என் மலர்
சினிமா செய்திகள்

ஜானி மாஸ்டர் விவகாரத்தில் தேவையில்லாமல் அல்லு அர்ஜூன் பெயர் இழுக்கப்பட்டுள்ளது- புஷ்பா பட தயாரிப்பாளர்
- ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
- பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரபல நடிகர் தொழில் வாய்ப்பு உறுதி அளித்ததாக தகவல்.
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி. 42 வயதாகும் ஷேக் ஜானி பாஷா "ஜானி மாஸ்டர்" என்று அழைக்கப்பட்டு வருகிறார். தென்இந்திய சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்து வரும் இவர் மீது, பெண் நடன கலைஞர் ஒருவர், தான் சிறுமியாக இருந்தபோது ஜானி மாஸ்டரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என புகார் அளித்தார்.
அந்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜானி மாஸ்டர் வழக்கில் அல்லி அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் பெயர்கள் இழுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், தேவையில்லாமல் அல்லு அர்ஜூன் பெயர் இழுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படம் ஒன்றின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி சங்கரிடம், சுகுமாரும் அல்லு அர்ஜூனும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கு தொழில்முறை ஆதரவை உறுதியளித்தார்களா? என்று கேட்டதற்கு, அவர் பதில் அளித்து கூறியதாவது:-
ஜானி மாஸ்டர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் இடையே நடந்த விசயம் எல்லாம் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விசயம். எங்கள் படத்திற்கு கூடுதல் டான்ஸ் மாஸ்டரான அவர் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து இந்த படத்தில் அவர் பணியாற்றுவார்.
புஷ்பா படத்திற்கு பிரத்யேக டான்ஸ் மாஸ்டராக பணியாற்ற ஜானி மாஸ்டர் இருந்தார். ஆனால், நாங்கள் திட்டமிட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் இது நடந்தது.
அல்லு அர்ஜூன் ஒருவர் பக்கம் இருக்கமாட்டார் அல்லது தொழில்முறை தொடர்பாக யாருக்கும் ஆதரவாக இருக்கமாட்டார். அல்லு அர்ஜூன் செட்டில் தனக்கு உள்ள வேலைகளை தவிர மற்றவைகள் பற்றி கவலைப்படுவது இல்லை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளார். அவர் ஏன் ஒருவரை வேலை செய்வதைத் தடுக்க வேண்டும் அல்லது வேறொருவரைப் பதவி உயர்த்த வேண்டும்?. நாங்கள் அனைவரும் தொழில் ரீதியாக மட்டுமே அவர்கள் இருவருடனும் இணைந்துள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகை ஜான்சி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது "இந்தப் பிரச்னையில் தெலுங்குத் திரையுலகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவருக்காக யாரும் பகிரங்கமாகப் பேசவில்லை என்று தோன்றலாம்.
ஆனால் ஒரு பெரிய இயக்குனர், குறைந்தது இரண்டு தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் ஒரு பெரிய ஹீரோ மூலம் வேலை உறுதி செய்யப்பட்டது. தொழில் துறை எப்போதும் திறமையை ஆதரிக்கும்" என்றார்.
ஜான்சி கூறிய இரண்டு பெரிய டைரக்டர் சிவகுமார் என்றும், மெகா ஸ்டார் அல்லு அர்ஜூன் என்றும் கருதப்பட்டது. இந்த நிலையில்தான் புஷ்பா படம் தயாரிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






