என் மலர்
நீங்கள் தேடியது "டூத் பேஸ்ட்"
- 40 வயதான பெண் ஒருவர் 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கியுள்ளார்.
- இதனையடுத்து அப்பெண் டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 40 வயதான பெண் ஒருவர் பல் துலக்கும்போது எதிர்பாராத விதமாக 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கியுள்ளார்.
இதனையடுத்து அப்பெண் டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அப்பெண்ணின் வயிற்றில் எந்த காயமும் ஏற்படாமல் டூத் பிரஷை வெற்றிகரமாக அகற்றி அவரின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
உலகளவில் இதுவரை 30க்கும் குறைவான நபர்களே இவ்வாறு டூத் பிரஷை விழுங்கியுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






