search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவிலுக்கு ராமாயண சொற்பொழிவாற்றி ரூ.52 லட்சம் வழங்கிய சிறுமி
    X

    அயோத்தி ராமர் கோவிலுக்கு ராமாயண சொற்பொழிவாற்றி ரூ.52 லட்சம் வழங்கிய சிறுமி

    • பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.
    • கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

    திருப்பதி:

    குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்தவர் பாவிகா மகேஸ்வரி (வயது 14). தீவிர ராம பக்தரான பாவிகா மகேஸ்வரி தனது அறிவு கூர்மையால் 10 வயதில் ராமாயண கதை முழுவதும் கற்றுத் தேர்ந்தார்.

    பொதுமக்கள் இடையே ராமாயணம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். இவரது சொற்பொழிவு பொதுமக்களிடையே பிரபலமானது. பாவிகா மகேஸ்வரியின் சொற்பொழிவை கேட்க பல்வேறு ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது.

    2011-ம் ஆண்டு அங்குள்ள ஜெயிலுக்கு சென்று கைதிகளிடையே சொற்பொழிவு ஆற்றினார்.


    இதையடுத்து கொரோனா மையங்கள் மற்றும் புது மேடைகளில் சொற்பொழிவு ஆற்ற பாவிகா மகேஸ்வரிக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

    சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சொற்பொழிவு செய்வதில் சிறுமிக்கு ரூ.52 லட்சம் நன்கொடையாக கிடைத்தது.


    இந்த நிலையில் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை அறிந்த பாவிகா மகேஸ்வரி தனக்கு சொற்பொழிவு மூலம் நன்கொடையாக கிடைத்த ரூ.52 லட்சத்தை சிறப்பு நன்கொடையாக வழங்கினார்.

    அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    Next Story
    ×