மணிப்பூர் வன்முறை குறித்து அமித் ஷா ஆலோசனை

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
மணிப்பூர் வன்முறை குறித்து அமித் ஷா ஆலோசனை
Published on

மும்பை:

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். அவர் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள், ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த உடனே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நீண்ட கால திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com