விஷாலின் "ரத்னம்"- 4வது சிங்கிள் பாடல் ரிலீஸ்

கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.ரத்னம் படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.
விஷாலின் "ரத்னம்"- 4வது சிங்கிள் பாடல் ரிலீஸ்
Published on

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார்.

இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

இந்நிலையில் நான்காவது சிங்கிளான "எதுவரையோ.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான ஹரிஹரன் இப்பாடலை பாடியுள்ளர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com