என் மலர்
பஞ்சாப்
- ஷர்வன் சிங் என்ற சிறுவன் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளான்.
- சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ஷர்வன் சிங், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி தாகம் தீர்த்துள்ளான்.
இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இதன் பிறகு பேசிய சிறுவன், "வளர்ந்த பிறகு நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்" என்று நெகிழ்ச்சிப் பொங்க கூறினார்.
- பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
- வெடிப்பு நிகழ்ந்த பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் காலிஸ்தான் பயங்கரவாதி என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நவ்ஷேரா கிராமத்திற்கு அருகில் நடந்தது.
குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காப்பாற்ற முடியவில்லை.
வெடிபொருட்களைக் கையாளும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கவனக்குறைவாகக் கையாளப்பட்டதால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆரம்ப முடிவு. இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விசாரணையில் கொல்லப்பட்ட நபர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வெடிப்பு நிகழ்ந்த பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
- அகாலி தளம் கவுன்சிலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான்.
அமிர்தசரஸ் சேஹர்தா பகுதியில் குருத்வாரா அருகே பொதுவிழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அதன்பின், அங்குள்ள சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் ஏற்கனவே ஹர்ஜிந்தர் சிங் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நபர்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், " கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது சோகமான நிகழ்வாகும். அப்பாவி மக்களைக் கொன்ற இந்த கொலையாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பகவத் மான் அறிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 120 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .
- இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள்.
- எதிரிகள் மீண்டும் மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தில், நமது ராணுவ வீரர்கள் பணியாற்றிய விதம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
அங்கு விமான படை வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நீங்கள் பழிவாங்கிவிட்டீர்கள். இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள். எதிரிகள் மீண்டும் மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை
வெறும் 20 நிமிடங்களில், பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை தகர்த்தெறிந்து விட்டோம். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கி கொள்ள இடம் இல்லாத அளவுக்கு தாக்கியுள்ளோம்.
தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும் என்பதே இலக்கு, பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுடன் மோதினால் அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்
இனி பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்க முடியும் என பயங்கரவாதிகள் கனவிலும் நினைக்க முடியாது. பயங்கரவாதிகளை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே தாக்கி அழிப்போம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.
விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துவிட்டனர்; முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எனது சல்யூட். பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தின் வீரியத்தை உலகமே உணர்ந்துள்ளது.
சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, அவர்களுக்கு அந்த சத்தம் 'பாரத் மாதா கீ ஜெய்' என்றுதான் கேட்கும்" என்று தெரிவித்தார்
பிரதமர் மோடியின் உரையில் இடையே விமான படை வீரர்கள் பாரத் மாதா கீ ஜே என்று கூச்சலிட்டனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது செயல்பட்ட விமானப்படை தளங்களில் ஒன்று ஆதம்பூர் விமானப்படை தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் முக்கிய குற்றவாளிகளான பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
- பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால், இரவு நேரங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக ஒப்புதல் அளித்து அறிவித்தன.
இந்நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் அறிவிப்பைத் தொடர்ந்து பஞ்சாப்- அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்த 3 நாட்களாக பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால், இரவு நேரங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.
மேலும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் சண்டிகரில் கடைகள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சண்டிகர் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, கடைகள் மற்றும் பிற நிறுவனங்களை தானாக முன்வந்து மூடுவதற்கான முந்தைய தடை உத்தரவை இதன் மூலம் திரும்பப் பெறப்படுகிறது.
அனைத்து கடைகளும் நிறுவனங்களும் இப்போது வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் நேற்றிரவு குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்கதல் நடத்தின.
- பாகிஸ்தான் டிரோன்களை இந்தியா தாக்கி அழித்த நிலயைில், ஆங்காங்கே பாகங்கள் சிதறிக்கிடக்கின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியா எல்லையில் உள்ள பகுதிகளை தாக்கி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை தாக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வானிலேயே இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்து வருகிறது.
பாகிஸ்தானின் டிரோன் ஒன்று நேற்றிரவு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை தாக்கியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உயரதிகாரி ஒருவர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆங்காங்கே ஏவுகணை மற்றும் டிரோன்களின் பாகங்கள் மற்றும் வெடிமருந்துகள் பயன்படுப்படும் உலோகப் பாகங்கள் சிதறி கிடக்கின்றன. இது பஞ்சாப் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
குர்தாஸ்பூரில் உள்ள சிச்ரா கிராமத்தில் உளள் வயல்வெளி பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று திடீரென ஏற்பட்டுள்ளது. நேற்று இந்த பக்கத்தில் வெடிக்கும் சத்தம் கேட்டது. ஒருவேளை பாகிஸ்தான் ஏவுகணை விழுந்து பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளது.
