என் மலர்
இந்தியா
'கிணத்தை காணோம்' என கலெக்டர் ஆபீசுக்கு குடும்பத்தோடு கிளம்பி வந்த விவசாயி.. ஆடிப்போன அதிகாரிகள்
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தரையில் தான் கையோடு கொண்டு வந்த ஆவணங்களைப் பரப்பி வைத்துள்ளார்
- அவர்களின் புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் ஆடிப்போனார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது கிணற்றைக் காணவில்லை என குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில், காகர்லா பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவ்தாஸ் ரத்தோர் தனது கிணற்றை கடந்த ஆறு மாதங்களாகக் காணவில்லை அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.
இந்த நிலையில்தான் தனது குடும்பத்தினரையும் சேர்த்து அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தரையில் தான் கையோடு கொண்டு வந்த ஆவணங்களைப் பரப்பி வைத்துள்ளார். அவர்களின் புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.
தனது பிரச்சனை குறித்து ஊடகத்தினரிடம் பேசிய தேவதாஸ் ரத்தோர், எனக்கு ஆறு ஏக்கர் நிலம் உள்ளது, ஆனால் எனது பெரிய மாமா எனது நிலத்தின் ஒரு பகுதியை தனக்குச் சொந்தமானது என்று கூறி விற்றுவிட்டார். இதனால் எனது கிணறு தற்போது எனது நிலத்தில் இல்லை, எனவே விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த துணை ஆட்சியர் அஜ்மீர் சிங், ஆவணப் பதிவேட்டில் நடந்து தவறால் இந்த இந்தப் பிரச்சனை எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கிணறு உண்மையில் மறைந்துவிடவில்லை, அது அவருக்கு சொந்தமான நிலத்திலேயே உள்ளது என்பதை அவருக்கு விலக்கினோம். குடிபோதையில் இருந்த எழுத்தர் ஆவணத்தில் தவறாக குறித்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
மறைந்த தமிழ் இயக்குனர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தனது கிணற்றை காணவில்லை என வடிவேலு போலீசில் புகார் கொடுக்கும் காமெடி நிஜத்திலேயே நடந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.