search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "us army"

    இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது. 

    இதற்கிடையில், ஈரான் நாட்டை பாதுகாக்கும் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில மேற்கத்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில்,  நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் ஹெஷ்மட்டொல்லாஹ் ஃபலாஹட் பிஷே, ‘எங்கள் படைகளை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தால் நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Iranenlist #USarmy #terroristorganisation #IRGC #HeshmatollahFalahat 
    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்காவிட்டால் மெக்சிகோ எல்லையை மூடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். #MexicoBorderWall #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார். மெக்சிகோ எல்லை வழியாக ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சால்வேடர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஊடுருவுகின்றனர்.

    அவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதை ஏற்க அந்நாடு மறுத்து விட்டது.

    எனவே மெக்சிகோ எல்லையை மூடப் போவதாக மிரட்டல் விடுத்தார். இருந்தும் அந்நாடு பணியவில்லை. இந்த நிலையில் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

     


     

    இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அண்டை நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா, மற்றும் எல்சால்வேடர் நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக ஊடுருவு கின்றனர்.

    பல ஆண்டுகளாக எங்கள் செல்வத்தை அவர்கள் எடுத்து செல்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் மோசமான சட்டங்கள் உள்ளன.

    எனவே, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருபவர்களை தடுத்து நிறுத்தும்படி மெக்சி கோவிடம் உதவி கோரினோம். ஆனால் அதை மெக்சிகோ செய்யவில்லை. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    எனவே மெக்சிகோ எல்லையை மூடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் இந்த கருத்தை மெக்சிகோ அதிபர் அன்ட்ரஸ் மானிவில் லோபெஷ் ஓபராய் மறுத்துள்ளார். இதன்மீது சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். எங்களால் முடிந்தவரை உதவி புரிந்து வருகிறோம் என்று அவர் கூறினார். #MexicoBorderWall #DonaldTrump

    மெக்சிகோ எல்லையில் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் சுவர் கட்டும் பணியை மேற்கொள்வதற்கு அமெரிக்க ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #MexicoBorderWall #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்களுடன் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களும் சேர்ந்து கொண்டதால் அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அரசு பணிகள் முடங்கின.

    எனவே ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் டாலர்) செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார். அதை தொடர்ந்து மெக்சிகோ எல்லையில் 92 கி.மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரத்துக்கு சுவர் கட்டவும், அங்கு ரோடு மற்றும் மின் வசதி செய்யும்படி ராணுவ தலைமையகமான பென்டகனிடம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்து இருந்தது.

    அதை பென்டகன் செயல் தலைவர் பாட்ரிக் ‌ஷனாகன் ஏற்றுக் கொண்டார். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ராணுவ துறையின் என்ஜினீயர்களுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டார்.

    அதன்படி அவர்கள் திட்டம் தயாரிப்பது, அதை செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.    #MexicoBorderWall #DonaldTrump
    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா பாஸல் உல்லா அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #USDroneAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள குனார் பகுதியில் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தாலிபன் என்றழைக்கப்படும் இந்த இயக்கத்தின் தலைவனாக தற்போது இருக்கக்கூடிய முல்லா பாஸல் உல்லா வசிக்கும் இடத்தை குறிவைத்து நேற்று அமெரிக்க ராணுவம் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

    இந்த தாக்குதலில் முல்லா பாஸல் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட  முல்லா பாஸல் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவரில் இருக்கும் ராணுவ பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு இந்த இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தானிலும் இந்த இயக்கத்தினர் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். 
    ×