என் மலர்
குஜராத்
- இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, அரியானா அணிகள் மோதின.
- இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானாவும் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.
நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றன.
- இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், விதர்பா அணிகள் மோதின.
- இதில் விதர்பா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்றும் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், மஹிபால் லாம்ரோர் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்தது. கார்த்திக் சர்மா அரை சதமடித்து 62 ரன்னும், ஷப்னம் கர்வால் அரை சதம் கடந்து 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விதர்பா அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரே நிலைத்து நின்று ஆடி சதமடித்தார்.
கேப்டன் கருண் நாயர் அதிரடியாக ஆடி 122 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 292 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது துருவ் ஷோரேவுக்கு வழங்கப்பட்டது.
மற்றொரு அரையிறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- முதலில் பேட் செய்த கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார்.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும், குருணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அனீஷ் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பரோடா அணி சார்பில் ராஜ் லிம்பானி, அதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. ஷாஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அதித் ஷேத் அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகம் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.
- 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.16,155 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
- இந்தியாவிலேயே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் குஜராத்தான்.
இந்தியாவில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கியுள்ளது குஜராத் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்த 64 நபர்களுக்கு காவல்துறையினர் மூலம் தலா 51,202 ரூபாயும் 169 பேருக்கு உள்துறைத் துறை மூலம் தலா 6,36,86,664 ரூபாயும் 737 பேருக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (NCB) குழுவின் மூலம் தலா 5,13,40,680 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்குகளில் அலுவலக பணிகளில் உதவியாக இருக்கும் தனிநபருக்கு ஒரு பறிமுதலுக்கு ரூ.2,500 பரிசு வழங்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20% பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் குஜராத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.16,155 கோடி மதிப்புள்ள 87,607 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2,500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- காலை 7:30 மணியளவில் சிறுமி தனது பள்ளிப் பையுடன் தனது வகுப்பை நோக்கி செல்வதைக் காணலாம்
- அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சிறுமி திடீரென்று வேதனையில் நெளிகிறாள்
குஜராத்தில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று [வெள்ளிக்கிழமை] குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார். கார்கி ரன்பரா என்ற அந்த சிறுமி, தல்தேஜ் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான Zebar பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், காலை 7:30 மணியளவில் சிறுமி தனது பள்ளிப் பையுடன் தனது வகுப்பை நோக்கி செல்வதைக் காணலாம். அப்போது சிறுமிக்கு திடீரென உடல் அசௌகரியம் ஏற்படுகிறது.
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சிறுமி திடீரென்று வேதனையில் நெளிகிறாள். அருகில் நின்றிருந்த ஆசிரியர்களும் மற்ற பள்ளிக் குழந்தைகளும் எதையும் புரிந்து கொள்வதற்குள், சிறுமியின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. சேரில் இருந்து சிறுமி சுருண்டு விழுந்தார்.
சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த வார தொடக்கத்தில் கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் சாமராஜநகரில் அமைந்துள்ள பள்ளியில் வகுப்பிலேயே 3 ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- இளம்பெண் மயக்கத்தில் இருந்ததால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
- 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்புக் குழு இளம்பெண்ணை மீட்டது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டேராய் கிராமத்தில் 18 வயது இளம்பெண் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். பூஜ் தாலுகாவில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 490 அடி ஆழத்தில் இளம்பெண் சிக்கி உள்ளதாக புஜ் துணை ஆட்சியர் ஏ.பி.ஜாதவ் தெரிவித்தார். உள்ளூர் மீட்புக் குழு தொடர்ந்து ஈடுபட்டனர்.
இளம்பெண் மயக்கத்தில் இருப்பதால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
சிக்கியுள்ள பெண்ணை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை குழுக்களும் அழைக்கப்பட்டன.
இந்நிலையில், சுமார் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்புக் குழுவினர் இளம்பெண்ணை மீட்டனர். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இளம்பெண்ணின் குடும்பத்தினர் ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்.
- உள்ளூர் மீட்புக் குழு தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் ஆக்ஸிஜனை சப்ளை செய்து வருகிறது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டேராய் கிராமத்தில் 18 வயது இளம்பெண் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். பூஜ் தாலுகாவில் உள்ள கிராமத்தில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 490 அடி ஆழத்தில் இளம்பெண் சிக்கி உள்ளதாக புஜ் துணை ஆட்சியர் ஏபி ஜாதவ் தெரிவித்தார்.
