என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம்.
    வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 35 சதவீதம் கால்சியம், 25 சதவீதம் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது. பசும் பாலை விட இதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

    கலோரியும் குறைவான அளவில்தான் உள்ளது. பசும் பாலை விட இதில் கால்சியமும் அதிகம் கலந்திருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம். மற்ற பாலை விட இதில் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. பசியை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

    ஓட்ஸ் பால் தயாரிப்பதும் எளிமையானது. ஒரு கப் ஓட்ஸை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனுடன் மூன்று கப் தண்ணீர், கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். ஓட்ஸ், தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியில் துணியில் வடிகட்டி பருகலாம். இந்த ஓட்ஸ் பாலை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஓட்ஸ் பாலுடன் தேன் கலந்தும் பருகலாம்.
    அன்னாசியில் பல வகை ஊட்டச்சத்துகள் உள்ளதை பலரும் அறிவதில்லை. அன்னாசி பழச்சாறை அருந்துவதால் நல்ல உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் காணப்படும்.

    அன்னாசிப் பழத்தின் சாறு மிகுந்த சுவையுடன் இருக்கும். இயற்கையாகவே இதில் சர்க்கரை அதிகமாக இருக்கும். இதனால் அனைவரும் இந்த பழச்சாற்றை பெரிதும் விரும்புவர். ஆனால் இதில் பல வகை ஊட்டச்சத்துகள் உள்ளதை பலரும் அறிவதில்லை. இந்த பழச்சாறில் ப்ரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும் முக்கியமான என்சைம் ஆகும். மேலும் பொட்டாசியம், பி வைட்டமின்கள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து உள்ளது. உயர் ரத்த அழுத்தம், குறைந்த வளர்சிதை மாற்றம், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, கருவுறுதலில் பிரச்சினைகள், வீக்கங்கள், புற்றுநோய் அபாயம், மலச்சிக்கல், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அன்னாசி பழச்சாறை தொடர்ந்து அருந்தலாம்.

    பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்திற்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். இது ஒரு சிறந்த குழல் விரிப்பி. அதனால் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது. இதனால் இதய நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் மாரடைப்பு, வாதம் போன்றவற்றின் அபாயங்கள் குறைகிறது.

    இந்த பழச்சாறில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் அன்னாசி பழச்சாறில் அஸ்கார்பிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் வைட்டமின் சி ஊட்டச்சத்து இன்னும் அதிகரிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுவே உடலை காக்கும் அரணாக இருக்கிறது.



    வைட்டமின் பி அன்னாசி சாறில் அதிகமாக உள்ளது. இது மன நிலையை மேம்படுத்தி, ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. இதனை அருந்துவதால் பதற்றம் தணிக்கப்படுகிறது. கீல் வாதத்தின் அறிகுறிகளை களைகிறது. அன்னாசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ப்ரோமெலைன் போன்றவை குடல் இயக்கத்தை அதிகப்படுத்தி சரியான ஊட்டச்சத்துகள் செரிமான மண்டலத்தில் சேர்வதற்கு உதவுகின்றன.

    அன்னாசி பழச்சாறை அருந்துவதால் நல்ல உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் காணப்படும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, உடலில் நீர்ச்சத்தை சமன் செய்கிறது. நரம்புகள் தூண்டப்பட்டு, தசைகள் சுருங்கும் தன்மை சீராக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்த தசை செயல்பாடு இருப்பது அவசியம். அவர்கள் அன்னாசி சாறை குடிப்பதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

    இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வதால் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. அவை, கர்ப்ப கால சிக்கல்கள், நீரிழிவு பாதிப்புகள், எடை அதிகரிப்பு, ஒவ்வாமை, ரத்தப்போக்கு போன்றவை ஆகும். அன்னாசியை அளவாக உட்கொண்டால் சிறந்த பலன்களை அடையலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஹோட்டலில் செய்வதைப்போல் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ,
    சோளமாவு, மைதா - தலா 25 கிராம்,
    முட்டை - 1,
    கொத்தமல்லி - சிறிது,
    எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 2,
    பூண்டு - 6 பல்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சைமிளகாய் - 5,
    சோயா சாஸ், தக்காளி சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :


    கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    ஊற வைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன்  சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மீன் மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்சனைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்.
    குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்சனைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று பெயர். பிறந்த பிறகும் சில குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம். சுருக்கமாக Torticollis எனப்படுகிற பிரச்சனை கழுத்துத் தசைகளுடன் தொடர்புடையது.

    காரணம் என்ன?

    கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் காதுகளின் பின்னாலிருந்து கழுத்து எலும்பு வரை நீளமான தசை இருக்கும். இதற்கு எஸ்.சி.எம் அல்லது Sternocleidomastoid என்று பெயர். பிறந்த குழந்தைக்கு இந்த பிரச்னை வந்தால் ஒரு பக்க தசை சிறியதாகிவிடும்.

    குழந்தை கருவில் இருந்தபோது குறுக்கி கொண்டிருந்தாலோ அல்லது தாயின் வயிற்றுக்குள் அசாதாரண நிலையில் இருந்தாலோ இந்த பிரச்னை வரலாம். குழந்தையை ஆயுதம் போட்டு வெளியில் எடுத்திருந்தாலும் இந்த பிரச்னை வரலாம்.

    அறிகுறிகள் இவைதான்பிறந்த 6 முதல் 8 வாரங்களுக்கு பெற்றோரால் குழந்தையிடம் எந்த அறிகுறியையும் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைக்கு தலை மற்றும் கழுத்தில் ஓரளவு பேலன்ஸ் வந்த பிறகே கழுத்து சுளுக்கு வாதத்துக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

    தாடையானது தோள்பட்டையை தொட்டபடி குழந்தையின் கழுத்து ஒரு பக்கமாக சாயும். 75 சதவிகித குழந்தைகளுக்கு வலது பக்கத்திலேயே பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது. குழந்தையால் கழுத்தை இடவலமாகவோ, மேலும் கீழுமாகவோ சுலபமாக திருப்ப முடியாது.



    குழந்தையின் கழுத்துப் பகுதியில் சின்னதாக கட்டி போன்ற ஒன்றை உணரலாம். இது பயப்பட வேண்டியதல்ல. காலப்போக்கில் தானாக மறைந்துவிடும்.குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

    கழுத்தை திருப்ப முடியாததே காரணம். குழந்தை மிகவும் கஷ்டப்பட்டு தன் கழுத்தை மற்ற திசைகளில் திரும்ப முயற்சிக்கும். ஆனால், அது முடியாததால் விரக்தியடையும். ஒரே பக்கத்தில் படுத்திருப்பதால் குழந்தையின் ஒரு பக்க தசைகள் தட்டையாக மாறும்.

    மேலே சொன்ன அறிகுறிகளை உங்கள் குழந்தையிடம் கண்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்கவும். குழந்தையால் எந்த அளவுக்கு கழுத்தை திருப்ப முடிகிறது என்பதை மருத்துவர் பரிசோதிப்பார்.

    பிரச்னையின் தீவிரத்துக்கேற்ப அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே எடுக்க சொல்வார். கழுத்து சுளுக்கு வாத பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு இடுப்பெலும்பிலும் பிரச்னைகள் இருக்கலாம். பெரும்பாலும் இந்த குழந்தைகளுக்கு வேறு எந்த பிரச்னைகளும் இருக்காது.

    அரிதாக சிலருக்கு தொற்று, எலும்புகள் உடைதல், அலர்ஜி போன்றவையும் டவுன் சிண்ட்ரோம் மாதிரியான பிரச்னைகளும் வரலாம். சீக்கிரமே கண்டுபிடித்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம். பிற்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியிலும் பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம். 
    வேக்ஸின் செய்யும்போது முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது. தற்போது நான்கு வகையான வேக்ஸின்கள் டிரெண்டிங்கில் உள்ளது.
    நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். வேக்ஸின் செய்யும்போது மட்டுமே நிமிடத்திற்குள் முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது. வேக்ஸினை சூடேற்றி உருக வைத்த நிலையில், சருமத்தில் தடவி ஸ்டிரிப் கொண்டு அதன் மேல் ஒட்டி நீக்கும் முறையை வேக்ஸினாக அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது.

    மாத்திரை வடிவிலான வேக்ஸின்களும் சந்தைகளில் கிடைக்கிறது. அதும் உருகும் தன்மை கொண்டதே. சில வகை வாக்ஸின்கள் தோலில் ஒட்டாமல் முடியில் மட்டும் ஒட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டு வரும்.உடலில் இருக்கும் ரோமங்களை நீக்குவது அழகு சார்ந்த விசயமே. முடி இல்லாத கைகளும், கால்களும் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக வழுவழுப்பான தன்மையில் மென்மை தன்மை கொண்ட தோலாக தோற்றம் கொடுக்கும். கூடுதல் பொலிவு சருமத்திற்கு கிடைக்கும். ஒருவித குளிர்ச்சித் தன்மை சருமத்திற்கு கிடைத்துவிடும்.

