என் மலர்tooltip icon

    குஜராத்

    • 18 மாதத்திற்கு முன் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
    • ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

    குஜராத் மாநிலம் பரூச்சில் 70 வயது மூதாட்டியை 35 வயது நபர் கற்பழித்த குற்றச்சாட்டிற்காக ஜெயில் சென்ற நிலையில், ஜாமின் பெற்று மீண்டும் அதே மூதாட்டியை கற்பழித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் 70 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை ஷைலேஷ் ரதோடு என்பவர் கடந்த 15-ந்தேதி மற்றும் 22-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் மூதாட்டியை கற்பழித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக யாரிடமாவது கூறினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.

    ஆனால் மூதாட்டி, அமோத் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கெடுமையை விவரித்துள்ளார். உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைலேஷ் ரத்தோட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    18 மாதங்களுக்கு முன்தாக இதே மூதாட்டியை கற்பழித்ததற்காக ஷைலேஷ் ரதோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே மூதாட்டியை கற்பழித்துள்ளார். போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

    • அம்பேத்கரின் சிலை மூக்கு மற்றும் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளனர்
    • அம்பேத்கரின் சிலைக்கு முன் அரசியலமைப்பின் முன்னுரையை தீவைத்து எரித்தார்

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் கோக்ரா பகுதியில் ஸ்ரீ கே.கே. சாஸ்திரி கல்லூரிக்கு முன்னால் அமைந்துள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை நேற்று [திங்கள்கிழமை] அதிகாலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்வாசிகள் போராடி வருகின்றனர்.

    அடையாளம் தெரியாத சிலர் அம்பேத்கரின் சிலை மூக்கு மற்றும் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.கே.ரபாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.

    குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக நீதியின் சின்னம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    மகாராஷ்டிராவின் பர்பானி நகரில், அம்பேத்கரின் சிலைக்கு முன் அரசியலமைப்பின் முன்னுரையை எரித்த மர்ம நபரால் அங்கு கலவரம் நடந்து வரும் நிலையில் குஜராத்திலும் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது.
    • 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது.

    டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து தாலாய்ந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புதிதாகவிமான சேவையை தொடங்கியுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானமானது சூரத்தில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்து பாங்காக் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அனைத்தையும் பயணிகக்ள் 4 மணி நேரத்தில் குடித்துத் தீர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது. அதாவது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது. விமானத்தில் மதுபானம் தீர்ந்துவிட்டது என்று பயணிகள் கூறும் வீடியோக்கள் வெளிவந்தன.

    1.8 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 15 லிட்டர் பிரீமியம் மதுபான வகைகள் அந்த விமானத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

    விமானத்தில் ஒரு பயணிக்கு 100 மில்லிக்கு மேல் மதுபானம் வழங்கப்படுவதில்லை என்ற விமான ஊழியர்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

    • முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 314 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.

    வதோதரா:

    வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஹர்மன்பிரீத் கவுர் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

    பெண்கள் ஒருநாள் போட்டியில் 1000 ரன் எடுத்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர். இவர் கேப்டனாக 26 போட்டியில் மொத்தம் 1,012 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே மிதாலி ராஜ் (5319 ரன், 155 போட்டி) இம்மைல்கல்லை எட்டினார். ஒட்டுமொத்த இந்திய கேப்டன் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஹர்மன்பிரீத் கவுர்.

    முதல் மூன்று இடங்களில் எம்.எஸ்.டோனி (6,641 ரன், 200 போட்டி), கோலி (5,449 ரன், 95 போட்டி), மிதாலி ராஜ் (5,319 ரன், 155 போட்டி) உள்ளனர்.

    • முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 314 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.

    வதோதரா:

    வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1,602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    • கர்நாடக அணி 383 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அந்த அணியின் கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்கள் குவித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) நேற்று தொடங்கியது. ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தின் உதவியுடன் 382 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே (78 ரன்), ஹர்திக் தாமோர் (84 ரன்), ஷிவம் துபே (63 ரன்) ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

    இதையடுத்து, 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கர்நாடக அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான நிகின் ஜோஸ் 21 ரன்னும், மயங்க் அகர்வால் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின், கர்நாடக அணி வீரர்கள் அதிரடியில் மிரட்டினர். அனீஷ் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கர்நாடக அணி 46.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்களுடனும், பிரவீன் துபே 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த இந்தியர் ஆனார் பஞ்சாப்பின் அன்மோல்பிரீத் சிங்.
    • பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சி பிரிவில் இடம்பெற்ற பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அன்மோல்பிரீத் சிங் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தார். இவர் 35 பந்தில் சதமடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் (35), அன்மோல்பிரீத் (115 ரன்) அவுட்டாகாமல் இருந்தனர்.

    இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் அன்மோல்பிரீத். பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.

    சர்வதேச அளவில் அன்மோல்பீரீத் சிங் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவின் மெக்குர்க் (29 பந்து), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (31 பந்து) உள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள அன்மோல்பிரீத் சிங், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது தந்தைவழி உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.
    • அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு இரவு 10 மணியளவில் 4 விரல்களையும் துண்டித்தேன்.

    குஜராத்தின் சூரத்தில் 32 வயது நபர் ஒருவர் வேலை தொடர்பான மன அழுத்தத்தின் காரணமாக தனது இடது கையில் நான்கு விரல்களை துண்டித்துக்கொண்டதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    குஜராத்தில் வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக 32 வயது நபர் ஒருவர் தனது இடது கையில் உள்ள 4 விரல்களையும் வெட்டிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா [Mayur Tarapara]. தனது தந்தைவழி உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக இவர் வேலை செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இவரது இடதுகையின் விரல்கள் வெட்டப்பட்டது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நண்பர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் மயங்கி விழுந்ததிலிருந்து தனது விரல்களைக் காணவில்லை என்று மயூர் போலீசிடம் கூறியுள்ளார்.

    சூனியம் செய்யும் நோக்கத்தில் விரல்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. ஆனால் போலீஸ் விசாரணையில் இவரின் வாகனம், தொலைப்பேசி, பணம் உள்ளிட்ட உடைமைகள் திருடப்படாமல் விரல்கள் மட்டும் வெட்டப்பட்டது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே மேலதிக விசாரணையில் மயூர் நடந்ததை ஒப்புக்கொண்டார்.

    கடந்த வாரம் சிங்கன்பூரில் உள்ள சார் ரஸ்தா அருகே உள்ள கடையில் கூர்மையான கத்தியை வாங்கினேன். நான்கு நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு இரவு 10 மணியளவில் 4 விரல்களையும் துண்டித்தேன்.

     

    ரத்தம் கசிவதை தடுக்க முழங்கையின் அருகே கயிறை இறுக்கமாகக் காட்டினேன், பின்னர் கத்தியையும் விரல்களையும் பையில் போட்டு தூக்கி எறிந்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

     மேலும் தனது முதலாளி தனது தந்தையின் உறவினர் என்பதால் எனது குடும்பக் கடமைகள் காரணமாக வேலையில் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தேன்.

     

    அங்கு வேலை செய்ய எனக்கு விரும்பவில்லை, அதை யாரிடமும் சொல்லும் தைரியம் தனக்கு இல்லை, எனவே விரலை வெட்டிக்கொண்டால் கணினியில் வேலை செய்ய முடியாது என்பதால் அவ்வாறு செய்தேன் என்று அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். மயூருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது.  

    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்த்ராபூரில் உள்ள வங்கி கிளையில் நடந்துள்ளது
    • பெண்ணை மிரட்டி அவரின் போனை பிடுங்கி கீழே வீசும் வீடியோவும் வெளியாகி உள்ளது

    குஜராத்தில் வங்கி மேனேஜருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த சண்டையின் வீடியோ இணையத்தில் தீயாக வருகிறது. பிக்சட் டெபாசிட் சேமிப்புக்கு அதிக வரிப் பிடித்தம் செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்மன் ராவல் என்ற வாடிக்கையாளர் வங்கி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் சண்டையாக மாறியாக நிலையில் வங்கி மேனேஜரை ஜெயம் ராவல் சரமாரியாக தாக்கியுள்ளார். ஜெய்மன் ராவல் உடன் வந்திருத்த அவரது தாய் அவரை தடுக்க முயற்சித்தபோதும் கோபத்தின் உச்சியில் இருந்த ஜெய்மன் ராவல் தாக்குதலை தொடர்ந்துள்ளார்

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்த்ராபூரில் உள்ள யூனியன் வங்கி கிளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் வஸ்த்ராபூர் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே பீகார் மாநிலம் பாட்னாவின் காந்தி மைதான பகுதியில் உள்ள கனரா வங்கிக் கிளையிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பரவிய வீடியோவில், நபர் ஒருவர் வங்கியில் வேலை செய்யும் பெண்ணை மிரட்டி அவரின் போனை பிடுங்கி கீழே வீசுவதும், CIBIL ஸ்கோர் தொடர்பாக வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுப்பதும் பதிவாகி உள்ளது.

