என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
- சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.
ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.
ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.
ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வானிலை முன்அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்து கொள்வதற்காக ‘இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ பெங்களூருவில் வடிவமைத்து உள்ளது.
- காலநிலை தரவுகளை தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் இன்சாட்-3டி மற்றும் 3 டி.ஆர். செயற்கைகோள்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், 2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 12 ஏவுதல்களை இலக்காக கொண்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 1-ந் தேதி காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில், 469 கிலோ எடை கொண்ட எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைகோளை (எக்ஸ்போசாட்) பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்திலான துருவமுனைப் பணியை வெற்றிகரமாக ஏவி இஸ்ரோ புத்தாண்டை சிறப்பாக தொடங்கியது.
தொடர்ந்து, வானிலை முன்அறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்து கொள்வதற்காக 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ பெங்களூருவில் வடிவமைத்து உள்ளது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தயார்நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி, அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.
காலநிலை தரவுகளை தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் இன்சாட்-3டி மற்றும் 3 டி.ஆர். செயற்கைகோள்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இன்சாட் அமைப்பின் திறன்களை கணிசமாக மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ஒரு பிரத்யேக வானிலை செயற்கைகோள் இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோளாகும
இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோள் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை வழங்குவதுடன் வானிலை முன் அறிவிப்பு திறன்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.
அத்துடன் இந்த செயற்கைகோள், 'டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர்' (டி.ஆர்.டி) போன்ற அத்தியாவசிய தகவல் தொடர்பு கருவிகளையும் கொண்டுள்ளது. இந்த கருவி தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து தரவுகளையும் பெறுகிறது. இன்சாட் 3 டி.எஸ். செயற்கைகோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன், நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதுதவிர பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.
- வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
- 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாலகுடாவில் உள்ள கல்லூரி அருகே வணிகவளாகத்தில் 4 வாலிபர்கள் நேற்று பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டு இருந்தனர்.
அதனை ஒரு வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 மணி நேரம் பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி வாலிபர்கள் அங்கேயே நின்று கொண்டு இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
- ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.
இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.
இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை முதல் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர். 33, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீ கந்தபுரம். அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி பைரப்பா பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசு சரியாக பால் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே தன்னுடைய பசுவை அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கு பைரப்பா விற்று விட்டார். பசுவை வாங்கிய விவசாயி அதை சரியாக பராமரித்து வளர்த்து வந்தார்.
நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது. இந்த விஷயம் பைரப்பாவிற்கு தெரியவந்து ஆவேசமடைந்துள்ளார்.
தன்னிடம் இருக்கும் போது குறைந்த அளவே பால் கொடுத்த அந்த பசு மாடு, விற்பனை செய்த பின்அதிக பால் கொடுத்து தன்னை வஞ்சித்து விட்டதாக மனதிற்குள்ளாகவே குமுறினார்.
விவசாயியின் தோட்டத்தில் இருந்த மாட்டை பார்த்த அவர் ஆத்திரம் தலைக்கேறி அதன் மடியை கத்தியால் அறுத்தார். பசு அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள்ளாக பைரப்பா தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.
- அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
- சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா, மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6).
நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு விஜய் இறந்தார்.
இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன், ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், வழியிலேயே அவர் இறந்தார். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.
தூங்கும் போது ஏதேனும் விஷ பூச்சி கடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இரவில் வீட்டில் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.
ஐதராபாத்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். ஜோ ரூட் இதுவரை 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2,535 ரன்னும், சுனில் கவாஸ்கர் 2,483 ரன்னும் எடுத்துள்ளனர்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஐதராபாத்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. தொடக்க ஜோடியாக இறங்கிய ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது. டக்கெட் 35 ரன்னும், கிராவ்லியை 20 ரன்னும், ஒல்லி போப் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். ஜோ ரூட் 29 ரன், பேர்ஸ்டோவ் 37 ரன், ஹார்ட்லி 23 ரன்கள் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- அவர் கட்சியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.
- கிருஷ்ண தேவராயலு எம்.பி.க்கு பதிலாக புதிய வேட்பாளரை நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நரசராவ்பேட்டை பாராளுமன்ற தொகுதி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் எம்.பி. கிருஷ்ண தேவராயலு திடீரென தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் கட்சியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கிருஷ்ண தேவராயலு எம்.பி.க்கு பதிலாக நரசராவ்பேட்டை தொகுதியில் புதிய வேட்பாளரை நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த கிருஷ்ண தேவராயலு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.
- கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.
திருப்பதி:
குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்தவர் பாவிகா மகேஸ்வரி (வயது 14). தீவிர ராம பக்தரான பாவிகா மகேஸ்வரி தனது அறிவு கூர்மையால் 10 வயதில் ராமாயண கதை முழுவதும் கற்றுத் தேர்ந்தார்.
பொதுமக்கள் இடையே ராமாயணம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். இவரது சொற்பொழிவு பொதுமக்களிடையே பிரபலமானது. பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.
2011-ம் ஆண்டு அங்குள்ள ஜெயிலுக்கு சென்று கைதிகளிடையே சொற்பொழிவு ஆற்றினார்.

இதையடுத்து கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.
சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சொற்பொழிவு செய்வதில் சிறுமிக்கு ரூ.52 லட்சம் நன்கொடையாக கிடைத்தது.

இந்த நிலையில் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை அறிந்த பாவிகா மகேஸ்வரி தனக்கு சொற்பொழிவு மூலம் நன்கொடையாக கிடைத்த ரூ.52 லட்சத்தை சிறப்பு நன்கொடையாக வழங்கினார்.
அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
- மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
- பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அவருக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நான் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் தீவிர ஆதரவாளர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

வருகிற 24-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
அவர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.
இந்த சந்திப்பு வருகிற 31-ந் தேதி வரை தொடரும் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
இதில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