    சில வகையான வேக்ஸின்கள் சருமத்தின் நிறத்தை மாற்றிக்காட்டும் தன்மை கொண்டது. முக்கியமாக முகத்தைப் பொறுத்தவரை வேக்ஸின் பண்ணாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் ஸ்டிரிப் கொண்டு சருமத்தை வேகமாக பிடித்திழுக்கும்போது, முகத்தில் இருக்கும் சருமத்தில் தேவையற்ற பாதிப்புகள் நேரலாம்.

    தற்போது அழகு நிலையங்களில் நான்கு வகையான வேக்ஸின்கள் டிரெண்டிங்கில் உள்ளது…

    1. கோல்ட்(cold) வேக்ஸ்
    2. ஹாட்(hot) வேக்ஸ்
    3. ஸாஃப்ட்(soft) வேக்ஸ்
    4. ஹார்ட்(hard) வேக்ஸ்



    கோல்ட்(cold) வேக்ஸ்

    இது உருகிய நிலையிலேயே இருக்கும். சற்றே திக்கான ஆனால், லிக்யூட் வடிவில் காணப்படும். இதனை சருமத்தில் தடவியதும், ஸ்டிக்கர் டைப்பில் ஒட்டி எடுப்பதுபோல் வரும் ஸ்டிரிப் கொண்டு வேக்ஸ் மேல் வைத்து ஒட்டி எடுக்க வேண்டும். ஒரே முறையில் அனைத்து முடியும் நீங்கி விடும். இதில் வலி என்பது குறைவாகவே இருக்கும்.

    ஹாட்(hot) வேக்ஸ்

    இது க்ரீம் வடிவில் இருக்கும். வாக்ஸின் ஹீட்டரில் இந்தக் க்ரீமை நிறப்பி ஹீட் செய்து ஐஸ் குச்சி வடிவில் இருக்கும் சிப் கொண்டு எடுத்து தடவும் முறை. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவி முடிகளை நீக்குதல் வேண்டும்.

    ஸாஃப்ட்(soft) வேக்ஸ்

    கோல்ட் வேக்ஸ் மாதிரியான ஒரு ஃபீல் இந்த வேக்ஸில் இருக்காது. இது செமி சாலிட் வடிவில் இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேக்ஸை ஹீட் பண்ணி கையில் அப்ளை பண்ணிவிட்டு, காடா துணியை வைத்து தேய்த்து இழுப்பார்கள். முடி மொத்தமும் துணியில் ஒட்டிக் கொள்ளும். இப்போது பேப்பர் வடிவிலான ஸ்டிப் பயன்பாட்டில் உள்ளது.

    ஹார்ட்(hard) வேக்ஸ்

    ஹார்ட் வேக்ஸை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. துணியோ ஸ்டிரிப்போ இதற்குத் தேவையில்லை. ஹார்ட் வேக்ஸினை சிறிது எடுத்து ஹீட் செய்து கையில் தடவி ஆறியதும் திக்கான நிலைக்கு மாறும். பிறகு விரலால் உறித்து எடுத்தல் வேண்டும். மற்ற வேக்ஸைவிட இதில் வலி சற்று குறைவாக இருக்கும். மென்மையான சருமம் கொண்ட பிறப்புறுப்பு பகுதிகளில் இதை பயன்படுத்தலாம். பெரும்பாலும் அழகு நிலையங்களில் ஹீட் செய்து பயன்படுத்தும் வேக்ஸ் களையே அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

    சருமத்தின் தன்மைக்கு ஏற்ப நிறைய வகைகள் உள்ளது. அதாவது வறண்ட சருமம், சென்சிட்டிவான சருமம், எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு ஏற்ப சுகர் வேக்ஸ், சாக்லெட் வேக்ஸ், க்ரீன் ஆப்பிள் வேக்ஸ், ஸ்ட்ராபெர்ரி வேக்ஸ், ரோஸ் வேக்ஸ், பியர்ல் வேக்ஸ், கோல்ட் வேக்ஸ், ஆலுவேரா வேக்ஸ் என நிறைய ப்ளேவர்ட் வேக்ஸ்கள் சந்தைகளில் கிடைக்கிறது. சிலவகை வேக்ஸ்களில் சருமத்திற்கு பொலிவும் பளபளப்பும் கூடுதலாகக் கிடைக்கும். உங்கள் சருமத்திற்கு எது ஏற்றதோ, எது தேவையோ அந்த வேக்ஸை அழகுக்கலை நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    இந்த ஆசனம் அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இடுப்பு வலியைப் போக்குகிறது.
    செய்முறை : விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 5-ந்திலிருந்து 7 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள் : அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாக்குகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலியைப் போக்குகிறது. முதுகுவலியைப் போக்குகிறது.

