என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 15 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட இந்த திமிங்கல சுறா சுமார் 2000 கிலோ இருக்கும்.
- இறந்த திமிங்கலத்தின் மீது குழந்தைகள் ஏறி குதித்து விளையாடினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடற்கரையில் நேற்று இறந்த திமிங்கல சுறா ஒன்று ஒதுங்கியது. 15 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட இந்த திமிங்கல சுறா சுமார் 2000 கிலோ இருக்கும்.
இதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இறந்த திமிங்கலத்தின் மீது குழந்தைகள் ஏறி குதித்து விளையாடினர். இதனை குழந்தைகளின் பெற்றோர் வீடியோவாக எடுத்தனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இறந்த திமிங்கல சுறா உடலை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
- ரங்கநாயகர் மண்டபத்தில் சசிகலாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதி:
சசிகலா நேற்று இரவு திருப்பதி வந்தார். அங்குள்ள வராஹ சாமியை வழிபட்டார். தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன் பின் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் ஏழுமலையான் கோவில் எதிரில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.
புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
- தீயணைப்பு வண்டிகள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
- தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாகாவில் 3 மாடி கட்டிடத்தில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2-வது, 3-வது மாடியில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வண்டிகள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. கல்வி நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
#WATCH | Andhra Pradesh: A fire broke out at an educational institute in Gajuwaka, Visakhapatnam. Fire tenders are at the spot and efforts to douse the fire underway. pic.twitter.com/0DbcCjuk05
— ANI (@ANI) February 27, 2024
- சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பிரபலம் அடையும்.
- மிதக்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரையில் ரூ.1.60 கோடியில் மிதக்கும்பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. ரூ.1.60 கோடி செலவில் ஆலாலா எனும் மிதக்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த மிதக்கும் பாலத்தை ராஜ்யசபா எம்.பி ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காலை திறந்து வைத்தனர்.
மிதக்கும் பாலத்தை சுப்பா ரெட்டி திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பிரபலம் அடையும்.
மேலும் இன்று முதல் மிதக்கும் பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். பாலம் திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிக வேகத்தில் பலமான காற்று வீசியது. இதில் பெரிய அலைகள் வந்து கடற்கரையை தாக்கியதால் அரிப்பு ஏற்பட்டது.
இதனால் திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் மிதக்கும் பாலம் இடிந்து விழுந்து கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. மிதக்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பலான பிரஹரியும் சேதம் அடைந்தது.
- சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
- தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதா தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது.
தொகுதி உடன்பாடு ஏற்படும் முன்னதாகவே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ளது.
இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளின் கருத்துக்களை ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அந்த மாநில தலைவர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி தொகுதியில் பா. ஜனதா வேட்பாளராக மாநில செயலாளர் முனி சுப்பிரமணியம் அல்லது கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்தன பிரபாவின் மகள் நிகாரிகா ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
- பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளனர்.
பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவின் குப்பம் தொகுதியில் பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை சாந்திபுரம் அரசு நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்.
இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகத்தில் பாயும் பாலாறு நதி வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைந்து முடித்து, பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளனர்.
- பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
- சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,
தெலுங்கு தேசம் கட்சியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 24 இடங்களை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.
பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
ஆனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என பவன் கல்யாண் பேசுவது கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.
இதனால் தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன் கல்யாண்.
40 ஆண்டுகால அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்ளும் சந்திரபாபு நாயுடு கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.
- இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த கொல்ல பள்ளியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை சிக்கல பைலு பால் பண்ணைக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
மதனப்பள்ளி புறநகரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
காரில் வந்தவர்கள் தப்பி செல்வதற்காக காரை வேகமாக ஓட்டினர். அப்போது எதிரே வந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருந்த 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் மதனப்பள்ளி அடுத்த ராமராவ் காலனியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் காக்கிநாடா பதிப்பாடு நெடுஞ்சாலையில் தாசரி பிரசாத் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். அப்போது லாரி பஞ்சரானது. லாரியை நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தினார். அவருக்கு உதவியாக தாசரி கிஷோர், நாகையா, கிளீனர் ராஜு ஆகியோர் லாரியின் டயரை கழற்றிக்கொண்டு இருந்தனர்.
