என் மலர்
இந்தியா

ஆந்திராவில் பாலஸ்தீன கொடியுடன் நின்ற 4 வாலிபர்கள் கைது
- வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
- 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாலகுடாவில் உள்ள கல்லூரி அருகே வணிகவளாகத்தில் 4 வாலிபர்கள் நேற்று பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டு இருந்தனர்.
அதனை ஒரு வாலிபர் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 மணி நேரம் பாலஸ்தீன தேசிய கொடியை கையில் பிடித்தபடி வாலிபர்கள் அங்கேயே நின்று கொண்டு இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.