    கணையச் சுரப்பியின் வேலையைத் தூண்டுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. செரிமான உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. இரைப்பையில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுகிறது. தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி.

    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் கேழ்வரகு, கோதுமையை சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்று இந்த இரண்டு மாவையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 3,
    பச்சை மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை கேழ்வரகு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.
    சாத்தூரைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நபரின் ரத்தத்தைச் செலுத்தியதால் அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    எச்.ஐ.வி. என்ற வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டிலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் 1986-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்தம் செய்யப்படாத ஊசி, பாதுகாப்பற்ற உடலுறவு, கவனிக்கப்படாத கருவுற்ற தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தை ஆகிய நான்கு வழிகளில் எச்.ஐ.வி. தொற்று பரவும்.

    பொதுவாக ரத்தம் கொடுக்க தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் எடுக்கப்படும் அனைத்து ரத்ததான பைகளை மற்றவர்களுக்கு ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமான பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தில் பாதிப்பு இல்லை என்று அச்சிடப்பட்ட சான்றிதழ் ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்துவதால் விளையக்கூடிய தொற்றை உடனடியாக தடுக்க முடியும்.

    சாத்தூர் பெண்ணுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வு ரத்த வங்கி ஊழியர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்க வேண்டும். ரத்ததானம் அளித்த அந்த இளம் நபர் சமீபத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆட்பட்டு, ரத்தக்கூறு மாற்று கண்டுபிடிக்கக்கூடிய கால அவகாசத்திற்கு முன்னரே தனது உறவினருக்காக ரத்ததானம் அளித்திருக்கக்கூடும்.

    பாதுகாப்பற்ற உடல் உறவினால் சிறுதுளியில் வரக்கூடிய எய்ட்ஸ் தொற்றை எலிசா முறையில் கண்டுபிடிக்க மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை ஆகலாம்.

    250 மில்லி லிட்டர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, ரத்தத்தை பெறும் மற்றவருக்கு ஒருசில நாட்களிலேயே எச்.ஐ.வி. முதல் நிலையான குறுகிய கால ரத்தக்கூறு மாற்று நிலை ஏற்படக்கூடும். சாத்தூர் பெண்ணுக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே அவர் கடுமையான காய்ச்சலுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காய்ச்சல் எச்.ஐ.வி.யின் அறிகுறி. பரிசோதனையின் போது எச்.ஐ.வி. தொற்று இந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனமான உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரத்தம்தான் பாலாக சுரக்கிறது. எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.

    அந்த பெண்ணுக்கு நிச்சயமாக தொற்றுக்கு பின் தர வேண்டிய தடுப்புபடி எச்.ஐ.வி. கூட்டு மருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக இது நான்கு வாரங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஆபத்தான நிகழ்வுக்கு பின் மூன்று நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பெண்ணுக்கு மற்ற எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பிரவச காலம் வரை நீடிக்கப்பட வேண்டும்.



    இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று முழுவதுமாக தடுக்கப்படுவது சாத்தியமாகும். அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு நிவரம்பின் சிரப் அளிப்பதன் மூலம் எஞ்சிய வாய்ப்பும் முற்றிலுமாக தடுக்கப்படும்.

    என்றாலும் தொடர்ந்து தாய்பாலின் மூலம் எச்.ஐ.வி. தொற்று வரும் வாய்ப்பு 10 சதவீதம் இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு தாய்க்கு வைரஸ் எண்ணிக்கை செய்யப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். தாயும், குழந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். எச்.ஐ.வி. நோய் தொடக்க காலத்தில் மருந்து எதுவும் இல்லாததால் கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது. தற்போது ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்று எச்.ஐ.வி.யையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி. தொற்றுக் கிருமிகள் பாதிக்கப்பட்டவர்கள் முறையான கூட்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியும்

    மன உளைச்சலுடன் இருக்கும் சாத்தூர் பெண்ணுக்கு நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ஆலோசனைகளை கூற வேண்டும். எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த மருந்து இருக்கிறது என்று அவரை நம்பும்படி செய்ய வேண்டும்.

