ம.பி.யில் 3 வீடுகள் வெடித்து சிதறியதில் இரண்டு பெண்கள் பலி

சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ம.பி.யில் 3 வீடுகள் வெடித்து சிதறியதில் இரண்டு பெண்கள் பலி
Published on

மத்திய பிரதேசம் மாநிலம் முரைனா நகரில் நள்ளிரவில் 3 வீடுகள் வெடித்து சிதறியதில் 2 இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

ரத்தோர் காலனியில் நடந்த இச்சம்பவத்தில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com