என் மலர்
நீங்கள் தேடியது "Mexico border wall"
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார். மெக்சிகோ எல்லை வழியாக ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சால்வேடர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஊடுருவுகின்றனர்.
அவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதை ஏற்க அந்நாடு மறுத்து விட்டது.
எனவே மெக்சிகோ எல்லையை மூடப் போவதாக மிரட்டல் விடுத்தார். இருந்தும் அந்நாடு பணியவில்லை. இந்த நிலையில் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அண்டை நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா, மற்றும் எல்சால்வேடர் நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக ஊடுருவு கின்றனர்.
பல ஆண்டுகளாக எங்கள் செல்வத்தை அவர்கள் எடுத்து செல்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் மோசமான சட்டங்கள் உள்ளன.
எனவே, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருபவர்களை தடுத்து நிறுத்தும்படி மெக்சி கோவிடம் உதவி கோரினோம். ஆனால் அதை மெக்சிகோ செய்யவில்லை. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே மெக்சிகோ எல்லையை மூடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் இந்த கருத்தை மெக்சிகோ அதிபர் அன்ட்ரஸ் மானிவில் லோபெஷ் ஓபராய் மறுத்துள்ளார். இதன்மீது சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். எங்களால் முடிந்தவரை உதவி புரிந்து வருகிறோம் என்று அவர் கூறினார். #MexicoBorderWall #DonaldTrump
அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களுடன் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களும் சேர்ந்து கொண்டதால் அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அரசு பணிகள் முடங்கின.
எனவே ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் டாலர்) செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார். அதை தொடர்ந்து மெக்சிகோ எல்லையில் 92 கி.மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரத்துக்கு சுவர் கட்டவும், அங்கு ரோடு மற்றும் மின் வசதி செய்யும்படி ராணுவ தலைமையகமான பென்டகனிடம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்து இருந்தது.
அதை பென்டகன் செயல் தலைவர் பாட்ரிக் ஷனாகன் ஏற்றுக் கொண்டார். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ராணுவ துறையின் என்ஜினீயர்களுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் திட்டம் தயாரிப்பது, அதை செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். #MexicoBorderWall #DonaldTrump
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
இதனால், அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின் தெற்கு பகுதியில் எல்லை சுவர் கட்டுவதற்கு 800 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யும் அவசரநிலை பிரகடணத்தை கடந்த மாதம் டிரம்ப் பிறப்பித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியின் சார்பில் அமெரிக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின்மீது நடந்த வாக்கெடுப்பில் டிரம்ப்பின் நிலைப்பாட்டை ஆதரித்து 182 உறுப்பினர்களும், எதிராக 245 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட 290 வாக்குகளை பெற்றாக வேண்டும் என்ற நிலையில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக இந்த வாக்கெடுப்பு அமைந்திருந்தது. டிரம்ப்பின் நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் கடந்த வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது ’வீட்டோ’ (சிறப்பு) அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரிக்கும் உத்தரவில் நேற்று கையொப்பமிட்டார்.
இந்நிலையில், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பதா? ரத்து செய்வதா? என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் வரும் 26-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார். #USHouse #TrumpVeto #borderemergency #Mexicoborder #Mexicoborderwall

ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.
நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். அதன்படி, கலிபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன. கலிபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அவசரநிலையை அறிவித்திருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், டிரம்பின் அவசர நிலை பிரகடனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.
ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், மக்களின் வரிப்பணத்தை திருடுவதையும் தடுப்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் சேவியர் பெசிரா தெரிவித்தார். #DonaldTrump #Emergency






