என் மலர்
குஜராத்
- காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
- விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஜாம்நகர்:
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. இது முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னின் சொந்த ஊர் ஆகும். இங்கிருந்துதான் அம்பானி குடும்பத்தினர் தங்கள் தொழிலை தொடங்கினர்.
ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.
கடந்த 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
3-ம் நாளான நேற்று வந்தாரா வனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா உள்பட வெளிநாட்டு பிரபலங்களும், இந்திய தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதையடுத்து விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பெண் விருந்தினர்கள் காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அணிந்து வந்திருந்தனர். குறிப்பாக நீடா அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்து பெண்களும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்திருந்தனர்.

காலை, மதியம், இரவு வேளைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உணவுக்காக மட்டும் ரூ.130 கோடி வாரி இறைக்கப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் ஒரே மேடையில் நடனமாடி அசத்தினார்கள். முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் அழகாக நடனமாடினார்கள். மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். தோனி, இவாங்கா டிரம்ப் தாண்டியா நடனமாடினார்கள். ரிஹானாவின் பாடல்களை கட்டியது. சமூக வலைதளங்கள் முழுவதும் அம்பானி இல்ல திருமண முன்வைபவ நிகழ்ச்சிகளே டிரெண்டிங் ஆனது. உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் அம்பானி இல்ல திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் முக்கிய இடத்தை பிடித்தன.
ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது. திருமண முன் வைபவமே இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை மாதம் 12-ந்தேதி மும்பையில் திருமண விழா நடைபெற உள்ளது. திருமண விழா இதைவிட இன்னும் பலமடங்கு பிரமாண்டமாக நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
- திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் இன்று வரை நடைபெறுகிறது.
- இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
அகமதாபாத்:
தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சாண்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. ஜாம் நகரில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்துள்ளனர். என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல, முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் தன்னை விடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள் என உருக்கமாக கூறினார்.
ஆனந்த் அம்பானியின் பேச்சை கேட்டதும் முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். முகேஷ் அம்பானி தேம்பி அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
- மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.
அகமதாபாத்:
மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் நேற்று பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம் மற்றும் சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஒற்றுமை சிலையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு உலகத் தலைவர்கள் வருகை.
- நேரடியாக ஜாம்நகருக்கு வருகை தரும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்ட்-க்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடத்த முகேஷ் அம்பானி- நீடா தம்பதி முடிவு செய்தது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் உலக தொழில் அதிபர்கள் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், பாப் பாடகி ரிஹான்னா உள்ளிட்டோர் ஜாம்நகருக்கு வருகை தந்தனர்.
அவர்கள் விமானம் நேரடியாக ஜாம்நகருக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அஸ்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். அதேபோல் ஜாம்நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு செல்ல முடியும்.
பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்ட்ளது. வழக்கமாக சுமார் ஆறு விமாங்கள் வந்து செல்லும் நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.
- முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி ஜாம் நகரில் நடைபெறுகிறது
- கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின், ஹர்திக், கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்
இந்தியாவின் நம்பர் 1 கோடீசுவரர் முகேஷ் அம்பானி (66). இவரது நிகர சொத்து மதிப்பு $115 பில்லியனுக்கும் மேல் உள்ளது.

முகேஷ் அம்பானியின் இளைய மகனான 28 வயதான ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani), ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant) என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி குஜராத் மாநில ஜாம் நகரில் (Jam Nagar) தற்போது நடைபெறுகிறது.
உலகெங்கிலும் இருந்து சுமார் 1200 விருந்தினர்கள் பங்கு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவராக குஜராத் ஜாம் நகரில் வந்து இறங்குகின்றனர்.
முன்னதாக ஜாம் நகர் மக்களுக்கு அம்பானி குடும்பம் அளித்த விருந்து உபசாரம் நடைபெற்றது.
ஆசியாவின் முன்னணி கோடீசுவரரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் என்பதால், பல துறை சார்ந்த பிரபலங்களும் ஒரே இடத்தில் குவியும் அரிய நிகழ்வை இந்திய மக்கள் காண்கின்றனர்.
பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, உலக தொழிலதிபர்களான மார்க் ஜுக்கர்பர்க், பில் கேட்ஸ், கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின் , ஹர்திக் பாண்ட்யா, கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்.

மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி அதிபர் சுந்தர் பிச்சை, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உலக புகழ் பெற்ற பாடகி ரிஹானாவின் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ந்தேதி நடக்கிறது.
- நாளை முதல் மார்ச் 3-ந்தேதி வரை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி (நாளை) முதல் வருகிற மார்ச் 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றிரவு ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்து 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பம் விருந்து அளித்தது.
முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.
இதன்மூலம் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.
- போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது” என எழுதப்பட்டிருந்தது
- படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர்
குஜராத் கடற்பகுதியில் இரண்டு நாட்கள் கடலில் இருந்த இந்திய கடற்படையின் (Indian Navy) கப்பல் ஒன்றில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சிறிய கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்று போது தடுத்து நிறுத்தினர்.
இந்திய கடற்படை அதிகாரிகளுடன் இருந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (Narcotics Control Bureau) அதிகாரிகள், அதில் இருந்த "பாகிஸ்தானியர்கள்" என சந்தேகிக்கப்படும் சிலரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறிய கப்பலில், 3,300 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது" (Produce of Pakistan) என எழுதப்பட்டிருந்தது.
இதில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோ, மெத்தாம்ஃபிடமைன் (methamphetamine) மற்றும் 25 கிலோ மார்ஃபைன் (morphine) ஆகியவை இருந்தது.
சர்வதேச சந்தையில், தற்போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் குஜராத் மாநில போர்பந்தர் (Porbandar) நகருக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திய கடற்படையுடன் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad) இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட மிக பெரிய போதை பொருள் பறிமுதல் இதுதான் என கூறப்படுகிறது.
இந்த போதை பொருள் கடத்தல் முயற்சியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.
- அம்பிகாவுக்கு தனது கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
- மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிந்தவுடன் பிரிந்து விடலாம் என்று கூறினேன்.
ராஜ்கோட்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் குருபா ஜிரோலி. தொழில் அதிபர். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 17 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.
இவர்கள் அம்பிகா டவுன்ஷிப் பகுதியில் உள்ள சாந்திலன் நிவாஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அம்பிகாவுக்கு தனது கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த குருபா ஜிரோலி, மனைவியை கண்டித்தார். கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் அம்பிகா, கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்டார்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குருபா ஜிரோலி, இரும்பு பொருளால் மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.
பின்னர் மனைவி உடலை வீடியோ எடுத்து அதை குடியிருப்பில் வசிப்பவர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தார். அந்த வீடியோவில் குருபா ஜிரோலி கூறும்போது, மனைவியிடம் கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தினேன். மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிந்தவுடன் பிரிந்து விடலாம் என்று கூறினேன்.
ஆனால் அதற்கு அவர் மறுத்து, காதலனுடன் ஓடிபோக திட்டமிட்டார். இதனால் அவரை கொலை செய்தேன். அவரை கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. அவரால் நான் கொடுமைகளை அனுபவித்தேன் என்று கூறினார். இதை பார்த்த குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குருபா ஜிரோலி போலீசில் சரண் அடைந்தார்.
- பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போதைப்பொருள் இல்லாத நாடு என்ற நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு- அமித் ஷா.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கடவழியாக போதைப்பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத் எல்லையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்திய கடற்படை, இந்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறிய வகை கப்பல் ஒன்று குஜராத் எல்லையில் செல்வதை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த சிறிய வகை கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 3,300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கப்பலில் இருந்த ஐந்து பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் புனே, டெல்லியில் நடைபெற்ற மிகப்பெரிய சோதனையில் 2500 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு வாரத்திற்குள் தற்போது மிகப்பெரிய அளவில் பொதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
"போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதில் உறுதிப்பூண்டுள்ள நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நேரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, கடற்படை, குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
- 2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.
குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரன் ரத்வா பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் தனது மக்கள் ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே குஜராத்தில் பலவீனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பழங்குடியின தலைவரான நரன் ரத்வா தற்போது பா.ஜனதாவுக்கு சென்றிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
சோட்டோ உதேப்பூரில் பழங்குடியின தலைவரான ரத்வா ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். முதன்முறையாக 1989-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 1991, 1996, 1998 மற்றும் 2004-ல் மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.
ரத்வாவின் மகன் 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோட்டா உதேப்பூர் பழங்குடியின தொகுதியில் (ST) போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ரத்வா ரெயில்வே துணை மந்திரியாக இருந்தவர். 2009-ல் பா.ஜனதா வேட்பாளர் ராம்சின் ரத்வாவிடம் தோல்வியடைந்தார்.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அம்மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர். பாட்டில் தலைமையில் ரத்வான தனது ஆதரவாளர்களும் பா.ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
- ராஜகோட் உள்பட 5 இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
- கடந்த 70 ஆண்டில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தர பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரா) ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மற்றவர்களிடம் இருந்து நம்பிக்கை முடிவடையும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளாக நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. அதுவும் டெல்லியில் மட்டுமே இருந்தது. சுமார் 70 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுவும் முழுதாகக் கட்டி முடிக்கப்படவில்லை.
தற்போது 10 நாட்களில் 7 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டன. அதனால்தான் கடந்த 70 ஆண்டில் இருந்ததைவிட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று கூறுகிறேன்.
அதிக எண்ணிக்கையிலான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான எனது உத்தரவாதத்தை நிறைவேற்றி உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பா.ஜ.க. அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தேன். முந்தைய காங்கிரஸ் அரசு ரேபரேலியில் வெறும் அரசியல் மட்டுமே செய்தது. ஆனால் பா.ஜ.க. அரசு அங்கு உண்மையாக வேலை செய்தது.
கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் கொரோனா தொற்று நோயை இந்தியாவால் தோற்கடிக்க முடிந்தது. நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிப்பதன் மூலம் நோய்கள் ஏற்படுவதை தடுப்பதே நமது அரசாங்கத்தின் முன்னுரிமை ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது என தெரிவித்தார்.
- துவாரகா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
- பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கினார்.
குஜராத்தில் 4 வழி கொண்ட கேபிள் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலமாக இது கருதப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த நகரமாக இருந்த துவாரகா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
பேய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பண்டைய துவாரகாவின் பொருட்களை நீருக்கடியில் மக்கள் காணலாம்.

இன்று, வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் மோடி நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுபோய் காணிக்கையாக செலுத்தினார்.
இதுகுறித்து தனது அனுபவத்தைப் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.
தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணா. எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.






