என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
    • லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

    நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

    இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.

    அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்.

    சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

    • சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது.
    • சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்

    பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சுகா என்ற நபரை நவி மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது என்று நவிமும்பை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் 5 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார் என்றும் சல்மானை கொலை செய்ய குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரை நியமித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சல்மானை கொலை செய்த பின்பு கொலைகாரர்கள் கன்னியாகுமரியில் ஒன்றுகூடி இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 - 70 பேரை களமிறக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி பான்வேல் காவல்நிலையத்தில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.

    கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் ஒருவர் பெயர் நிர்பன் ஃபஸ்லுதீன் (33) என்றும் இன்னொரு நபர் 17 வயதான சிறுவன் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சிறுவன் கைது செய்யப்பட்ட ஃபஸ்லுதீனின் எக்ஸ் கணக்கை ஹேக் செய்து சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் சிறார் சிறைக்கு அடைக்கப்பட்டான். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ஃபஸ்லுதீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
    • மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தால், தேர்தலுக்குப்பின் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இரண்டு கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துதான் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பட்நாவிஸ், அஜித் பவார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மகாயுதி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பட்நாவிஸ் "முதல் மந்திரி இங்கே அமர்ந்து இருக்கிறார். உங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள். முதலில் உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவிக்கவும். உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவியுங்கள் என சரத் பவாரிடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.

    ஏக்நாத் ஷிண்டே "உயர்ந்த பதவியை பெறுவதற்கு யாரும் ஆசைப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் அரசாங்கம் செய்த பணிகள் எங்கள் முகம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
    • ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மும்பை:

    மும்பை அந்தேரி மேற்கில் லோசந்த்வாலா வளாகம் உள்ளது. இங்குள்ள ரியல் பேலஸ் கட்டிடம் 14 மாடிகளை கொண்டது.

    அடுக்குமாடி குடியிருப்பான இந்த கட்டிடத்தின் 10-வது மாடியில் இன்று காலை 8.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தீயில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    மூத்த குடிமக்கள் தம்பதியான சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் பெலுபேட்டா (42) ஆகிய 3 பேரும் தீயில் கருகி பலியானார்கள். 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

    ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
    • அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை 25 நாட்களாக இவர்கள் நோட்டம் விட்டுள்ளனர்.

    கான்டிராக்ட் - பாபா சித்திக் 

    துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கைதானவர்கள், என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, பாபா சித்திக்கை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக புனேவைச் சேர்ந்த பிரவின் லொங்கார் என்பவரும் மூன்றாவதாக கைது செய்யப்பட்டார். 

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை அன்று மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையை பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கும்பல் கான்டிராக்ட் கில்லர்கள்  மூலம் நடத்தியதாக நம்பப்படுகிறது. 

    பாலிவுட் நடிகர் சல்மான் கானை குறிவைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அவருக்கு உதவி செய்ததாகப் பாபா சித்திக்கை கொன்றுள்ளது. சல்மானுக்கு உதவும் அனைவருக்கும் இதே கதிதான் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.

     

    கில்லர்ஸ் 

    இதில் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட நால்வரின் பாபா சித்திக்கை சுட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்மைல் பல்ஜித் சிங் (23), மற்றும்அரியானாவைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொலை நடந்த அன்றைய தினம் பாபா சித்திக் , பாந்திரா தொகுதி எம்.எல்.ஏ வான ஜீஸ்கான் உடைய அலுவலகத்தில் வெளியே வந்துகொண்டிருந்தபோது காவலர்களை திசை திருப்ப பட்டாசு வெடித்துள்ளனர்.

    யூடியூப் பள்ளி 

    கொலையாளிகள் 6 ரவுண்டுக்குள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பாபா சித்திக் மீது பட்டுள்ளது. மற்றொரு குண்டு அருகில் இருந்தவரரின் காலில் பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 7.62 mm துப்பாக்கி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலையாளிகளிடம் நடந்து வரும் விசாரணையில் உண்மை ஒவ்வொன்றாக வெளியே வந்த வண்ணம் உள்ளது.

