என் மலர்
மகாராஷ்டிரா
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்.
- இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நாக்பூர்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஜோடி அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியில், இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஹர்ஷித் ராணா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.
சமீபத்தில் புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதேபோல், நேற்று நடந்த நாக்பூர் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
- வீடியோவில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் மீன் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் ஆட்டோ டிரைவரின் ஆர்வத்தை பலரும் பாராட்டினர்.
நகர பகுதிகள் முதல் கிராமப்பகுதிகள் வரை போக்குவரத்துக்கு ஆட்டோ சவாரியை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சில ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரங்கள் செய்வது, ஆட்டோவிலேயே ஏராளமான புத்தகங்கள் வைத்து நூலகம் போன்று அமைப்பது போன்ற செயல்களால் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புனேவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் மீன்தொட்டி மற்றும் ஸ்பீக்கர்கள், டிஸ்கோ விளக்குகளால் அலங்காரம் செய்துள்ள காட்சிகள் உள்ளது.
வீடியோவில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் மீன் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது. அதில் வண்ண மீன்கள் நீந்தி செல்கின்றன. ஆட்டோ முழுவதும் டிஸ்கோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீன் தொட்டிகளுக்கு மேல் சிறிய ஸ்பீக்கர்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில் ஆட்டோ டிரைவரின் ஆர்வத்தை பலரும் பாராட்டினர்.
- அந்தப் பெண் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
- அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி மூலம் கண்டறியப்பட்டது.
சமீபத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு 'கருவில் கரு' இருப்பது கண்டறியப்பட்டது.
புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண், கடந்த மாதம் வழக்கமான பரிசோதனையின் ஒரு பகுதியாக சோனோகிராபிக்கு உட்படுத்தப்பட்டபோது, அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்குள் மற்றொரு குறைபட்ட கரு வளரும் அரிய பிறவி கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி புல்தானா மகளிர் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து, அவரும் குழந்தையும் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியது அமராவதி பிரதேச மருத்துவமனையில் டாக்டர் உஷா கஜ்பியேவின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்கள் ஆன அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கஜ்பியே, மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் கைகள் மற்றும் கால்களுடன் இரண்டு [இரட்டைக்] குழந்தைகள்[கரு] இருந்ததாக கூறினார். அறுவை சிகிச்சையின் போது கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன, மேலும் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி செய்த புல்தானா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரசாத் அகர்வால் பேசுகையில், 'கருவில் கரு' என்பது மிகவும் அரிதான மருத்துவ நிலைகளில் ஒன்றாகும்.
இது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் இதுபோன்று 200 பேருக்கு மட்டுமே இருந்துள்ளது. இந்தியாவில் 10-15 பேருக்கு மட்டுமே இந்நிலை உருவானது என்று தெரிவித்தார்.

- இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.
- இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்த நிலையில், அடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.
டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஒரு நாள் போட்டிகளில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் அதிக நேரம் செலவிட முடியும். இது ஒரு நீண்ட வடிவம், ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு அல்ல. ஆனால் இது ஒரு சிறந்த முடிவு என நான் நினைக்கிறேன்.
இங்கிலாந்தின் பார்வையில் இது ஒரு ஏமாற்றமான தொடர். நான்காவது டி20 போட்டியில் துபேவுக்கு பதிலாக மாற்றீடு சரியாக செய்யப்பட்டிருந்தால் இங்கிலாந்து அங்கு வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். வான்கடே போட்டியில் 2-2 என்ற கணக்கு வந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என தெரிவித்தார்.
- அனைத்து அரசு அதிகாரிகளும் மராத்தியில் தான் பேச வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அரசின் உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மகாராஷ்டிராவில் அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் உரையாடல்கள் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்கள் மற்றும் மராத்தி மொழி தெரியாதவர்களை தவிர மற்ற அனைவருடனும் அனைத்து அரசு அதிகாரிகளும் மராத்தியில் தான் பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த விதி அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை ஊக்குவித்தல் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு தெரிவித்துள்ளது.
- மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 77,186.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்று காலை சென்செக்ஸ் 77,687 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகம் சுமார் 500 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. அதன்பின் உயர்வதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 11 மணியவில் 77,402.37 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இன்றைய குறைந்தபட்ச வர்த்தகமாகும்.
அதன்பின் ஜெட்வேகத்தில் வர்த்தகம் உயர்ந்துகொண்டே சென்றது. இறுதியாக சென்செக்ஸ் 78,583.81 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து.
அதேபோல் இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் 378.20 புள்ளிகள் உயர்ந்தது. நேற்று 23,361.05 புள்ளிகளில் இந்திய பங்குச் சந்தை நிறைவடைந்தது. இன்று காலை 23,509.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 248 புள்ளிகளில் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று குறைந்த பட்சமாக 23423.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23762.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
டொனால்டு டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு உத்தரவு காரணமாக நேற்று தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிவை சந்தித்தன. பின்னர் மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரியை டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதனால் தேசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தாலும், மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
- அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
- இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார்
மகாராஷ்டிராவில், 300 ரூபாய் மதிப்புள்ள டி-சர்ட்டால் ஏற்பட்ட தகராறில், சகோதரர்கள் இருவர் தங்கள் நண்பரைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாக்பூரில் உள்ள சாந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
ஆனால் அது தனக்கு பொருந்தவில்லை என கூறி தனது நண்பன் சுபம் -இடம் நேற்று முன் தினம் [ஞாயிற்றுக்கிழமை] விற்க முயன்றுள்ளார். ஆனால் ரூ. 300 கொடுத்து அதை சுபம் வாங்க மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் டி-சர்ட்டுக்கான ரூ.300 பணத்தை அக்ஷய் மீது சுபம் தூக்கி வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய் மற்றும் அவரது அண்ணன் இருவரும் சேர்ந்து சுபம் உடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு சகோதரர்களும் குடிபோதையில் இருந்ததை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இருவருக்கும் குற்றப் பின்னணி இருப்பதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுபமின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- 4 நாட்களில் சுங்கத்துறையினரால் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- கஞ்சாவை கடத்தி வந்த 5 பயணிகளை கைது செய்தனர்.
மும்பை:
வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு அதிகளவில் தங்கம், போதைப்பொருள் விமானம் மூலம் கடத்தி வரப்படுகிறது. இதை தடுக்க சுங்கத்துறையினர் விமான நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மும்பை விமான நிலையத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான 4 நாட்களில் சுங்கத்துறையினரால் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்த விமான பயணிகள், அவர்களின் உடைமைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது இருவேறு சம்பவங்களில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த 5 பயணிகளை கைது செய்தனர்.
இதேபோல ரியாத், மஸ்கட், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.93.8 லட்சம் வைரம், ரூ.1½ கோடி தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
- இங்கிலாந்து அணி 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.

248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் இங்கிலாந்து அணி 10.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.
- முதலில் ஆடிய இந்தியா 247 ரன்களைக் குவித்துள்ளது.
- அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.
அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது.
சூர்யகுமார் யாதவ் 2 ரன்னும், ஷிவம் துபே 30 ரன்னும், பாண்ட்யா, ரிங்கு சிங் தலா 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அபிஷேக் சர்மா தனி ஆளாக இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 54 பந்தில் 13 சிக்சர், 7பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.
அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் மோதும் 5வது டி20 போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஷமி இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணி விவரம் வருமாறு:
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:
பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட், பிரைடன் கார்ஸ்.






