என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்.
    • சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    • டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இதையடுத்து இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது காரில் வீடு திரும்பினார். இதனிடையே அவரிடம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, எனக்கு ஓய்வே கிடையாது என்று அவர் பதில் அளித்தார்.

    • அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து கமல் பேசியதற்கு எதிர்ப்பு.
    • யூடியூப் சேனில் பேட்டியளிக்கும்போது கழுத்தை அறுத்துவிடுவேன் என பேசியதால் புகார்.

    சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது சனாதனம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூடிப் வலைத்தளத்தில் கமல்ஹாசன் கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிச்ந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சார்பில் சென்ன மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கபப்ட்டது.

    இதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், எந்தவித உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை, தற்செயலாக அவ்வாறு பேசியதாக கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது.
    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது/Key decision expected in upcoming board meeting

    புதுடெல்லி:

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம்

    வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை 2014-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டாக இந்தத் தொகை அப்படியே உள்ளது.

    தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்கங்கள் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன. எனவே இந்தக் கூட்டத்தில் ரூ.2,500 ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

    • சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
    • படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்டிஆர் 49' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

    இந்நிலையில், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

    முன்னதாக, படத்தின் தலைப்பு வெளியாவதையொட்டி நடிகர் சிம்பு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபாடு செய்தார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.
    • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

    இந்த வார விசேஷங்கள்

    7-ந் தேதி (செவ்வாய்)

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    8-ந் தேதி (புதன்)

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந் தேதி (வெள்ளி)

    * சங்கடஹர சதுர்த்தி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

    11-ந் தேதி (சனி)

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந் தேதி (ஞாயிறு)

    * சஷ்டி விரதம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * பாபநாசம் சிவபெருமான் பவனி.

    * சமநோக்கு நாள்.

    13-ந் தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
    • சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்

    பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், புற்றுநோயால் இறந்த ஒரு ராணுவ அதிகாரியின் தாய்க்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

    அந்த ராணுவ அதிகாரி அரிய வகை புற்றுநோயால் ஜூன் 24, 2009 அன்று உயிரிழந்த நிலையில் திகாரியின் தாயார் சுலோச்சனா வர்மாவுக்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று சண்டிகர் ஆயுதப்படை தீர்ப்பாயம் 2019-ல் உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அண்மையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹர்சிம்ரன் சிங் சேத்தி மற்றும் விகாஸ் சூரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் புற்றுநோயைத் தவிர, ராணுவ வீரர்களிடையே ஏற்படும் அனைத்து வகையான புற்றுநோய்களும் ராணுவ சேவையுடன் தொடர்புடையதாகவே கருதப்படும். பணியில் சேரும்போது ஆரோக்கியமாக இருந்த அதிகாரி, ஆறு ஆண்டுகள் ராணுவச் சேவையில் இருந்ததால் ஏற்பட்ட நீண்டகால மன அழுத்தமே புற்றுநோய்க்குக் காரணம்" என்று தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பளித்தனர். 

    • டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும்
    • நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்

    பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

    இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.

    "எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்" என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.  

    • நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.
    • நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. இந்தியாவில் பௌர்ணமி நாளான அக்டோபர் 6 இரவு தொடங்கி அக்டோபர் 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.

    முழு நிலவு பூமியை அதன் நீள்வட்டப் பாதையில் மிக நெருங்கி வரும்போது இந்தச் சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது.

    இதனால், நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.

    இந்த நிகழ்வால் நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.  2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்பட உள்ளது. 

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 231 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து அணி கேப்டன் டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து கேப்டன் ஷோபி டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் அடித்தார். ப்ரூக் ஹாலிடே 45 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோன்குலுலேகோ எம்லாபா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் லாரா வால்வார்த் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து தஸ்மின் பிரிட்ஸ் உடன் சுனே லுஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரிட்ஸ் 89 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மரிசானே காப் (14) அன்னேகே போஸ்ச் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். என்றாலும், சுனே லுஸ் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 40.5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

    • 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
    • கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி தனது கண்டனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், " உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது ஒவ்வொரு இந்தியரையும் கோபமடைய செய்துள்ளது.

    கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். கவாய் அமைதி காத்தது நீதியின் மதிப்புகள், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு" என்றார்.

    • பூமியில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா விரும்புகிறது.
    • ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமர் மாதிரிகளை காண்பித்த நிலையில், தற்போது அவைகள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.

    வர்த்தக வரி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று விருந்து அளித்தார். பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.

    இதை டிரம்ப் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். பாகிஸ்தானில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுத்துக் கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பாகிஸதான் பிரதமரிடம் பேசினார். அவரும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

    கடந்த முறை அமெரிக்கா சென்றபோது, பாகிஸ்தானில் உள்ள அரிய வகை கனிமங்களின் மாதிரிகளை டிரம்பிடம் காண்பித்துள்ளார் ஷெபாஷ் ஷெரீப்.

    இதனைத் தொடர்ந்து 500 மில்லியன் டாலருக்கு பாகிஸ்தானுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அடங்கிய முதல் கப்பல் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கு கனிம வளங்களை விற்பனை செய்வதற்கு இம்ரான் கான் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.

    ×