ள சாப்ராவைச் சேர்ந்த அந்த மாணவர், சுமார் ஒரு வருடமாக இங்குள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி-க்குத் தயாராகி வருவதாகவும், லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வசித்து வருவதாகவும் குன்ஹாடி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.
மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது சகோதரிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பியுள்ளார். மாணவனின் சகோதரி விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்து அவர், அறையில் சென்று பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் சீலிங் காற்றாடியின் மேல் உள்ள கம்பியில் தூக்கிட்டுள்ளார்.
தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு கோட்டாவில் பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்ட 11வது சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
வடலூர் ரெயில் நிலையம் அருகே இன்று தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளரின் மகளான நிஷா என்ற பெண், மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதவிருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று மாலை பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி ரெயில் வந்தபோது, நிஷா தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீட் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.






