என் மலர்
சினிமா செய்திகள்
- "இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
- இந்த படத்தை Dawn பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் வெளியான 50 ஆவது படமாக ராயன் அமைந்தது.
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 52-வது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
"இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார். இந்த படத்தை Dawn பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அசோக் செல்வன், அருண் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அருண் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் பரவி வரும் நிலையில். அசோக் செல்வன் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் " எனக்கும் தனுஷ் சார் மிகவும் பிடிக்கும், அவருடைய மிகப் பெரிய ரசிகன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப் படுகிறேன் ஆனால் இப்பொழுது அவர் இயக்கி கொண்டிருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை" என்று கூறினார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது தேனியில் நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
படத்தின் டீசர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் அதிதி மற்றும் ஆகாஷ் முரளி இடையே உள்ள காதல் காட்சிகள் நிறைந்தவையாக இருக்கிறது. திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன்.
- படத்தின் முதல் பாடலை குறித்து தற்பொழுது அப்டேட் கிடைத்துள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலை குறித்து தற்பொழுது அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் முதல் பாடலான `ஹே மின்னலே' பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒரு காதல் பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்று அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
- உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், லப்பர் பந்து படத்தை பாராட்டி இந்திய வீரர் அஷ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இது ஒரு திரைப்படத்தை பற்றியது. திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன்.
ஆனால், இன்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் கிளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.
பொதுவாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் அதன் கதைக்கருவை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களைதான் சொல்வார்கள். 'லப்பர் பந்து' படத்தில் அப்படி ஏதும் இல்லாததால் இது எனக்கு ஸ்பெஷலாக தோன்றியது.
மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.
இயக்குநர் மணிரத்னம், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் "தக் லைஃப்". கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் இந்த படத்தின் மூலம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
வீடியோவில் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திருப்பதியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம் என்று கார்த்தி கூறியது சர்ச்சையானது.
கார்த்தி - அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கு மொழியில் 'சத்யம் சுந்தரம்' என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.
அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கிண்டலாக கூறினார்.
லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது, ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும்" என தெரிவித்தார்.
இதனையடுத்து லட்டு குறித்து பேசியதற்கு கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திருப்பதி பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைப்பிடித்து வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக தெரிகிறது.
- திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜியை கைது செய்ததாக தெரிகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக தெரிகிறது. மோகன் ஜி. பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில் சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜியை கைது செய்ததாக தெரிகிறது. மோகன் ஜி கைது தொடர்பாக போலீஸ் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன், இயக்குனர் மோகன் ஜி தமிழக போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், மாட்டுக்கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பழனி பஞ்சாமிர்தம் தொடர்பான மோகன் ஜி வெளியிட்ட வீடியோ அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து வரவழைத்து பாலியல் வன்கொடுமை.
- திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கையில் அம்பலமானது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.
அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் முகேஷ் எம்.எல்.ஏ., சித்திக் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபல நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குனர்களான ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
சினிமா புரொடக்சன் மேலாளரான திருவனந்த புரத்தை சேர்ந்த ஷானு இஸ்மாயில் என்பவரின் மீதும் வழக்கு பதியப்பட்டது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்கு பதிந்திருந்தனர்.
அதன்பேரில் போலீசாரும், நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சினிமா புரொடக்சன் மேலாளர் ஷானு இஸ்மாயில் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.
அவர் தங்கியிருந்த அறை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. மேலும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்த னர். அதன்பேரில் எர்ணாகுளம் மத்திய போலீசார், ஷானு இஸ்மாயில் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தனர்.
அவர் தங்கியிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஷானு இஸ்மாயில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை புகாரின் பேரில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சினிமா புரொடக்சன் மேலாளர் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
- பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரபல நடிகர் தொழில் வாய்ப்பு உறுதி அளித்ததாக தகவல்.
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி. 42 வயதாகும் ஷேக் ஜானி பாஷா "ஜானி மாஸ்டர்" என்று அழைக்கப்பட்டு வருகிறார். தென்இந்திய சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்து வரும் இவர் மீது, பெண் நடன கலைஞர் ஒருவர், தான் சிறுமியாக இருந்தபோது ஜானி மாஸ்டரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என புகார் அளித்தார்.
அந்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜானி மாஸ்டர் வழக்கில் அல்லி அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் பெயர்கள் இழுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், தேவையில்லாமல் அல்லு அர்ஜூன் பெயர் இழுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படம் ஒன்றின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி சங்கரிடம், சுகுமாரும் அல்லு அர்ஜூனும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கு தொழில்முறை ஆதரவை உறுதியளித்தார்களா? என்று கேட்டதற்கு, அவர் பதில் அளித்து கூறியதாவது:-
ஜானி மாஸ்டர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் இடையே நடந்த விசயம் எல்லாம் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விசயம். எங்கள் படத்திற்கு கூடுதல் டான்ஸ் மாஸ்டரான அவர் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து இந்த படத்தில் அவர் பணியாற்றுவார்.
புஷ்பா படத்திற்கு பிரத்யேக டான்ஸ் மாஸ்டராக பணியாற்ற ஜானி மாஸ்டர் இருந்தார். ஆனால், நாங்கள் திட்டமிட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் இது நடந்தது.