மேலும், அப்பகுதி இன்ஸ்பெக்டர் ஜஸ்விந்தே பால் சிங், "இங்கு வெடிச்சத்தம் காலை 4.45 மணிக்கு கேட்டது. இதனால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. ராணுவ அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகாரிகளுடன் இங்கு வந்தனர். மக்கள் வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்" எனத் தெரிவித்தார்.
- ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு.
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் ஜெய்சல்மேர் பகுதியில் இடைமறித்து தாக்கி அழித்தது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அக்னூர், கிஸ்த்வார் மற்றும் பல பகுதிகளில் Blacout எனும் மின்சார தடை ஏற்பட்டு இருளில் மூழ்கப்பட்டுள்ளது. டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்து கொண்டே இருக்கிறது.
டிரோன் தாக்குதலுக்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாராமுல்லா மாவட்டங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல்
- பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார்.
- பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.
நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன.
பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.
இதையடுத்து எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லைப்பகுதி மாநிலங்களில் பதற்றம் நிலவுவதால் பஞ்சாபின் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- எந்வொரு மாநிலத்திற்கும் தண்ணிர் வழங்க பஞ்சாபிடம் தண்ணீர் இல்லை.
- ஹரியானாவிற்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் 4,000 கனஅடி தண்ணீர் மனிதாபிமான அடிப்படையில் தொடரும்.
பஞ்சாப் மாநிலம் அண்டை மாநிலமான ஹரியானாவுக்கு தண்ணீர் வழங்கி வருகிறது. இரு மாநிலங்களுக்கும் இடையில் தண்ணீர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் உள்ளது. ஏப்ரல மாதம் குடிநீர் தேவைக்காக ஹரியானா மாநிலம் பஞ்சாபிடம் கூடுதலாக நீர் திறந்து விட வலியுறுத்தியது. ஆனால் பஞ்சாப் தங்களிடம் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தை அரியானாவும், மத்திய அரசும் கூட்டி பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியான மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் பஞ்சாப் அரசு கடுங்கோபம் அடைந்தது. அத்துடன் ஹரியானாவிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றுள்ளது.
சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பரிந்தர் குமார் கோயல் இந்த தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் ஹரியானா அனைத்து பங்கீடு நீரையும் பயன்படுத்தியுள்ளது. தற்போது பாஜக பஞ்சாப் மாநில தண்ணீரை ஹரியானாவுக்கு வழங்க விரும்புகிறது.
கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க பஞ்சாப் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. 2021 வரை வெறும் 22 சதவீது பஞ்சாப் நிலை நிலங்கள் கால்வாய் தண்ணீரை பெற்று வந்தன. ஆனால் இன்று, 60 சதவீத விவசாய நிலங்கள் கால்வாய் தண்ணீரை வெற்றி பெற்று வருகிறது.
பஞ்சாபின் ஒரு சொட்டு நீர் கூட பஞ்சாப் மாநிலத்திற்கு மிகவும் மதிப்பிற்குரியதாகியுள்ளது. எந்வொரு மாநிலத்திற்கும் தண்ணிர் வழங்க பஞ்சாபிடம் தண்ணீர் இல்லை.
ஹரியானநா அரசு கடந்த மாதம் 6ஆம் தேதி குடிநீர் வசதிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அதன்படி 4 ஆயிரம் கனஅடி நீர் திறந்த விடப்பட்டது. தாகம் எடுத்த எவருக்கும் தண்ணீர் கொடுப்பது ஒரு சிறந்த நற்பண்பு என்று நமது குருமார்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்.
ஹரியானாவில் மொத்தம் 3 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் மற்றும் மனித தேவைகளுக்காக 1700 கனஅடி நீர் போதுமானது. தற்போது திடீரென ஹரியானா 8500 கனஅடி நீர் தேவை எனச் சொல்கிறது. பஞ்சாப் அதன் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் தண்ணீர் இல்லை.
எனவே, பாஜக அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் சட்டவிரோதமான முறையில் பிபிஎம்பி கூட்டத்தை வலுக்கட்டாயமாகக் கூட்டி, பஞ்சாப் தனது சொந்தப் பங்கிலிருந்து ஹரியானாவிற்கு தனது தண்ணீரை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
ஹரியானாவிற்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் 4,000 கனஅடி தண்ணீர் மனிதாபிமான அடிப்படையில் தொடரும், ஆனால் ஒரு சொட்டு கூட கூடுதலாக வழங்கப்படாது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.






