என் மலர்
மத்தியப்பிரதேசம்
- 21-ம் நூற்றாண்டில் நீர் வளங்களை நன்றாக நிர்வகிக்கும் நாடுகள் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.
- இரு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கென்-பெட்வா ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது:-
* 21-ம் நூற்றாண்டில் நீர் வளங்களை நன்றாக நிர்வகிக்கும் நாடுகள் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.
* இரு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும்.
* கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டம் பண்டல்கண்ட் பகுதியில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கும்.
* நாட்டில் நீர்வள மேம்பாட்டிற்கான பெருமை பி.ஆர். அம்பேத்கரையே சாரும். காங்கிரஸ் இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைத்தது.
* ஆட்சியும், காங்கிரசும் ஒன்றாக இணைந்து செல்லவில்லை.
* அடிக்கல் நாட்டிய பிறகு கூடு, காங்கிரஸ் அரசு 35 முதல் 40 ஆண்டுகள் வரை திட்டத்தை தாமதப்படுத்தியது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அத்துடன் கஜுராஹோவில் இருந்து கந்த்வாரா மாவட்டத்தில் ஓம்கரேஷ்வர் பிளோட்டிங் சோலார் திட்டத்தை திறந்து வைத்தார். மறைந்த பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
- லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று போபாலில் லோக் ஆயுக்தா சோதனையின் போது, போக்குவரத்துத் துறையின் முன்னாள் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக 200 ரூபாய் நோட்டுகள் மற்றும் 40 கிலோ வெள்ளி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, போபால் அரேரா காலனியில் வசிக்கும் சவுரப் சர்மா என்பவர் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இவர் ம.பி. சாலை போக்குவரத்துத் துறை போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். கடந்த ஆண்டுதான் விஆர்எஸ் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
- நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது ஏராளமான நகைகள், முக்கிய ஆவணங்கள், மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டது. சோதனை நடந்த நிறுவனங்களின் வங்கி லாக்கரை திறந்து சோதனை செய்த போது அதில் இருந்த ரூ. 5 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலைநகர் போபால் அருகே மண்டோரா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாகனம் அனாதையாக நின்று கொண்டிருந்தது.
அந்த வாகனம் மீது சந்தேகம் அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் ரொக்கப்பணம், மற்றும் 52 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம்- நகை யாருக்கு சொந்தமானது என தெரியவில்லை. வருமான வரி சோதனைக்கு பயந்து அந்த ரூ. 10 கோடி பணம் மற்றும் 52 கிலோ நகைகளை வாகனத்தில் மறைத்து வைத்து அதிக நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நிறுத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டாக்டர்களும், தொழில் நுட்ப ஊழியர்களும் அங்கு உடனடியாக விரைந்து சென்றனர்.
- குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுவாசப்பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து, ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படும் 10 முதல் 15 அடி நீளமுள்ள செம்பு குழாய்களை துண்டித்து திருடிச்சென்றனர். செம்புக்குழாய் துண்டிக்கப்பட்டதால், செயற்கை சுவாசம் தடைப்பட்டது. இதனால் 20 பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆக்சிஜன் தடைப்பட்ட சில நொடிகளில், அந்த வார்டில் இருந்து அலாரம் ஒலித்தது. இதையடுத்து டாக்டர்களும், தொழில் நுட்ப ஊழியர்களும் அங்கு உடனடியாக விரைந்து சென்றனர். குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
அதேநேரம் தொழில்நுட்ப உதவியாளர்கள் அங்கு என்ன நடந்தது என்று ஆய்வு செய்தனர். அப்போதுதான், ஆக்சிஜன் வினியோகம் செய்யும் செம்புக்குழாய்கள் துண்டிக்கப்பட்டு திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது. உடனடியாக வேறு சிலிண்டர்களில் இருந்து மாற்று இணைப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
இந்த விவரம் அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அவர்களிடம் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் கிரண் வாடியா, குழந்தைகள் நல டாக்டர் ஆர்.எஸ்.மாத்தூர் பேசி, நிலைமையை சரி செய்துவிட்டதாகவும், அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் நடந்த திருட்டு பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- அதிகாரிகளின் விளக்கத்தை போராட்டக்குழு தலைவரான கோபால் பிரஜாபத் ஏற்க மறுத்தார்.
