என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மெலடி பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து சிறப்பாக நடனமாடிருப்பார்.
    • ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார். இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.

    இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" பாடல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகிய நிலையில் படத்தின் அடுத்த பாடலான மெலடி பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

    மெலடி பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து சிறப்பாக ஒரு பெப்பியான டான்சை ஆடியிருந்தார். அப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான ஜிமிக்கி கசல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. கசல் என்றால் உருது அல்லது இந்தி மொழியில் சிறு வரிகளில் எழுதப்படும்  கவிதை என்பது பொருள்.

    இப்பாடலை நேஹா கிரிஷ் பாடியுள்ளார். நிரஞ்சன் பாரதி மற்றும் ஹஃபீஸ் ஹோசியாபுரி இணைந்து பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.
    • படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதனை காட்சி படுத்துவதில் ஆற்றல் பெற்றவர்.

    விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன் அவரது இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் வெளியாகியது அதைத்தொடர்ந்து படத்தின் டிரெயிலர் வெளியாகியது. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பார்டரில் கதைக்களம் நடப்பதுப் போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பாடல் மற்றும் ட்ரெயிலர் மக்களிடயே நல்ல வரவேற்பை  பெற்று படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தாமிரபரணி மற்றும் பூஜை படத்தைப் போல் இப்படமும் விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தில் சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனுடைய மேக்கிங் வீடியோவை இன்று மாலை 7 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித்- ஷாலினி திருமண நாள் புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • ஷாலினி தலையில், லைட் அடிக்கும் கிரீடம் அணிந்து 'ஏஞ்சல்' போல காட்சியளித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியானவர் ஷாலினி.

    பிரபல நடிகர் அஜித்குமாருடன் நடிகை ஷாலினி முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இப்பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் கவனித்துக் கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் ஏற்பட்டது.




    மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் அஜித்- ஷாலினி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு 2- வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ஆத்விக்' என பெயரிட்டனர். 

    இந்நிலையில் அஜித்- ஷாலினி 24- வது திருமண நாளை சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த ஓட்டலுக்கு அஜித் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.




    மேலும் ஓட்டலில் உணவு டேபிளில் அஜித் அமர்ந்திருக்க அவரது மடியில் மனைவி ஷாலினி அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஷாலினி தலையில், லைட் அடிக்கும் கிரீடம் அணிந்து 'ஏஞ்சல்' போல காட்சியளித்துள்ளார்.

    மேலும் அஜித்- ஷாலினியை நேரில் சந்தித்த ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

    அஜித்- ஷாலினி திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் "விடாமுயற்சி" படத்தில் தற்போது நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி உத்தரவு.

    2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால், தமன்னா ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார் எழுப்பப்பட்டது.

    அதன்படி, ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    • சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா.
    • நடிகர் ஜெயம் ரவி, ராஜா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா(30). இவர் சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, நம் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

     

    தனது ரசிகரின் திடீர் மரணத்தை அறிந்த நடிகர் ஜெயம் ரவி, ரசிகரின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும் அவரது குடும்பத்திற்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் தான் செய்து தருவதாக நடிகர் ஜெயம் ரவி உறுதியளித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.
    • திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள்.

    சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் 'உழைப்பாளர்கள் தினம்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

    இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார்,'உழைப்பாளர் தினம்' இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். 

    நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் பேசியதாவது:-

    லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள்.

    ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது.

    வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார்.

    தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான்.

    அவர் எந்தவித பொருளாதார நிலையை எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார். இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.

    இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில உள்ளது.

    குறிப்பாக கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 'தல' அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.

    இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் புத்திசாலித்தனமும் எளிமையும் நிறைந்தவர் அஜித் என அவர் பதிவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக வாய்ப்பு.
    • கில்லி படம் 20 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது.

    தமிழ் திரைத்துறையில் கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்களை தற்போது ரீ- ரிலீஸ் செய்வது டிரெண்டாகி உள்ளது.

    அவ்வாறு, சிவா மனசுல சக்தி, விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி படம் 20 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது. இதில், இதுவரை கில்லி 8 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது.

    தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளான மே 1ம் தேதி அன்று, அவர் நடித்து சூப்பர் ஹிட் ஆன பில்லா படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அஜித்- ஷாலினியின் இன்று 24வது திருமண நாளையொட்டி இந்த அறிவிப்பு வௌயிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது
    • ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்

    தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

    கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் ஒன்ஸ் மோர் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் ஆடிக் கொண்டு இருக்கும் வீடியோவை நாம் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பார்த்த வண்ணம் இருக்கிறோம்.

    2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    கில்லி ரீ ரிலிஸ் பற்றியும் மக்களின் கொண்டாடத்தை பற்றியும் திரிஷா அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

    அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரௌஷாவுக்கும் என் மன்மார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

    இந்நிலையில், கில்லி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டாளர் சக்திவேலன் நடிகர் விஜயை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "கில்லி திரைப்பட மறு வெளியீட்டில் ரசிகர்களோடு திரையரங்கில் அப்படத்தை பார்த்த பொழுது அவர்களின் கொண்டாட்டம் எனக்கு வியாபாரம் தாண்டி ஒரு திரைப்பட ரசிகனாக சிலிர்ப்பைத் தந்தது. தளபதி விஜய் அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்த பொழுது திரைத்துறை நலம் விரும்பியாக நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்
    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் டீசரை இயக்குநர் லிங்குசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பெடல் திரைப்படத்தில் காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
    • இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் Sk23 படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் துரைசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அடுத்ததாக எஸ்.கே ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் இப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் பதிவிட்டுள்ளார். அதில், "1980களின் ஒரு கோடைக்காலம். உங்கள் குழந்தைப்பருவத்துக்கு சைக்கிளின் வழி அழைத்துச்செல்ல மே 3ஆம் தேதி திரையரங்கத்துக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
    • ரத்னம் படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார்.

    இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன.

    இப்படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    இந்நிலையில் நான்காவது சிங்கிளான "எதுவரையோ.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான ஹரிஹரன் இப்பாடலை பாடியுள்ளர்.

    இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×