    இன்று கிராம மக்களும், படித்தவர்களும், அறியாமையால் ரத்த சோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றுங்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. மருத்துவர்கள் ரத்த சோகையை நீக்க தேவையான சத்துணவு உணவுகளையும், மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிலர் ரத்தம் ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

    தேவையான போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, சாலை விபத்து, அதிக உதிரப் போக்கு, அணுக்கள் குறைபாடு உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான அளவு ரத்தத்தை முன்கூட்டியே முறையாக பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துவார்கள்.

    பெண்கள் கருவுற்றவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த சோதனை மறுக்காமல் முறையாக செய்துகொள்ள வேண்டும்.

    ரத்த சோதனையின் போது இரும்பு சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா என்று ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதனால் ரத்தம் ஏற்றப்படுவது குறைவாகவே உள்ளது. இன்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மருத்துவ உதவிகளையும் மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

    சாத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும் நிகழ்வு. இது மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாடமாக அமைந்து, மற்றொரு இதுமாதிரியான நிகழ்வு நடக்காதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் தங்களுக்கு ஒரு பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். சிறந்த உயிர் காப்பு மருந்தாக திகழும் ரத்தமேற்றுதல் பக்க விளைவுகள் கொண்ட ஒரு அபாயகரமான மருந்தாகவும் நிகழக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. இதில் மனித தவறுகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதை ரத்த வங்கிகளில் பணிபுரியும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ரத்த வங்கியில் தானம் செய்ய வரும் உன்னத கொடையாளி நுழையும் தருணத்தில் இருந்து, ரத்தப்பை வெளியே செல்லும் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகள் அனைவராலும், அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிறர் நலனுக்காக தன் நலனை பேணி காக்கும் தன்னார்வ ரத்த கொடையாளிகள் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும்.

    ரத்தம் ஏற்றுவது கடைசி ஆயுதமாக அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டும். மாற்று வழிகளை முதலில் செய்ய வேண்டும். அவசியமாக தேவைப்படும் போது, முழு ரத்தம் கேட்காது அந்தந்த ரத்த கூறுகளை மட்டும் கேட்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது ஒரு மருத்துவ உதவியாளர் அருகில் இருக்க வேண்டும்.

    ரத்த வங்கி ஒழுங்கு முறைகள் எழுத்திலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்படுவதே இம்மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,
    முன்னாள் துணை இயக்குனர்,
    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்.
    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள்.
    நமக்கு முந்தைய தலைமுறையினர் சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளுக்கு மான ஆதாரம். அதில் தான் விலாசங்களும், தொலைபேசி எண்களும், கடன் பாக்கிகளும் எழுதப்பட்டிருக்கும். இன்றைக்கு அது டிஜிட்டல் மயமாகிவிட்டது. நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் நமது நடமாடும் தகவல் பெட்டகம். தொலைபேசி எண்களானாலும் சரி, தகவல்களானாலும் சரி, வங்கிக்கணக்கு விஷயங்களானாலும் சரி எல்லாமே அந்த கையடக்க பெட்டிக்குள் டிஜிட்டல் வடிவத்தில் இளைப்பாறுகின்றன.

    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள். அது தருகின்ற வசதிக்காக, சில சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். உதாரணமாக நீண்ட நெடிய கியூவில் சில மணி நேரங்கள் காத்திருப்பதை விட ஒரு சின்ன ஆபத்து வரலாம் எனும் எச்சரிக்கை உணர்வுடன் ஆன்லைனில் பில் கட்டுவதையே மக்கள் இன்று விரும்புகின்றனர். தியேட்டரில் கவுண்டர் முன்னால் அதிகாலையிலேயே நின்று மண்டை உடைய, ரத்தம் சொட்டச் சொட்ட முதல் காட்சி டிக்கெட் வாங்கியதெல்லாம் வரலாறுகளாகிவிட்டன. இன்று ஏதோ ஒரு ஆப் தான் நமக்கு டிக்கெட்களை வசதியாய் வாங்கித் தருகிறது.

    வணிகம் எப்போதும் மக்களுடைய வசதிக்கு ஏற்ப கடைகளை விரித்துக் கொண்டே இருக்கும். இன்றைக்கு மக்களின் டிஜிட்டல் பயன்பாட்டை முன்னிறுத்தி தான் ஏகப்பட்ட புதிய பிஸினஸ் முறைகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. டிஜிட்டலைத் தொடாத எந்த தொழிலும் இனிமேல் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத விதி. அது உணவகம், மருத்துவம் போன்ற அடிப்படை விஷயங்களானாலும் கூட. அந்தவகையில் டிஜிட்டல் வாலெட்கள் இன்றைக்கு வசீகர அம்சமாக மாறியிருப்பதற்கும், புதிது புதிதாய் முளைத்தெழும்புவதற்கும் அது தான் காரணம். உதாரணமாக பே டி எம், மொபிவிக், பே-யு, கூகுள் பே, ஆப்பிள் பே, ஓலா மணி என ஏகப்பட்ட வாலெட் சேவைகள் இன்றைக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அவற்றில் சில, மிக வெற்றிகரமாக காலூன்றியும் இருக்கின்றன.