அல்லு அர்ஜூன் ஒருவர் பக்கம் இருக்கமாட்டார் அல்லது தொழில்முறை தொடர்பாக யாருக்கும் ஆதரவாக இருக்கமாட்டார். அல்லு அர்ஜூன் செட்டில் தனக்கு உள்ள வேலைகளை தவிர மற்றவைகள் பற்றி கவலைப்படுவது இல்லை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளார். அவர் ஏன் ஒருவரை வேலை செய்வதைத் தடுக்க வேண்டும் அல்லது வேறொருவரைப் பதவி உயர்த்த வேண்டும்?. நாங்கள் அனைவரும் தொழில் ரீதியாக மட்டுமே அவர்கள் இருவருடனும் இணைந்துள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகை ஜான்சி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது "இந்தப் பிரச்னையில் தெலுங்குத் திரையுலகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவருக்காக யாரும் பகிரங்கமாகப் பேசவில்லை என்று தோன்றலாம்.
ஆனால் ஒரு பெரிய இயக்குனர், குறைந்தது இரண்டு தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் ஒரு பெரிய ஹீரோ மூலம் வேலை உறுதி செய்யப்பட்டது. தொழில் துறை எப்போதும் திறமையை ஆதரிக்கும்" என்றார்.
ஜான்சி கூறிய இரண்டு பெரிய டைரக்டர் சிவகுமார் என்றும், மெகா ஸ்டார் அல்லு அர்ஜூன் என்றும் கருதப்பட்டது. இந்த நிலையில்தான் புஷ்பா படம் தயாரிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- என்னோடு அரை நிர்வாணமாக நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்.
- ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?
பிரபல இந்தி நடிகையான திரிப்தி டிம்ரி 'அனிமல்' படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். அனிமல் படம் ஆணாதிக்க சிந்தனையுள்ள படம் என்றும், பெண் வெறுப்பை ஊக்குவிக்கிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த படத்தில் திரிப்தி டிம்ரி நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் 'அனிமல், பேட் நியூஸ்' போன்ற படங்களில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் நடித்துள்ள உங்களை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்.
இதனால் காட்டமான திரிப்தி டிம்ரி ரசிகருக்கு பதில் அளித்து கூறும்போது, ''நான் இதுமாதிரி நடித்தேன் என்பது சரி. ஆனால் என்னோடு அரை நிர்வாணமாக உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள். அவர் ஆண் என்பதாலா? ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?
ஆபாச காட்சிகளில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எப்படி எடை போடுவீர்கள். ஒருவரை அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும் பார்ப்பதை விட்டுவிடுங்கள்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்த 13 பேர் கொண்ட குழுவில் அனைவருமே ஆண்கள் ஆவர்
- ChatGpt ஏஐ மூலம் எழுதியிருப்பார்கள் என்றும் சிலர் கிட்ணலடித்துள்ளனர்
இந்த வருட ஆஸ்கர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படம் லாபட்டா லேடிஸ். புதிதாகத் திருமணமான ஜோடிகளில் மணப்பெண்கள் தவறுதலாக இடம்மாறுவதால் ஏற்படும் குழப்பங்களைச் சுற்றி நடக்கும் கதை இது. கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த படம் திரையிடப்பட்டது.
இந்த படத்தை தயாரித்தவர்களுள் பாலிவுட் நடிகர் அமீர் கானும் ஒருவர். இந்திய திரைப்பட கூட்டமைப்பு (FFI) ஆஸ்கருக்கு அனுப்ப தேர்வு செய்து தயாரித்துள்ள அதிகாரப்பூர்வ ஆவணத்தில் முதல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, "இந்திய பெண்கள் ஆதிக்கமும் அடிபணுவும் கலந்த வினோதமான கலவை" ["strange mix of submission and dominance"]என்ற வரியுடன் அந்த ஆவணம் தொடங்குகிறது. இதை பிரதிபலிப்பதாலேயே இந்த படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்து அனுப்பியுள்ளோம் என்ற அர்த்தத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளதால் இணையவாசிகள் அதைக் குறித்து தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்த 13 பேர் கொண்ட குழுவில் அனைவருமே ஆண்கள் என்பதால் அவர்களின் மனப்பான்மை இதில் வெளிப்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர். இந்த ஆவணத்தை ChatGpt ஏஐ மூலம் எழுதியிருப்பார்கள் என்றும் சிலர் கிட்ணலடித்துள்ளனர். இந்த படத்தில் பெண்கள் வீட்டு வேலையை செய்து கொண்டு இல்லத்தரசியாக இருக்கவும் விரும்புவர் அதே வேலையில் அதற்கு நேர்மாறாகவும் இருக்க விரும்புவர் என்ற கருத்தியல் இடம்பெற்றிருப்பதால் குழு உறுப்பினர்கள் அவ்வாறு எழுதியுள்ளதாகவும் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
- சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை. வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதனால் வாடிவாசல் தொடங்க இன்னும் காலாவகாசம் தேவைப்படுகிறது.
சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வாடிவாசல் அதிக கால அவகாசம் எடுப்பதனால் சூர்யா அதற்குள் வேறொரு திரைப்படத்தில் நடிக்கலாம் என எண்ணியுள்ளார். இதனால் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தனது 45- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






