என் மலர்

  நீங்கள் தேடியது "HomeMadeRecipes"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட பிரெட் மெதுவடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10
  ரவை - 3 டீஸ்பூன்
  வெங்காயம் - ஒன்று
  பச்சை மிளகாய் - ஒன்று
  கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு  செய்முறை :

  வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும்.

  ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

  சூப்பரான பிரெட் மெதுவடை ரெடி!!!

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்பார் சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை அவியல். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  முட்டை - 4
  உப்பு - சிறிது
  தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  கடுகு  - 1 தேக்கரண்டி
  வெங்காயம் - 1
  கறிவேப்பிலை - சிறிது
  கொத்தமல்லி - சிறிதளவு
  மஞ்சள் தூள் - சிறிது

  மசாலாவிற்கு...

  தேங்காய் துருவல் - அரை கப்
  வெங்காயம் - 1
  காய்ந்த மிளகாய் - 1
  மிளகு - 1 தேக்கரண்டி
  பூண்டு - 6 பல்  செய்முறை :

  கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

  மிக்சியில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

  மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

  மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.

  கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

  சுவையான முட்டை அவியல் ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் சத்துமாவில் இடியாப்பம் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  சத்து மாவு - ஒரு கப்,
  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
  உப்பு - தேவையான அளவு.  செய்முறை:

  சத்து மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும்.

  மாவு நன்றாக ஆறியதும் இதனுடன் எண்ணெய், உப்பு, வெந்நீர் விட்டு இடியாப்ப மாவு போல பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  இதனை, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம். ஹெல்தியான இந்த இடியாப்பம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிக்கனில் 65 செய்வது போல் முட்டையிலும் 65 செய்யலாம். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருள்கள் :

  முட்டை - 3
  சோளமாவு - 2 மேஜைக்கரண்டி
  மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  புட் கலர் - 1/4 தேக்கரண்டி
  தயிர் - 1 மேஜைக்கரண்டி
  கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  உப்பு - தேவையான அளவு
  பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு    செய்முறை :

  கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  முட்டை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு நான்காக வெட்டி வைக்கவும்.
     
  ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

  அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கீழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
    
  ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும்.

  இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் வடிந்த பின்னர் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

  சுவையான முட்டை 65 ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  பச்சைப் பட்டாணி - அரை கப்
  கடலைப்பருப்பு - அரை கப்
  புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
  இஞ்சி - 1 துண்டு
  பூண்டு - தேவைக்கு
  மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  எலுமிச்சை சாறு - சிறிதளவு
  ரொட்டித்தூள் - சிறிதளவு
  எண்ணெய், உப்பு - தேவைக்கு  செய்முறை:

  கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கடலைப்பருப்பு, பச்சைப் பட்டாணி இரண்டையும் தனியாக வேக வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  பின்னர் அதனுடன் பட்டாணி, கடலைப் பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  பின்னர் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

  சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப் ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹோட்டலில் பிஸிபேளாபாத் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் பிஸிபேளாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  பச்சரிசி - ஒரு கப்,
  துவரம்பருப்பு - அரை கப்,
  சின்ன வெங்காயம் - 50 கிராம்,
  தக்காளி - 3,
  புளி - ஒரு சிறிய உருண்டை,
  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
  பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன்,
  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
  உப்பு - தேவையான அளவு.

  வறுத்துப் பொடிக்க:

  காய்ந்த மிளகாய் - 6,
  தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
  கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
  வெந்தயம் - கால் டீஸ்பூன்,
  சீரகம் - அரை டீஸ்பூன்,
  கொப்பரை துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

  தாளிக்க:

  கடுகு - அரை டீஸ்பூன்,
  உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
  எண்ணெய் - 2 டீஸ்பூன்,
  நெய் - 2 டீஸ்பூன்.  செய்முறை:

  அரிசியையும் பருப்பையும் நாலரை கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.

  வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டாக நறுக்குங்கள்.

  தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.

  வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில், கொப்பரையைத் தவிர, மீதி எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.

  கடைசியில் கொப்பரை துருவலையும் சேர்த்து, வறுத்து இறக்கி ஆறவிட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.

  புளியை ஒரு கப் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டுங்கள்.

  குக்கரில் இருக்கும் சாதத்தை, அப்படியே (குக்கரோடு) மீண்டும் அடுப்பில் வைத்து, புளிக்கரைசலை அதோடு சேர்த்து, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் நன்கு கிளறுங்கள்.

  பிறகு, பொடித்து வைத்துள்ள தூளை அதில் தூவுங்கள்.

  மற்றொரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

  பிறகு, தக்காளி சேர்த்து, நன்கு கரைய வதக்கி சாதத்தில் சேருங்கள்.

  எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள்.

  விருப்பம் உள்ளவர்கள் கடைசியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறி இறக்குங்கள்.

  சூப்பரான பிஸிபேளாபாத் ரெடி.

  குறிப்பு: கொப்பரை என்பது தண்ணீர் சத்து இல்லாமல் இருக்கும். அது கிடைக்காத பட்சத்தில், தேங்காய் துருவலை, தண்ணீர் சத்து போக வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்துச் சேர்க்கலாம்.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இந்த பாவ் பாஜியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருள்கள்

  உருளைக்கிழங்கு - 4
  பட்டாணி - 100 கிராம்
  காலிபிளவர் - 100 கிராம்
  கேரட் - 1 சிறியது
  குடைமிளகாய் - 1
  பெரிய வெங்காயம் - 1
  தக்காளி - 1
  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
  வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  கொத்தமல்லித்தழை - சிறிது
  உப்பு - தேவையான அளவு
  எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி  செய்முறை

  வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  உருளைக்கிழங்கு, குடை மிளகாய், கேரட் இரண்டையும் தோல் சீவி துண்டுகளாக  வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.

  குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
   
  விசில் அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.

  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  குடைமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.

  பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

  மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  சூப்பரான பாவ் பாஜி மசாலா ரெடி.

  பாவ் பன் செய்முறை

  தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும்.

  அடுப்பில் தோசை கல்லை வைத்து லேசாக சூடானதும் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் கரைந்ததும் பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

  சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

  சூப்பரான பாவ் பாஜி ரெடி.

  - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  ×