அப்போது வேகமாக வந்த ஆந்திர மாநில அரசு பஸ் லாரி டயரை மாற்றிக்கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன்.
- எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி. யாக இருப்பவர் ரகு ராமகிருஷ்ண ராஜி. இவர் தனது எம்.பி. பதிவையே ராஜினாமா செய்து முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார்.
நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போன்று பல்வேறு முயற்சிகளை செய்தீர்கள். அந்த முயற்சிகள் எதுவும் உங்களுக்கு பயன் தரவில்லை. என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நர்சாபுரம் தொகுதிக்காகவும், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் போற்றத்தக்க நேர்மையான செயல்களை செய்து இருக்கிறேன்.
கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன். இவ்வாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பி.க்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- பயனர்கள் பலரும் சாய் திருமலாநீதியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உலகின் மிகச்சிறிய வாஷிங்மெஷினை உருவாக்கி ஆந்திராவை சேர்ந்த சாய் திருமலாநீதி என்பவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சாய் திருமலாநீதி ஒரு சிறிய வாஷிங்மெஷினை உருவாக்கும் செயல்முறை காட்சிகள் உள்ளது. மிகவும் நுணுக்கமான கவனிப்புடன், சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை பயன்படுத்தி அவர் வாஷிங்மெஷினை ஒருங்கிணைக்கிறார். அது முழுமையாக செயல்பட தொடங்குகிறது.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றுகிறார். அதன்பிறகு ஒரு சிறிய துணியை போட்டு சலவை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சாய் திருமலாநீதியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
- 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.
- 82 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 11 அதிகாரிகள் காஜி கப்பலுடன் மூழ்கினர்.
- இரண்டாம் உலகப் போரில் நடந்த தாக்குதலிலும் ஜப்பானிய கடற்படையின் ஆர்.ஓ-110 என்ற கப்பலும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம் பில்லி பகுதியின் கடற்கரையில் மூழ்கடிக்கப்பட்டது.
திருப்பதி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரின் போது பாகிஸ்தான் அமெரிக்க தயாரிப்பான காஜி நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தியது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தை கண்டுபிடித்து அழிக்க பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் காஜி விரைந்தது. 4,800 கிலோமீட்டர் தூரம் கடலை அமைதியாக கடந்த காஜி நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டினத்தை அடைந்தது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்க இந்தியா தனது நாசக்கார கப்பலான ஐ.என்.எஸ்.ராஜ் புட்டை அனுப்பியது. இது துல்லியமாக கண்காணித்து பாகிஸ்தானின் காஜி கப்பலை தாக்கியது. இதில் நிலைகுலைந்த பாகிஸ்தான் கப்பல் கடலுக்கு அடியில் மூழ்கியது. இதில் இருந்த 82 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 11 அதிகாரிகள் காஜி கப்பலுடன் மூழ்கினர். இது இந்தியா பாகிஸ்தான் போரில் ஒரு உயர்ந்த தாக்குதலாக கருதப்பட்டது. 1972-ம் ஆண்டு வங்காள தேசம் உருவாகியதுடன் அந்த போர் முடிவுக்கு வந்தது.
இதேபோல் இரண்டாம் உலகப் போரில் நடந்த தாக்குதலிலும் ஜப்பானிய கடற்படையின் ஆர்.ஓ-110 என்ற கப்பலும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம் பில்லி பகுதியின் கடற்கரையில் மூழ்கடிக்கப்பட்டது.
கடலுக்கு அடியில் சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கிடக்கும் இந்த கப்பல்களை இந்திய கடற்படை தொடவில்லை. துணிச்சலான வீரர்களின் இளைப்பாறும் இடம் என அதனை வீரர்கள் நம்புகிறார்கள். கடற்படை பாரம்பரியத்தின் படி போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கடற்படை இந்த கப்பல்களை இதுவரை தொடவில்லை.
இந்த நிலையில் 1971-ம் ஆண்டு மூழ்கிய பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் விசாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்டன.
கடற்கரையில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் 100 மீட்டர் ஆழத்தில் இந்த கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