- விசாரணை நடத்தக்கோரி முதல்-மந்திரி மோகன் பகவத்துக்கு மனு கொடுத்துள்ளோம்.
இந்தூர்:
மத்தியபிரதேச மாநிலத்தில் வனக்காவலர், களக்காவலர் மற்றும் சிறைக்காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு மாநில அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை ஏராளமானோர் எழுதினர்.
கடந்த 13-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய ஒருவருக்கு 100-க்கு 101.66 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. அவர் தரவரிசை பட்டியலில் முதலிடமும் பெற்று இருந்தார்.
இதனால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அந்த தேர்வு எழுதிய பலர் கோபால் பிரஜாபத் என்பவரது தலைமையில் இந்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தேர்வு முடிவு அறிவிப்புக்கு பிறகு, தேர்வுக்குழு விதிகளின்படி ஆட்சேர்ப்புத் தேர்வில் 'சாதாரணமயமாக்கல் செயல்முறை' ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் முழு மதிப்பெண்களுக்கு (100) அதிகமாகவும், பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவும் பெறலாம் என்று கூறினர்.
அதிகாரிகளின் இந்த விளக்கத்தை போராட்டக்குழு தலைவரான கோபால் பிரஜாபத் ஏற்கமறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ஆள்சேர்ப்பு தேர்வில் பின்பற்றப்பட்ட சாதாரணமயமாக்கல் செயல்முறையின் காரணமாக ஒருவர் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாக எடுத்தது மாநில வரலாற்றில் இதுவே முதல் முறை. நியாயமற்ற செயல்முறைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி முதல்-மந்திரி மோகன் பகவத்துக்கு மனு கொடுத்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
- இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர்.
- பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம்
இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த நகரத்திலும் இந்தியாவில் உள்ள வேறெந்த நகரத்தையும் போலவே பிச்சைகாரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த பிச்சைக்காரர்கள் நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகக் கருதிய மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒழித்துக்கட்ட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு [எஃப்.ஐ.ஆர்] பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும். ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது, கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். மக்களுக்கு பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று இந்தூரில் வசிப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்
பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சார திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா கூறுகையில், நாங்கள் இதுதொடர்பாக ஆராயும்போது சில பிச்சைக்காரர்கள் வீடு வைத்திருப்பதையும், மற்றவர்களின் குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் அறிந்தோம்.
ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர் ரூ. 29,000 வைத்திருந்ததைப் பார்த்தோம். மற்றொரு பிச்சைக்காரர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை அறிந்தோம்.
இங்கு பிச்சை எடுப்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து குழந்தைகளை மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
- இந்த சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் 3 முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு இளைஞர் ஒருவர் செருப்பால் அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் கடந்த மாதம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் 3 சிறுவர்களை அடித்து கொடுமைப்படுத்தி ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை இளைஞர் உடன் வந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.கே.சக்சேனா (55 வயது) கடந்த 5 வருடங்களாக தலைமை ஆசிரியராக இருந்து வந்தார்.
- நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொலை செய்து அவரது ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவன் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் [Chhatarpur] மாவட்டத்தில் தாமோரா [Dhamora] அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக கடந்த 5 வருடங்களாக எஸ்.கே.சக்சேனா (55 வயது) இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் 1:30 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற சக்சேனா மீது அதே பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

சம்பவத்தின்பின் சக்சேனாவின் ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவனும் அவனுடன் வந்த கூட்டாளியும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தப்பியோடிவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தரையில் தான் கையோடு கொண்டு வந்த ஆவணங்களைப் பரப்பி வைத்துள்ளார்
- அவர்களின் புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் ஆடிப்போனார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது கிணற்றைக் காணவில்லை என குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில், காகர்லா பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவ்தாஸ் ரத்தோர் தனது கிணற்றை கடந்த ஆறு மாதங்களாகக் காணவில்லை அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.
