என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு என வட இந்தியாவில் இயங்கி வருகிறது.
    • கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார்.

    பாபா சித்திக் 

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி முக்கியப் புள்ளியான பாபா சித்திக் நேற்று முன்தினம் [சனிக்கிழமை] சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வரும் இந்த கும்பல் சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக்கின் கதிதான் ஏற்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

    அடுத்த தாவூத் 

     மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு அடுத்தபடியாக லாரன்ஸ் பிஷ்னோய் தாதா கும்பல் எந்த சட்டத்துக்கும் பயப்படாமல் துணிச்சலாக இயங்கி வருவதையே பாபா சித்திக் கொலை காட்டுகிறது. நாட்டில் உயர்மட்டத்தில் நடக்கும் பல்வேறு குற்றச்செயல்களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயர் அடிபடுவதை சாதரணமாக பார்க்கலாம். பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே பொறுப்பு.

    நெட்வொர்க் 

    இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு என வட இந்தியாவில் மிகபெரிய தாதா கும்பலாக லாரன்ஸ் பிஷ்னோய் இயங்கி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பான [என்ஐஏ] தெவிர்த்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் உட்பட இந்த கும்பலில் உள்ள 700 பேரில் 300 பேர் பஞ்சாபை சேர்த்தவர்கள் என்றும் என்ஐஏ தற்போது உபா சட்டத்தின்கீழ் வெளியிடுயுள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

     

    லாரன்ஸ் 

    31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி [Dhattaranwali] கிராமத்தில் வசதி படைத்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், இவரின் பிஸ்னாய் சமுதாயம் பஞ்சாப் , அரியானா, மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

    சண்டிகரில் கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலை மறைப்பாக வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடத்தொடங்குள்ளார் லாரன்ஸ். 2010 ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அதுவும் ஓரூ கொலை முயற்சி வழக்கு. இவ்வாறு குற்றச்செயலுக்காக ஒரு குவளை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் அதை விரிவுபடுத்தியுள்ளார். 

    ராக்கி  

    இதற்கு ராக்கி எனப்படும் ஜஸ்விந்தர் சிங் நெருங்கிய கூட்டாளியும் பஞ்சாப் பசில்காவை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியின் உதவியும் முக்கிய காரணம். இந்த ராக்கி கடந்த 2020 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறிவைத்து இயங்கும் லாரன்ஸ் பிஸ்னாய் கும்பல் மற்ற கும்பல்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள நெட்வொர்க்களுடனும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புள்ளதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு படை கூறுகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக என்ஐஏ கூறுகிறது.

     

    சிறை 

    ஆள் கடத்தல், காண்டிராக்ட் கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் சிறைகளில் இருந்தும்கூட நெட்வொர்க்கிங் மூலம் செயல்பட்டவரே இருக்கின்றனர் கடந்த 2015 இல் லாரன்ஸ் பிஷ்னோய் கைதுசெய்யப்பட்டு தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் உள்ளார். இருந்தபோதும் அவரின் கும்பலின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடப்பதன்மூலம் அந்த கும்பல் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை யூகிக்க முடியும்.

    சல்மான் கான் பகை 

    கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஸ்னாய் கொலை மிரட்டல் விடுத்தார். அதன்மூலமே அவர் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார். 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கியதை அடுத்து இந்த கொலை மிரட்டல் வந்தது. இந்து மதத்தின் பசு புனித விளங்காக உள்ளதுபோல் லாரன்ஸின் பிஷ்னோய் சமூகத்தில் கரும்புலி மான் என்பது புனித விலங்காகும்.

