என் மலர்
இந்தியா

திமிங்கல சுறா மீது சிறுவர்கள் ஏறி விளையாடிய காட்சி.
ஆந்திரா கடற்கரையில் ஒதுங்கிய 15 அடி திமிங்கல சுறா
- 15 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட இந்த திமிங்கல சுறா சுமார் 2000 கிலோ இருக்கும்.
- இறந்த திமிங்கலத்தின் மீது குழந்தைகள் ஏறி குதித்து விளையாடினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடற்கரையில் நேற்று இறந்த திமிங்கல சுறா ஒன்று ஒதுங்கியது. 15 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட இந்த திமிங்கல சுறா சுமார் 2000 கிலோ இருக்கும்.
இதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இறந்த திமிங்கலத்தின் மீது குழந்தைகள் ஏறி குதித்து விளையாடினர். இதனை குழந்தைகளின் பெற்றோர் வீடியோவாக எடுத்தனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இறந்த திமிங்கல சுறா உடலை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
Next Story






