என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல்: இந்தியா பதிலடி- ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஏவுகணை, டிரோன் பாகங்கள்..!
    X

    பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல்: இந்தியா பதிலடி- ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஏவுகணை, டிரோன் பாகங்கள்..!

    • பாகிஸ்தான் நேற்றிரவு குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்கதல் நடத்தின.
    • பாகிஸ்தான் டிரோன்களை இந்தியா தாக்கி அழித்த நிலயைில், ஆங்காங்கே பாகங்கள் சிதறிக்கிடக்கின்றன.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியா எல்லையில் உள்ள பகுதிகளை தாக்கி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை தாக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வானிலேயே இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்து வருகிறது.

    பாகிஸ்தானின் டிரோன் ஒன்று நேற்றிரவு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை தாக்கியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உயரதிகாரி ஒருவர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆங்காங்கே ஏவுகணை மற்றும் டிரோன்களின் பாகங்கள் மற்றும் வெடிமருந்துகள் பயன்படுப்படும் உலோகப் பாகங்கள் சிதறி கிடக்கின்றன. இது பஞ்சாப் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

    குர்தாஸ்பூரில் உள்ள சிச்ரா கிராமத்தில் உளள் வயல்வெளி பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று திடீரென ஏற்பட்டுள்ளது. நேற்று இந்த பக்கத்தில் வெடிக்கும் சத்தம் கேட்டது. ஒருவேளை பாகிஸ்தான் ஏவுகணை விழுந்து பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளது.

    மேலும், அப்பகுதி இன்ஸ்பெக்டர் ஜஸ்விந்தே பால் சிங், "இங்கு வெடிச்சத்தம் காலை 4.45 மணிக்கு கேட்டது. இதனால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. ராணுவ அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகாரிகளுடன் இங்கு வந்தனர். மக்கள் வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்" எனத் தெரிவித்தார்.

    Next Story
    ×