    இந்த கொலையை கச்சிதாக செய்துமுடிக்க கொலையாளிகள் குர்மைல் சிங் மற்றும் தர்மராஜ் இருவரும் யூடியூப் வீடியோக்களை பார்த்து துப்பாக்கி சுட கற்றுக்கொண்டதாக விசாரணையில் வந்துள்ளது. மேகசின் இல்லாத துப்பாக்கியை வைத்து பல நாட்களாக பயிற்சி எடுத்துவந்துள்ளனர். கொலையை நிகழ்த்திய கும்பலுக்கு பாபா சித்திக்கை அடையாளம் காட்டுவ தற்காக அவரது புகைப் படத்தை வழங்கி உள்ளனர். வாட்சப் இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.

     

    டீலர் 

    பாபா சித்திக் கொலை செய்யும் அந்த நாளுக்கு முன்னதாகவே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை 25 நாட்களாக இவர்கள் நோட்டம் விட்டுள்ளனர். இஅவ்ர்களைத் தவிர உ.பி.யை சேர்ந்த ஹரிஷ்குமார் பாலாக்ராம் என்றனவர் இவர்களுக்கு கொலைக்கான பொருளாதார உதவிகளை அளித்து கொலைக்கான மூளையாக செயல்பட்டதாக கைது செய்யவிட்டார். இவர் புனேவில் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் டீலர் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
    • ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா' இருந்த வீடியோ வைரல்

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    இதனிடையே, ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் 'கோவா' உயிரிழந்து விட்டதாக வாட்சப்பில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அந்த செய்தியில், ரத்தன் டாடா உயிரிழந்து 3 நாட்களுக்கு பிறகு அவரது வளர்ப்பு நாய் கோவா உயிரிழந்து விட்டது. மனிதர்களை விட நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் விசுவாசம் கொண்டவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் உயிரிழந்ததாக பரவும் செய்தி பொய்யானது என்று மும்பை காவல் ஆய்வாளர் சுதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


    • மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற இன்னும் 35 நாட்களே உள்ளன.
    • மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு தோல்வியடையும்.

    மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன.

    இந்நிலையில், சட்டசபை தேர்தல் தேதியை தாமதமாக வெளியிட்டு ஆளும் பாஜக கூட்டணி அரசிற்கு தேர்தல் ஆணையம் உதவி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், "அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரச்சாரத்துக்கும் குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு முன்பாகவே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும். ஆனால் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற இன்னும் 35 நாட்களே உள்ளன. இது வழக்கத்திற்கு மாறானது மற்றும் தேர்தல் பிரசாரம் செய்ய எங்களுக்கு குறைவான நாட்களே உள்ளது.

    தேர்தல் தேதி தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அந்த இடைப்பட்ட காலத்தில் பாஜக கூட்டணி அரசாங்கம் பலவேறு திட்டங்களை அறிவித்து அரசு கஜானாவை காலி செய்து விட்டது" என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர பவார்) மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல், "மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலை 5 கட்டங்களாக தேர்தல் ஆணையம் நடத்தியது. ஆனால் தற்போது ஒரே கட்டமாக சட்டசபைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு தோல்வியடையும்.

    சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல நலத்திட்டங்களை அறிவிக்க மாநில அரசுக்கு போதுமான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பல எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • அஜித் பவார் கட்சி தலைவர்கள் சரத் பவார் கட்சியில் இணைந்தனர்.
    • வயதை சுட்டிக்காட்டியபோது, வயது பற்றி கவலைப்பட வேண்டாம் என சரத் பவார் விளக்கம்.

    தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்) கட்சி தலைவர் சரத் பவார், தன்னுடைய வயது என்னவாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிரா மாநிலத்தை சரியான வழியில் கொண்டும் வரும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராம்ராஜே நாய்க் நிம்பால்கரின் சகோதரர் சஞ்சீவ் ராஜே நாய்க் நிம்பால்கர், பால்டன் தொகுதி எம்.எல்.ஏ. தீபக் சவான் ஆகியோர் சரத் பவார் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பேசும்போது சரத் பவார் கூறியதாவது:-

    சில இளைஞர்கள் தங்களுடைய கையில் பேனர்கள் ஏந்தியதை பார்த்தேன். அதில் என்னுடைய படம் இருந்தது. அதில் 84 வயதான நபர் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீங்கள் வயதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், 84 வயதாக இருந்தாலும் சரி அல்லது 90 வயதாக இருந்தாலும் சரி. இந்த வயதான மனிதன் நிறுத்தமாட்டார். மாநிலத்தை மீண்டும் சரியான வழியில் கொண்டு வரும்வரை நான் ஓயமாட்டேன். உறுதியாக உங்களுடைய உதவியை பெறுவேன்.

    சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சேதமடைந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் ஊழலில் ஈடுபடுவது அவர்களின் கொள்கை. அதனால் அவர்கள் கையிலிருந்து அதிகாரத்தைப் பறிப்பது உங்களுடைய மற்றும் என்னுடைய பொறுப்பாகும்.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண இருக்கின்றன.

    • தசரா நாளில் புதிய கார் ஒன்றை ஷோரூமில் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா பூங்கா அருகே வந்துகொண்டிருந்தார்.
    • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாகப் படுத்துக்கொண்டார் .

    மும்பையில் சிறிய பிரச்சனைக்காக இளைஞன் பெற்றோரின் கண்முன்னரே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள மாலத் பகுதி சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஆகாஷ் என்ற 28 வயது இளைஞர் தசரா நாளில் புதிய கார் ஒன்றை ஷோரூமில் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா பூங்கா அருகே வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆகாஷின் காரை ஓவர்டேக் செய்ய முயன்று லேசாக மோதியுள்ளது. இதனால் ஆகாஷுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆட்டோ ஓட்டுனரின் சகாக்கள் அந்த இடத்தில் கூடிய நிலையில் ஆகாஷ் அவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். ஆகாஷை அந்த கும்பல் கீழே தள்ளி அடித்தும் உதைத்துள்ளது. தடுக்க முயன்ற ஆகாஷின் தந்தையும் தாக்கப்பட்டார்.

    தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாகப் படுத்துக்கொண்டார் . ஆனாலும் அடி உதை நின்றபாடில்லை. கடைசியாக ஆகாஷை உயிர்போகும் அளவுக்கு அடித்த பின்னரே அந்த கும்பல் ஓய்ந்துள்ளது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகாஷ் மீது நடந்த தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டார்
    • சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்

    பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை பார்த்த வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதால் அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஒருவன் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசிச் சென்றுள்ளான். சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்திய பின்னர் குற்றவாளி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

    • சல்மானுக்கு உதவும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாபா சித்திக் கதிதான் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வேட்டையாடியது மட்டுமில்லாமல் அதை சமைத்து சாப்பிட்டுள்ளீர்கள்.

    மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும் என்சிபியை சேர்ந்தவருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை பல காலங்களாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் சல்மானுக்கு உதவும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாபா சித்திக் கதிதான் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்துக்கு சினிமா ஷூட்டிங் சென்ற சல்மான் கான் அங்கு கரும்புலி வகை மான்களை வேட்டையாடினார். இதுதொடர்பாக அவர் மீது பலவருடங்களாக வழக்கு நடந்தது. இதற்கிடையே பஞ்சாப். அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக வாழும் பிஷ்னோய் சமூக மக்கள் கரும்புலி மான்களை புனிதமான விலங்காக பார்ப்பவர்கள் ஆவர். எனவே அந்த சமூகத்தை சேர்ந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கானின் வீட்டின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது பாபா சித்திக் கொலைக்கு பின்னர் நிலைமை மோசமாகி வரும் நிலையில் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கை சுட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக சல்மான் கானுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பில், அன்புள்ள சல்மான் கான், பிஷ்னோய் சமூகத்தினர் கரும்புலி மானை கடவுளாக வழிபடுகின்றனர். நீங்கள் அதை வேட்டையாடியது மட்டுமில்லாமல் அதை சமைத்து சாப்பிட்டுள்ளீர்கள்.

     

    அவர்களது சமூகம் உங்கள் மேல் பல காலமாக கோபத்தில் உள்ளது. எனவே எனது அறிவுரையை ஏற்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அதற்கான பரிகாரத்தைச் செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கிடையே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலையே அளித்துவிடுவேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மேடையில் சூளுரைத்தது குறிப்பிடத்தக்கது. 

    ×