search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress Leaders"

    • பாஜகவில் இணையும் நிகழ்ச்சி பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • அசாம் மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    அசாம் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அங்கிதா தத்தா. இவரை அசாம் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக அங்கிதா தத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இதனால் அதிருப்தியில் இருந்த அங்கிதா தத்தா பாரதீய ஜனதா கட்சியில் இணையபோவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் இன்று மாலை பாஜகவில் இணையும் நிகழ்ச்சி கவுகாத்தி பாசிஸ்தாவில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அசாமில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் வருமாறு:-

    அசாம் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா, கும்தாய் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பிஸ்மிதா கோகோய், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் (ஏஏஎஸ்யு) முன்னாள் தலைவர் தீபங்க குமார் நாத் மற்றும் ஏஏஎஸ்யு முன்னாள் துணைத் தலைவர் பிரகாஷ் தாஸ்

    திலீப் பால், புருஷோதம் டோலி, மிலன்ஜோதி ராய், ஹிமான் பர்மன், ஜிதுமோனி புயான், தேபாஜித் பதிர், பிரசாந்தா ஹசாரிகா, மனோரஞ்சன் நாத், போனி பதக், ஷியாமல் நாராயண் தேப் மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஞான சக்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று பாஜகவில் இணைந்து உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் பாபேஷ் கலிதா, அசாம் கேபினட் அமைச்சர்கள் ஜெயந்தா மல்லபருவா, பிஜூஷ் ஹசாரிகா, எம்எல்ஏக்கள் திகந்தா கலிதா, மனாப் தேகா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, 6 மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
    ராஞ்சி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இதேபோல் பல்வேறு முன்னணி தலைவர்களும் தோல்வியைத் தழுவினர்.

    இந்த தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். உத்தர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநில தலைவர்களைத் தொடர்ந்து, பஞ்சாப், அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    இதுவரை 6 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், மேலும் சில மாநில தலைவர்கள் ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது.
    காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால், பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் வேண்டும்

    2014-ம் ஆண்டு 282 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு 200 இடங்களுக்குள்தான் வெற்றி கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    அதுபோல கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை சுமார் 100 இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். 2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் சில கட்சிகள் ஆதரவுடன் மன்மோகன்சிங் பிரதமராகி ஆட்சி நடத்தினார்.

    அப்படி பிரதமர் ஆக ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 272 இடங்களுக்கு மேல் கிடைக்காவிட்டால், ராகுல் காங்கிரஸ் சார்பில் எந்த முயற்சியையும் செய்ய மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

    நேரு, இந்திரா, ராஜீவ் போன்று பெரும்பான்மை பலத்துடன் மட்டுமே ஆட்சியில் அமர ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.


    அதே சமயத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ராகுல் ஈடுபடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அதற்காக மாநில கட்சித் தலைவர்கள் யாராவது ஒருவர் ஒருமித்த முடிவுடன் பிரதமராக முன் வந்தால் அவரை ராகுல் ஏற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் நிறைய எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையிலும் 32 எம்.எல்ஏ.க்கள் மட்டுமே வைத்துள்ள குமாரசாமியை முதல்-மந்திரியாக ஏற்றுக் கொண்டது போல 30 எம்.பி.க்களே வைத்திருந்தாலும் மாநில கட்சித் தலைவரை பிரதமராக ஏற்க ராகுல் தயாராகி வருகிறார்.

    272 இடங்களில் வெற்றி கிடைக்காது என்பதை ராகுல் உணர்ந்து இருப்பதால் 3-வது அணி அமைக்கும் முயற்சியை சிலர் மேற்கொண்டிருப்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதோடு பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் ராகுல் ஓசையின்றி ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அவர் ஏ.கே. அந்தோணி, அசோக் கெலாட், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், நவீன்பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருடன் இப்போதே தொடர்பை ஏற்படுத்தி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆட்சி அமைவதைத் தடுக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ராகுல் காந்தி அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார். #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை சந்திக்க அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் கமிஷனும் தேர்தலை நடத்துவதற்கான முதல்கட்ட ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து வருகின்றன. தேசிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அனைத்து மாநில தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    டெல்லியில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் வகையில் மாநில அளவில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள கட்சிகள், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் சில அறிவுரைகளை ராகுல் காந்தி வழங்கினார். குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அக்கட்சியின் ஊழல்கள் குறித்து மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்தும் மக்களிடம் விளக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான அரசில் மக்களுக்கு செய்த சாதனைகளை பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுடன் ஒப்பிட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியதாக மாநில தலைவர்கள் தெரிவித்தனர்.

    ராகுல் காந்தியும் இந்த ஆலோசனை கூட்டம் பற்றி டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், “இந்தியா முழுவதும் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஆகியோரை நான் சந்தித்தேன். தேர்தலுக்கு தயாராவது குறித்தும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் நிலைமைகள் குறித்தும் அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தோம்” என்று கூறியுள்ளார்.
    காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று லக்னோவில் அறிவிப்போம் என்று குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். #Congress #GhulamNabiAzad #SPBSP
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக்கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

    எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசரமாக நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் ராஜ்பப்பர், மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    முன்னதாக மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. குறிப்பாக குலாம்நபி ஆசாத் பேசும்போது, ‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்து நாங்களும் கேள்விப்பட்டோம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை (இன்று) லக்னோவில் அறிவிப்போம்’ என்று மட்டுமே பதிலளித்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. #Congress #GhulamNabiAzad #SPBSP
    அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஊழலில் ரூ.150 கோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். #YogiAdityanath #BJP
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ரூ.3,700 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ரூ.360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. இதில் ரூ.150 கோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அகஸ்டாவெஸ்ட்லேண்ட் அதிகாரிகள் ஏற்கனவே இத்தாலி கோர்ட்டால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் இத்தாலிக்கு வெளியே உள்ளதாகவும் கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியென்றால் அவர்கள் யார்? இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியாகாந்தி பெயரை குறிப்பிட்டதன் மூலம் காங்கிரஸ் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகிறது.



    அனைத்து ராணுவ ஒப்பந்தங்களிலும் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பிரச்சினையில் அதன் முகமூடி அவிழ்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் உண்மையை உணர்ந்து வருகிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு தண்டனை வழங்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #YogiAdityanath #BJP
    இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு வெளியே நேற்று போராட்டம் நடத்தினர். #Congress #LeaderProtest #RBIOffice #Delhi
    புதுடெல்லி:

    கள்ள நோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்தி நேற்று முன்தினத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

    பிரதமர் மோடியின் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியில் முடிந்துவிட்டதாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

    அந்த வகையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு வெளியே நேற்று போராட்டம் நடத்தினர். இளைஞர் காங்கிரஸ் அமைப்பு நிர்வாகிகள் உள்பட சுமார் 100 பேர், மோடியின் முகமூடிகளை அணிந்துகொண்டும், ரூபாய் நோட்டுகளால் ஆன மாலைகளை அணிந்துகொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாதுகாப்புபடை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, குண்டு கட்டாக தூக்கிச் சென்று, பஸ்சில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். 
    இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவுதினத்தையொட்டி, டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    புதுடெல்லி:

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிதர் ஜவஹர்லால் நேரு 27.5.1964 அன்று இயற்கை எய்தினார். அவர் மறைந்த 54-வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.



    இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேருவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    ×