    பயனர்களுக்கு எதைப் பயன்படுத்தலாம்?, எது நல்லது?, எது ஆபத்தில்லாதது? எனும் கேள்விகள் எழுவது சகஜம். குறிப்பாக சில டிஜிட்டல் வாலெட் நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடிகளை அள்ளி வீசுகின்றன, ஏகப்பட்ட ‘கேஷ் பேக்’ ஆபர்களையும் கொட்டித் தருகின்றன. டிஜிட்டல் வாலெட்டுகளின் மூலம் பணம் அனுப்பினாலும், வரப்பெற்றாலும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கின்றன. கூடவே ‘ஸ்கிராட்ச் கார்ட்’ ஆபர்களும் கிடைப்பதால், டிஜிட்டல் வாலெட்டை மக்கள் அதிகமாக பயன் படுத்துகின்றனர்.

    இதற்கிடையில் இந்த இணையதளத்தில் வாங்கினால் இவ்வளவு சலுகை, அந்த இணையதளத்தில் அவ்வளவு ஆபர்... என கவர்ச்சி வலைகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ‘லாபம்’ எனும் விஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும் அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களும், மொபைல் அப்ளிகேஷன்களும் அப்படித் தான்.

    இவை பயனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு பாலம் போல இருக்கின்றன. பயனர்களின் தேவையை, விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி தங்கள் மூலமாக பரிவர்த்தனை செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு லாபம் பல வகைகளில் வருகின்றன. ஒன்று, விற்பனையாளர்களிடமிருந்து ஒரு தொகையை கமிஷனாகப் பெறுகின்றன. சில சேவைகளுக்கு பயனர்களிடமிருந்தே கட்டணத்தைப் பெறுகின்றன. இன்னொன்று தங்கள் மூலமாக நடைபெறும் மொத்த பரிவர்த்தனைகளின் மூலம் சேரும் பல கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட காலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து பல இடங்களில் முதலீடு செய்கின்றன.

    வங்கியின் மூலம் நடக்கவேண்டிய பணப்பரிமாற்றம், தனியார் நிறுவனங்களின் வழியே நடப்பதனால், அதில் கிடைக்கும் லாபத்தின் சில பங்கை நமக்கு ‘ஆபர்’ என்ற பெயரில் கொடுக்கிறார்கள். இப்படி சின்ன மீனை ‘ஆபர்’ என்ற பெயரில் அள்ளி வீசுவது, ‘பெரிய பரிவர்த்தனை’ என்ற மீனை பிடிக்கத்தான். ஏனெனில் ஒருசில ஆயிரங்களை பரிமாற்றம் செய்யும்போதே கொள்ளை லாபம் கிடைக்கிறது என்றால், பரிவர்த்தனை லட்சங்களை தொட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில்தான் நமக்கு ஆபர்கள் கிடைக்கின்றன. இந்த ஆபர்களுக்கு நமக்கு டிஜிட்டல் பணமாகவே கிடைக்கிறது. உதாரணமாக, உங் களுக்கு 300 ரூபாய் பணம் திரும்ப வருகிற தெனில் அது உங்கள் பாக்கெட்டில் பணமாக வருவதில்லை. ஏதோ ஒரு டிஜிட்டல் வடிவத்தில் தான் தருகின்றன.

    உண்மையில் அந்த பணம் நீங்கள் பயன்படுத்தும் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஒரு கோடி பேருக்கு 300 ரூபாய் கிடைத்தால் அந்த முன்னூறு கோடி ரூபாயும் உண்மையில் அவர்களிடம் தான் இருக்கும். இந்த பணத்தை வைத்திருக்கின்ற வங்கியும் நிறுவனத்துக்கு வட்டி கொடுக்கும். அந்த பணத்தை முதலீடு செய்யும்போதும் கணிசமான லாபம் கிடைக்கும். அந்த பரிவர்த்தனைகளுக்கும் நல்ல கட்டணம் கிடைக்கும். இவையெல்லாம் போக விளம்பரங்களை தளங்களில் வெளியிடு வதன் மூலமும் பணம் கிடைக்கும்.

