திருமண நாள் : நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி

அஜித்- ஷாலினி திருமண நாள் புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஷாலினி தலையில், லைட் அடிக்கும் கிரீடம் அணிந்து 'ஏஞ்சல்' போல காட்சியளித்துள்ளார்.
திருமண நாள் : நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி
Published on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியானவர் ஷாலினி.

பிரபல நடிகர் அஜித்குமாருடன் நடிகை ஷாலினி முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இப்பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் கவனித்துக் கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் ஏற்பட்டது.

மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் அஜித்- ஷாலினி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு 2- வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ஆத்விக்' என பெயரிட்டனர். 

இந்நிலையில் அஜித்- ஷாலினி 24- வது திருமண நாளை சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த ஓட்டலுக்கு அஜித் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஓட்டலில் உணவு டேபிளில் அஜித் அமர்ந்திருக்க அவரது மடியில் மனைவி ஷாலினி அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஷாலினி தலையில், லைட் அடிக்கும் கிரீடம் அணிந்து 'ஏஞ்சல்' போல காட்சியளித்துள்ளார்.

மேலும் அஜித்- ஷாலினியை நேரில் சந்தித்த ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

அஜித்- ஷாலினி திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் "விடாமுயற்சி" படத்தில் தற்போது நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com