கவினின் 'ஜிமிக்கி கசல்' பாடல் வெளியானது

மெலடி பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து சிறப்பாக நடனமாடிருப்பார். ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கவினின் 'ஜிமிக்கி கசல்' பாடல் வெளியானது
Published on

கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார். இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.

இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" பாடல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகிய நிலையில் படத்தின் அடுத்த பாடலான மெலடி பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

மெலடி பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து சிறப்பாக ஒரு பெப்பியான டான்சை ஆடியிருந்தார். அப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான ஜிமிக்கி கசல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. கசல் என்றால் உருது அல்லது இந்தி மொழியில் சிறு வரிகளில் எழுதப்படும்  கவிதை என்பது பொருள்.

இப்பாடலை நேஹா கிரிஷ் பாடியுள்ளார். நிரஞ்சன் பாரதி மற்றும் ஹஃபீஸ் ஹோசியாபுரி இணைந்து பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com