    இந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா? என்றால் சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த இடை நிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அவை தவறாகப் பயன்படுத்துவதில்லை, காரணம் நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால் அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம், ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.



    எனினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பையும் ‘என்கிரிப்ஷன் டெக்னாலஜி’ மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம் தான் இருந்தாலும், டிஜிட்டல் பயன் பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு. டிஜிட்டலை முழுமையாய் ஒதுக்கி விடவே முடியாது எனும் காலகட்டத்தில் நாம் வாழ் கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்த சூழல் உருவாகியிருக்கிறது. இத்தகைய சூழலில் பாதுகாப்பாய் இருக்க இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

    1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்டு பயன் படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.

    2. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    3. பொது வை-பைகளில் அதை இணைக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் வை-பையை அணைத்தே வையுங்கள்.

    4. புதிதாக வருகின்ற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

    5. எந்த ஆப் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.

    6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என கவனியுங்கள்.

    7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

    8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

    9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

    10. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்ற அனைத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருங்கள்.

    பரிவர்த்தனை முறைகள்

    யூ.பி.ஐ. UPI (Unified platform interface), பி.எச்.ஐ.எம். BHIM (Bharath Interface for Money), ஐ.எம்.பி.எஸ். IMPS (Immediate Payment Service), பி.பி.பி.எஸ். BBPS (Bharat Bill Payment System) போன்றவையெல்லாம் இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள். இவற்றில் யூ.பி.ஐ. (UPI) இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்களுடைய மொபைல் எண்ணையோ, பயனர் சொல்லையோ மட்டும் வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்யும் எளிய முறை இது. இதன் மூலம் நமது வங்கிக் கணக்கு எண்ணையோ, தகவல்களையோ எங்கும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. உடனடியாகப் பணப் பரிமாற்றம் நடக்கும். இது பாதுகாப்பானது, ஆர்.பி.ஐ-யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படக் கூடியது என்பதால் நம்பிக்கையானது. இந்திய அரசின் டிஜிட்டல் கனவுக்குக் கைகொடுக்கப் போவது இது தான்.

    எந்த ஆப்கள் சிறந்தது?


    எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனியே மொபைல் ஆப்களை வைத்திருக்கின்றன. முடிந்தவரை அவற்றையே பயன் படுத்துங்கள். ‘தேர்ட் பார்ட்டி’ எனப்படும் வெளி ஆப்கள் மூலமாக உங்களுடைய வங்கியைத் தொடர்பு கொள்ளும் ஆப்களை முடிந்தவரை நீங்கள் தவிர்க்கலாம். உங்களுடைய வாகனத்தை முறையான சர்வீஸ் சென்டரில் விடுவதற்கும், ஏதோ ஒரு கடையில் சர்வீஸுக்கு விடுவதற்கும் இடையேயான வித்தியாசம் என இதைப் புரிந்து கொள்ளலாம்.

    பாதுகாப்பான அப்ளிகேஷனை தேர்ந்தெடுங்கள்

    இது டிஜிட்டல் யுகம். இன்னும் சிறிது காலத்தில் ஏ.டி.எம். எனும் ஒரு விஷயமே அபூர்வமாகிவிடும். எல்லாமே மொபைல் மூலமாக அல்லது அணியும் தொழில்நுட்பம் மூலமாக நடக்கின்ற பரிவர்த்தனைகளாக மாறிவிடும். விரும்பியோ, விரும்பாமலோ இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனைவரும் இணையும் நிலை உருவாகி வருகிறது. எனவே பாதுகாப்பான, நல்ல ஆப்களை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது நல்லது.

    சேவியர்
    ஆரோக்கியமற்ற உணவின் மீது நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவுப் பழக்கம் மேம்படும், அது நம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
    எதிர்மறையாக எண்ணும்போது ஆரோக்கியமற்ற உணவு மீதான ஆர்வம் குறைகிறது

    இன்று உலகில் உணவுத் தட்டுப்பாடு பெரும்பாலும் இல்லை. ஆனால் அதிகமாக உணவு உட்கொள்ளுதலும், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்திருக்கின்றன.

    உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, 18 வயதைத் தாண்டியவர்களில், நூறு கோடிக்கும் மேற்பட்டோர் அதிக எடையுடன் உள்ளனர். மேலும் 1975-ம் ஆண்டில்இருந்து உலகளவில் அதிக எடை பிரச்சினை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாம் உண்ணும் உணவு குறித்த நமது யோசனை, நமது உணவுத் தேர்வை சரிசெய்யும், அதிக எடை பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும் என்கின்றனர்.

    அவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், தொடர்ந்து ஆறு நொடிகள் உணவை உற்றுப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அந்தச் சமயத்தில் குறிப்பிட்ட உணவு பற்றிய எதிர்மறையான விஷயங்கள் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.

    இது, அந்த உணவு ஆரோக்கியமற்றது என்பது மட்டுமல்ல, சுவை அல்லது அதன் தோற்றம் போன்று, அந்த உணவு குறித்து அவர்கள் வெறுக்கும் விஷயம் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.

    இந்த ஆய்வுக்குப் பிறகு, அந்தக் குறிப்பிட்ட உணவை உண்பதற்கான தங்கள் ஏக்கம் 20 சதவீதம் அளவு குறைந்திருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

    ஆரோக்கியமற்ற உணவின் மீது நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவுப் பழக்கம் மேம்படும், அது நம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.

    அடுத்தகட்டமாக, எதிர்மறையான எண்ணங்கள் குறித்து யோசிக்கும் நேரத்துக்குச் சமமாக, ஆரோக்கியமான உணவின் நல்ல விஷயங்கள் குறித்தும் யோசிக்கக் கூறப்பட்டது.

    இது, ஆரோக்கியமான உணவின் மீது அவர்களுக்கு உள்ள விருப்பத்தை 14 சதவீத அளவு அதிகரிக்க உதவியது.

    எனவே உணவைத் தேர்வு செய்யும்போது அது குறித்துச் சிறிது நேரம் யோசிப்பது, நாம் சிறந்த உணவைத் தேர்ந்தெடுக்க உதவும்.

    யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒருவர் தனது உணவுத் தேர்வு குறித்து முன்னரே தம்மைத் தயார்படுத்திக்கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்தனர்.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகள் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் குறித்துப் படிக்குமாறு கோரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு 15 நிமிடங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அதில், ஆரோக்கியமற்ற உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அவர்கள் யோசித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான உணவுகளின் படங்கள் காட்டப்பட்டன. அப்போது அவர்கள் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகள் குறித்து யோசிக்க வேண்டும்.

    அதன்பின் அவர்கள் கண் முன்னே, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் இரண்டும் காண்பிக்கப்பட்டன. அப்போது 7.6 சதவீதம் பேர், ஆரோக்கியமான உணவு களைத் தேர்வு செய்தனர்.

    அடுத்தகட்ட சோதனையில், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் ஆரோக்கியமான உணவுகளின் நன்மைகளை தெரிவித்தனர். பின் அதுகுறித்து அவர்கள் நேர்மறையாக சிந்திக்கும்போது அதன் புகைப்படங்களை காண்பித்தனர். இந்த முயற்சி 5.4 சதவீதம் பேர் ஆரோக்கியமான உணவைத் தேர்ந் தெடுக்க உதவியது.

    இைவ சிறு சிறு மாற்றங்களாகத் தோன்றலாம். ஆனால் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 107 கலோரிகள் குறைவாக உட்கொண்டனர்.

    ஒரு மனிதர் இத்தனை கலோரிகளை குறைக்க குறைந்தது 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

    அதிக உடல் எடைக்கான சிகிச்சைக்குச் சரிசமமாக இந்தச் சிறிய பயிற்சி உதவியதாக யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெடி கோபர் கூறுகிறார்.

    நீங்கள் நாள் ஒன்றுக்கு ஓர் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்தாலும் அது காலப்போக்கில் பெரும் பயனைத் தரும் என்கிறார் கோபர்.

    சிலர் வேறு சில உணவுப் பழக்கங்களில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தாலும், மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் பழைய உடல் எடையை அடையக்கூடும்.

    ஆனால் இந்தப் புதிய வழிமுறையில் ஒவ்வொரு நாளும் மிதமாக கலோரிகளை குறைத்தாலும் காலப்போக்கில் அது நல்ல பயனை அளிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    ஆரோக்கிய உணவில் ஆர்வம் காட்டுவோர், இந்த நுட்பங்களை முயன்று பார்க்கலாம்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - தேவைக்கு
    மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, பச்சைப் பட்டாணி இரண்டையும் தனியாக வேக வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பட்டாணி, கடலைப் பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முதுகுவலி முத்திரை (முதுகுத்தண்டு முத்திரை) முதுகு வலி மற்றும் நரம்புக் கோளாறுகளை குறைக்கும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை:

    இடது கை:  கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும்.

    வலது கை:  சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.



    முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.

    இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ய வேண்டும்

    பலன்கள்:

    முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும்.
    ×