     

    சல்மான் கான் அதை வேட்டையாடினர் என்பதனால் லாரன்ஸ் அவருடன் பகையை வளர்த்துக்கொண்டார். அதுமுதல் பல்வேறு சமயங்களில் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறிவைத்து வருகிறது.சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் தற்போது பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    • உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதய தமனிகளில் உள்ள அடைப்பை கண்டறியும் சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், இன்று காலை, "உத்தவ் தாக்கரே, சர் ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உங்கள் ஆசீர்வாதத்துடன் அவர் நன்றாக இருக்கிறார். மேலும் அவர் பணியாற்றவும் மக்களுக்கு சேவை செய்யவும் தயாராக இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
    • பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

    மும்பையில் மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று முன்தினம் இரவு 3 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    கொரானா காலத்தில் இவர் செய்த மருத்துவ உதவிகள் காரணமாக இவர் மிகவும் புகழ் பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித்பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    பாபா சித்திக்கை அரசியல் முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரை சுட்டுக் கொன்றதாக பிரபல தாதா கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்று இருக்கிறது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பாபா சித்திக் தொடர்பு வைத்தி ருந்ததால் அவரை சுட்டுக் கொன்றதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது.

    மும்பை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற 2 பேர் பிடிபட்டனர். அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்மெயில் பல்ஜித்சிங், தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் என்று தெரிய வந்தது.

    இவர்களில் குர்மெயில் பல்ஜித்சிங்கை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து இன்று காலை முதல் விசாரித்து வருகிறார்கள்.

    மற்றொரு குற்றவாளியான தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் சிறுவன் என்று அவரது வக்கீல் கோர்ட்டில் வாதிட்டார். இதையடுத்து தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் உடல் எலும்பு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தர்மராஜ் சிறுவன் அல்ல என்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான பிரவீண் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முக்கிய குற்றவாளிகளில் மற்றொருவரான சிவக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
    • அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.

    • படுகொலை சம்பவத்திற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
    • உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

    பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது மட்டுமல்லாமல், நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் சித்திக், கடந்த சனிக்கிழமை இரவு பாந்த்ரா கிழக்கில் உள்ள அவரது மகனும், எம்.எல்.ஏ.-வுமான ஜீஷன் சித்திக் அலுவலகத்தின் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலை சம்பவத்திற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.

    இது தொடர்பாக பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்புடைய ஷுபு லோங்கர் என்ற நபர் முகநூலில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். லோங்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நிலையில், அவரது சகோதரர் பிரவின் லோங்கர் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரையும், காவல் துறையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைது செய்தனர்.

    லோங்கரின் முகநூல் பதிவில், "இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டிருந்தது, சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தான் சித்திக் கொல்லப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பான பதிவில், "எங்களுக்கு யாருடனும் பகை இல்லை, ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத் கும்பலுக்கு யார் உதவினாலும், உங்கள் கணக்குகளை ஒழுங்காக வைத்திருங்கள்," என்று லோங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக நடிகர் சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் இடையே நிலவி வந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததில் சித்திக் மிகப்பெரிய பங்காற்றினார். இது தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு சித்திக் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்தில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் கலந்து கொண்டனர். இதில் வைத்தே இருவர் இடையே நிலவி வந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.

    கடந்த ஆண்டு முதல் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததற்காக குறைந்தது இரண்டு பிரபலங்கள் பிஷ்னோய் கும்பலால் தாக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பாபா சித்திக் மறைவை அடுத்து நடிகர் சல்மான் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    தற்போதைய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை தெற்கில் உள்ள மலபார் ஹில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
    • பாபா சித்திக்கின் இழப்பை அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

    பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்ட அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்பை பாதியிலேயே உடனடியாக ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

    அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்டதில் இருந்தே சல்மான் கானால் தூங்க முடியவில்லை.

    இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் பாபா சித்திக் வீட்டிற்கு சென்ற சல்மான் கான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்களில் கண்ணீருடன் மிகவும் சோகமான முகத்தோடு சல்மான் கான் காணப்பட்டார்.


    • பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
    • பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

    இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இருவரும் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ராஜேஷ் காஷ்யப் தனக்கு வயது 17 என்று தெரிவித்தார். இதனையடுத்து காஷ்யப்பின் உண்மையான வயதை அறிய அவருக்கு எலும்பியல் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பல்ஜித் சிங்கிற்கு அக்டோபர் 21 ஆம் தேதி போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.

    இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
    • பாபா சித்திக்கின் மரணம் அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

    பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்ட அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்பை பாதியிலேயே உடனடியாக ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

    அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்டதில் இருந்தே சல்மான் கானால் தூங்க முடியவில்லை.

    பாபா சித்திக் மரணத்தால் சல்மானின் குடும்ப உறுப்பினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாபா சித்திக் சல்மான் கானின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்துள்ளார்.

    பாபா சித்திக்கின் இறுதி சடங்குகள் குறித்த விவரங்களை அவரது குடும்பத்தினரிடம் சல்மான் கான் கேட்டறிந்தார். சல்மான் கான் அடுத்த சில நாட்களுக்கு தனது தனிப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    • கொலை வழக்கை விசாரிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை கைது செய்துள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் கூறியதாவது:-

    எங்களது நண்பரான பாபா சித்திக்கை இழந்ததில் நாங்கள் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றோம். இந்த விஷயத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மற்ற மாநிலங்களுக்கு இந்த குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    பாரதிய ஜனதா எம்.பி. பிரவீன் கண்டேல்வால் கூறும்போது, 'இந்த கொலை சம்பவம் வருத்தம் அளிக்கிறது'. மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை கைது செய்துள்ளது. இதை விட வேறு யாரும் வேகமாக செயல்பட முடியாது. ராகுல் காந்தியும், வேறு சிலரும் இது போன்ற சம்பவங்களில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கட்சி மாறினார்
    • பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலைக்கு மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    பாபா சித்திக் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதை இந்த கொடூர சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.
    • ஷாருக்- சல்மான் இடையே சண்டை ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். நேற்றைய தினம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.

    66 வயதான பாபா சித்திக் மகாராஷ்டிர அரசியலில் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக இருந்து வந்தவர். தனது இளமைக் காலம் முதல் 48 ஆண்டுகாலமாக காங்கிரசில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு மாறினார். 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி களிலும் இருந்துள்ளார்.

    காங்கிரசில் தன்னை சாப்பாட்டில் வாசனைக்காக போடும் இலையைப் போல அலட்சியமாக நடத்தியத்தாக அப்போது அவர் தெரிவித்திருந்தார். இவரது மகன் ஜீஸ்ஹான் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது அலுவலகத்துக்கு வெளியில் வைத்தே சித்திக் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜீஸ்ஹான் எம்.எல்.ஏ வாக இருக்கும் பாந்த்ரா தொகுதியில் சித்திக் பலகாலமாக எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் ஆவார்.

     

    கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்துவைத்ததால் சித்திக் பெரிதும் பேசப்பட்ட தலைவராக உள்ளார். அந்த சமயத்தில் ஷாருக் சல்மான் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது. எனவே வருடந்தோறும் பிரம்மாண்டமாக இஃப்தார் விருந்து நடந்தும் சித்திக் அந்த வருடம் ஷாருக் சல்மான் இருவரையும் விருதுக்கு அழைத்தார்.

     

    ஷாருக்கை சல்மான் கானின் தந்தை சலீம் கான் அருகே அமரவைத்தார். அதன்பின் சல்மான் கானை அவர்களருகில் அனுப்பி மனஸ்தாபத்தைத் தீர்த்து வைத்தார். இவ்வாறு மும்பையில் முக்கிய புள்ளியாக வளம் வந்த சித்திக் மகாராஷ்டிர தேர்தல் நெருக்கும் சமயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறனர்.

    • மும்பை சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டது.
    • அங்கு நடந்த பேரணியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கலந்து கொண்டார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் தசரா திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த பேரணியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    அரியானா தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் காலையில் காங்கிரஸ் 72 இடங்களைப் பெற்றதாகக் காட்டியது,

    ஆனால் பிற்பகலில், பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்தது. இந்த அதிசயம் எப்படி நடந்தது?

    இது இவிஎம் மோசடி மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை. ஆனால் மகாராஷ்டிரா தேர்தலில் இது நிச்சயம் நடக்காது என உறுதிபட தெரிவித்தார்.

    ×