விஷ்ணுவர்தன் இயக்கிய `நேசிப்பாயா' படத்தின் டீசர் வெளியீடு

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
விஷ்ணுவர்தன் இயக்கிய `நேசிப்பாயா' படத்தின் டீசர் வெளியீடு
Published on

2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தின் டீசர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் அதிதி மற்றும் ஆகாஷ் முரளி இடையே உள்ள காதல் காட்சிகள் நிறைந்தவையாக இருக்கிறது. திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com