என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan submarine"

    • 82 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 11 அதிகாரிகள் காஜி கப்பலுடன் மூழ்கினர்.
    • இரண்டாம் உலகப் போரில் நடந்த தாக்குதலிலும் ஜப்பானிய கடற்படையின் ஆர்.ஓ-110 என்ற கப்பலும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம் பில்லி பகுதியின் கடற்கரையில் மூழ்கடிக்கப்பட்டது.

    திருப்பதி:

    இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரின் போது பாகிஸ்தான் அமெரிக்க தயாரிப்பான காஜி நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தியது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தை கண்டுபிடித்து அழிக்க பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் காஜி விரைந்தது. 4,800 கிலோமீட்டர் தூரம் கடலை அமைதியாக கடந்த காஜி நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டினத்தை அடைந்தது.

    இந்த நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்க இந்தியா தனது நாசக்கார கப்பலான ஐ.என்.எஸ்.ராஜ் புட்டை அனுப்பியது. இது துல்லியமாக கண்காணித்து பாகிஸ்தானின் காஜி கப்பலை தாக்கியது. இதில் நிலைகுலைந்த பாகிஸ்தான் கப்பல் கடலுக்கு அடியில் மூழ்கியது. இதில் இருந்த 82 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 11 அதிகாரிகள் காஜி கப்பலுடன் மூழ்கினர். இது இந்தியா பாகிஸ்தான் போரில் ஒரு உயர்ந்த தாக்குதலாக கருதப்பட்டது. 1972-ம் ஆண்டு வங்காள தேசம் உருவாகியதுடன் அந்த போர் முடிவுக்கு வந்தது.

    இதேபோல் இரண்டாம் உலகப் போரில் நடந்த தாக்குதலிலும் ஜப்பானிய கடற்படையின் ஆர்.ஓ-110 என்ற கப்பலும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம் பில்லி பகுதியின் கடற்கரையில் மூழ்கடிக்கப்பட்டது.

    கடலுக்கு அடியில் சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கிடக்கும் இந்த கப்பல்களை இந்திய கடற்படை தொடவில்லை. துணிச்சலான வீரர்களின் இளைப்பாறும் இடம் என அதனை வீரர்கள் நம்புகிறார்கள். கடற்படை பாரம்பரியத்தின் படி போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கடற்படை இந்த கப்பல்களை இதுவரை தொடவில்லை.

    இந்த நிலையில் 1971-ம் ஆண்டு மூழ்கிய பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் விசாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்டன.

    கடற்கரையில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் 100 மீட்டர் ஆழத்தில் இந்த கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×