இளம்பெண் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர். பின்னர் கேமராவின் உதவியுடன் கிணற்றுக்குள் பெண் இருப்பதை உறுதி செய்துள்ளனர். உள்ளூர் மீட்புக் குழு தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் ஆக்ஸிஜனை சப்ளை செய்து வருகிறது.
இளம்பெண் மயக்கத்தில் இருக்கிறார். உள்ளூர் மீட்புக் குழுவினரால் அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. அவரை வெளியே கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சிக்கியுள்ள பெண்ணை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக துணை ஆட்சியர் தெரிவித்தார்.
இளம்பெண் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் நுழைந்தது
- சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன
குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை அமைந்துள்ளது. அதை சுற்றி உள்ள ஜங்கிள் சபாரி பகுதிக்குள் கடந்த புத்தாண்டு தினத்தன்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.
அந்த சிறுத்தை பிளாக்பக் எனப்படும் கரும்புலி வகை மான் ஒன்றை வேட்டையாடி கொன்றுள்ளது. ஒரு பிளாக்பக் மான் இறந்த அதிர்ச்சியிலேயே மற்ற 7 மான்களும் இறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலய ஜங்கிள் சஃபாரி பூங்காவின் வேலியிடப்பட்ட எல்லைகளைத் தாண்டி வந்துள்ளது. அங்கு பிளக்பக் மான்கள் இருந்த அடைப்புக்குள் நுழைந்து ஒரு மானை வேட்டையாடி உள்ளது.

வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, எட்டு சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டன.
வனத்துறை துணைப் பாதுகாவலர் (டிசிஎஃப்) அக்னீஸ்வர் வியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன. பணியில் இருந்த காவலர்கள் அதை விரட்ட முயற்சித்த போதிலும், சிறுத்தை ஒரு கரும்புலியைக் கொன்றது, அதே நேரம் குழப்பம் மற்றும் அதிர்ச்சி மற்ற 7 மான்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை சிலை அருகே உள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது, அங்கு பல சிறுத்தைகள் உள்ளன. இருப்பினும் சஃபாரி பூங்காவிற்குள் சிறுத்தை நுழைவது இதுவே முதல் முறை.
ஜங்கிள் சஃபாரியில் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், நுழைவாயில் மற்றும் அடைப்புக்கு அருகில் உள்ள கேமராக்கள் சிறுத்தை நுழைவதை காட்டுகிறது. சிறுத்தை முழுவதுமாக ஜங்கிள் சஃபாரியை விட்டு வெளியேறிவிட்டதா என்பது இன்னும் உறுதியாக தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குளிர்காலத்தில் சகஜம் தான் என அரசு கூறினாலும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

சீனாவில் வைரஸ் பரவலால் மற்ற நாடுகளும் அலர்ட்டாக உள்ளன. இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை எங்கும் அழைத்துச் செல்லப்படாதபோதிலும் வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனை அறிக்கையை கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது.
மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குஜராத்தில் HMPV பரவல் பதிவாகியுள்ளது. சந்த்கேடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு மாத குழந்தைக்கு HMPV பாதிப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது, இந்த தொற்று பாதிப்புகளில், அசாதாரண பரவல் என்பது இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. கடந்த சனிக்கிழமை கூட்டு கண்காணிப்புக் குழு கூட்டமும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது.
- விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் போர் பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
- நில நடுக்கம் ரிக்டரில் 3.2 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக நில அதிர்வுக்கான ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.) தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 10.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.
கட்ச் மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்படுவது இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறை ஆகும். முன்னதாக கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி இருந்தது. இம்மாதம் 7 ஆம் தேதி ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டரில் 3.2 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 358 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வதோதரா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஜோடி110 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி மந்தனா 53 ரன்னில் அவுட்டானார். பிரதிகா ராவல் 76 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் சிறப்பாக ஆடி முதல் சதத்தை பதிவு செய்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஹர்லீன் தியோல் 115 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். கேம்ப்பெல் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, பிரதிகா ராவல், டிடாஸ் சாது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






