search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "floating bridge"

    • கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல்.
    • கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு.

    கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.

    இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கேரளா வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக மிதக்கும் பாலத்தில் நடந்து அந்த அனுபவத்தை பெறுவது வழக்கமாகிவிட்டது.

    இந்நிலையில், மிதக்கும் பாலம் உடைந்ததில் 15 பேர் கடலில் விழுந்தனர்.

    கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கடல் நீரைக் குடித்ததால் 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பிரபலம் அடையும்.
    • மிதக்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரையில் ரூ.1.60 கோடியில் மிதக்கும்பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. ரூ.1.60 கோடி செலவில் ஆலாலா எனும் மிதக்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த மிதக்கும் பாலத்தை ராஜ்யசபா எம்.பி ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காலை திறந்து வைத்தனர்.

    மிதக்கும் பாலத்தை சுப்பா ரெட்டி திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

    சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பிரபலம் அடையும்.

    மேலும் இன்று முதல் மிதக்கும் பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். பாலம் திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிக வேகத்தில் பலமான காற்று வீசியது. இதில் பெரிய அலைகள் வந்து கடற்கரையை தாக்கியதால் அரிப்பு ஏற்பட்டது.

    இதனால் திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் மிதக்கும் பாலம் இடிந்து விழுந்து கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. மிதக்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பலான பிரஹரியும் சேதம் அடைந்தது.

    ×