search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல் (Health)

    மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப்
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப்

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - தேவைக்கு
    மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, பச்சைப் பட்டாணி இரண்டையும் தனியாக வேக வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பட்டாணி, கடலைப் பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×