இந்த நிலையில்தான் தனது குடும்பத்தினரையும் சேர்த்து அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தரையில் தான் கையோடு கொண்டு வந்த ஆவணங்களைப் பரப்பி வைத்துள்ளார். அவர்களின் புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

தனது பிரச்சனை குறித்து ஊடகத்தினரிடம் பேசிய தேவதாஸ் ரத்தோர், எனக்கு ஆறு ஏக்கர் நிலம் உள்ளது, ஆனால் எனது பெரிய மாமா எனது நிலத்தின் ஒரு பகுதியை தனக்குச் சொந்தமானது என்று கூறி விற்றுவிட்டார். இதனால் எனது கிணறு தற்போது எனது நிலத்தில் இல்லை, எனவே விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த துணை ஆட்சியர் அஜ்மீர் சிங், ஆவணப் பதிவேட்டில் நடந்து தவறால் இந்த இந்தப் பிரச்சனை எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கிணறு உண்மையில் மறைந்துவிடவில்லை, அது அவருக்கு சொந்தமான நிலத்திலேயே உள்ளது என்பதை அவருக்கு விலக்கினோம். குடிபோதையில் இருந்த எழுத்தர் ஆவணத்தில் தவறாக குறித்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
மறைந்த தமிழ் இயக்குனர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தனது கிணற்றை காணவில்லை என வடிவேலு போலீசில் புகார் கொடுக்கும் காமெடி நிஜத்திலேயே நடந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கிரேட் காளி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை பெற்று பிரபலம் ஆனவர்.
- கிரேட் காளி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
பஞ்சாபை சேர்ந்த கிரேட் காளி 2006-ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை பெற்று பிரபலம் ஆனவர். தற்போது போட்டிகளில் பங்கேற்பதை குறைத்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், கிரேட் காளி மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 'சனாதன் பாதயாத்ரா' நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கு சாமியார் ஒருவரின் தலைமுடியை பிடித்து கிரேட் காளி தூக்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில், காளியின் அருகில் நின்ற சாமியார் கிரேட் காளியிடம் தனது தலைமுடியை பிடித்து தூக்குமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து சாமியாரின் தலைமுடியை பிடித்து அவர் தூக்குகிறார். கிரேட் காளியின் பலத்தை கண்டு அங்குள்ள மக்கள் உற்சாகத்தில் கைதட்டி ரசித்தனர்.
- இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான்.
- அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
நண்பனுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது மூன்று பேரால் காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சில்வானி-சாகர் சாலையில் உள்ள சியர்மாவ் காட்டில் வைத்து இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
15 வயது சிறுமியும் அவரது அவரது 21 வயது ஆண் நண்பரும் அப்பகுதியில் உள்ள வனதேவி கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான். வனப்பகுதிக்குள் வைத்து இருவரையும் சுற்றி வளைத்த அவர்கள் பெண்ணின் நண்பனைக் கடுமையாகத் தாக்கினர். அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மூன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் சிறுமியும் இளைஞரும் வனத்திலிருந்து வெளியேறி சாலையை அடைந்தனர். ஆனால் இளைஞனின் இருசக்கர வாகனத்தின் சாவியை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். எனவே அங்கிருந்து சாலை வழியாக நடந்தே போலீசிடம் சென்றுள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொருவனைத் தேடி வருகின்றனர்.
- சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் முரைனா நகரில் நள்ளிரவில் 3 வீடுகள் வெடித்து சிதறியதில் 2 இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
ரத்தோர் காலனியில் நடந்த இச்சம்பவத்தில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.






