எல்லையை தாண்டி சீறி வருகிறான் 'ரத்னம்'

ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
எல்லையை தாண்டி சீறி வருகிறான் 'ரத்னம்'
Published on

நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதனை காட்சி படுத்துவதில் ஆற்றல் பெற்றவர்.

விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன் அவரது இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.

ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் வெளியாகியது அதைத்தொடர்ந்து படத்தின் டிரெயிலர் வெளியாகியது. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பார்டரில் கதைக்களம் நடப்பதுப் போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின் பாடல் மற்றும் ட்ரெயிலர் மக்களிடயே நல்ல வரவேற்பை  பெற்று படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தாமிரபரணி மற்றும் பூஜை படத்தைப் போல் இப்படமும் விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனுடைய மேக்கிங் வீடியோவை இன்று மாலை 7 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com