    • 14 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • நூற்றுக்கணக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி மருத்துவர்கள் இணைந்து மருத்துவமனை தொடங்க முயற்சித்த நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் குஜராத்தில் போலியாக டாக்டர் பட்டப்படிப்பு சான்று பெற்று மருத்துவம் பார்த்து வந்த 14 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சூரத்தில் போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக சென்ற புகாரின் பேரில் 3 கிளீனிக்குகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ வாரியம் (பி.இ.எச்.எம்.) மருத்துவ படிப்புக்கான பட்டப்படிப்பு சான்றிதழ் மூலம் 3 பேர் மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    குஜராத்தில் இதுபோன்ற ஒரு படிப்பு இல்லாத நிலையில் இந்த 3 பேரும் போலியாக டாக்டர் பட்டப்படிப்புக்கான சான்றிதழை ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் குஜராத்தை சேர்ந்த டாக்டர் ரமேஷ் என்பவர் இந்த சம்பவத்தில் முக்கியமானவராக செயல்பட்டுள்ளார். அவர் 5 பேரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்து, எலக்ட்ரோ ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைப்பது எப்படி? என பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

    அவருடன் மேலும் ஒரு டாக்டரும் சேர்ந்து போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்தவித கட்டுப்பாடு மற்றும் விதிகள் இல்லை என்பதை அறிந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக தனியாக ஹோமியோபதி போர்டு ஒன்றை தொடங்கி அதன் மூலம் போலி சான்றிதழ்களை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு விநியோகம் செய்து வந்துள்ளனர்.

    இந்த கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு 15 நாட்களில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களை கொடுத்ததும் தெரியவந்தது.


    பிடிபட்டவர்களின் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு நூற்றுக்கணக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த மோசடிக்காக அவர்கள் தனியாக ஒரு இணையதளமும் தொடங்கி உள்ளனர். அதில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற 1200 பேர் வரை பதிவு செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை செய்த போலீசார் போலி டாக்டர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர்.

    • நேற்று வீட்டில் பாஜக மகளிரணி நிர்வாகி தீபிகா படேல் தூக்கில் தொங்கினார்.
    • தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் 30-வது வார்டு பாரதீய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச் பிரிவு தலைவராக தீபிகா படேல் (வயது34) என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் விவசாயியாக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று வீட்டில் தீபிகா படேல் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபிகா படேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வாட்சப் மூலம் பகிர்ந்துள்ளார்.
    • இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார்.

    குஜராத்தில் இந்திய கடலோர காவற்படை குறித்த தகவல்களைப் பாகிஸ்தான் உளவாளிக்குத் தினமும் ரூ.200 க்கு விற்ற நபரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் (ATS) கைது செய்துள்ளனர்.

    குஜராத்தின் கடலோர நகரமான துவாரகாவில் பணிபுரிந்து வந்த திபேஷ் கோஹில் என்ற நபர், பாகிஸ்தான் கடற்படை அதிகாரி அசிமாவுக்கு பேஸ்புக்கில் பரீட்சயமாகியுள்ளார்.

    துவாரகாவில் உள்ள ஓகா பகுதியிலிருந்து முக்கியமான புகைப்படங்களை கோஹில் பாகிஸ்தானுக்குச் சேகரித்து அனுப்பியதாக ATS தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள உளவாளிக்கு கோஹில் அனுப்பியதில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்திய கடலோர காவல்படை பற்றியது என்று ATS தெரிவித்துள்ளது.

    ஓகா துறைமுகத்தில் உள்ள கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கோஹில் வாட்சப் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய குஜராத் ஏடிஎஸ் அதிகாரி கே சித்தார்த், ஓகாவைச் சேர்ந்த ஒருவர் கடலோரக் காவல்படை பற்றிய விவரங்களை வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானின் கடற்படை அல்லது ஐஎஸ்ஐ (இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) முகவருடன் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

     

    இதுதொடர்பான விசாரணையில் ஓகாவில் வசிக்கும் திபேஷ் கோஹிலை கைது செய்தோம். தீபேஷ், பாகிஸ்தானில் தொடர்பிலிருந்தவர் என்று உறுதிப்படுத்தியுள்ளோம். சொந்தமாக வங்கிக்கணக்கு இல்லாத தீபேஷ் தனது நண்பர் கணக்கில் ஒவ்வொரு நாளும் ரூ.200 வீதம் அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார். தீபேஷ் மீது கிரிமினல் சதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ×