என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி உள்ளது.
    • ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் தில்லி பாபு இம்மாத துவக்கத்தில் உயிரிழந்தார்.

    தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. 'உறுமீன்', 'மரகதநாணயம்', 'ராட்சசன்', 'பேச்சிலர்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார்.

    இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று காலை மறைந்த தில்லி பாபு அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்ட நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை தயாரிப்பாளர் தனஞ்செயன் தொகுத்து வழங்கினார்.

    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, "தில்லி பாபு சார் என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் என்னையும் என் சகோதரியையும் மிகவும் அக்கறையுடன் வழிநடத்தினார். 'ஓ மை கடவுளே' படம் வெளியாவதற்கு முன்பு வரை எனக்கு திரைத்துறையில் மார்க்கெட் இருந்ததில்லை. இருந்தாலும் அவர் எனக்காக பணம் கொடுத்தார். அவர் கொடுத்த பாதையில்தான் நான் அதில் பயணிக்கிறேன். அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

    இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஷ்பா-2 படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
    • கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பா - 2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

    நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

    நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பா - 2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

    இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் உள்ள நிலையில் அதனை குறிப்பிட்டு புஷ்பா 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • தற்பொழுது இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் துரூவ் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பைசன் படக்குழு வெளியிட்டுள்ளது,.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஈட்டியுள்ளது.
    • யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான மட்ட வீடியோ பாடல் வெளியானது

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இம்மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஈட்டியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கோட் படத்தின் "மட்ட" வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் விஜய் திரிஷாவின் நடனத்தை கண்டுகளித்த ரசிகர்கள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் மொழியில் அனைவரும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
    • வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான செல்வராகவன், தற்போது பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    செல்வராகவன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அவ்வகையில் தமிழ் மொழியில் அனைவரும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "தமிழ்நாட்டு மக்களை நான் கெஞ்சிக் கேட்கிறேன். தமிழ் இனி மெல்லச் சாகும்ன்னு பாரதியார் சொன்னாரு. அது எந்த அளவுக்கு உண்மைன்னா தமிழ் இப்போது ஐசியு-வுல வெண்டிலேட்டர்ல இருக்கு. தமிழ்ல பேசுறத அவமானமா அருவருப்பா நினைக்குறாங்க.

    எனக்கு இங்கீலீஷ்ல பேசுறதோட அவசியம் புரியுது. ஸ்கூல்ல காலேஜ்ல இங்கீலீஷ்ல பேசமுடியாம அவமானப்பட்டு எவ்ளோ தடவை அழுதுருக்கேன். கூனி குறுகிறுக்கேன். புல் கிளாஸே இங்கீலீஷ்ல தான் பேசும். இங்கிலீஷ் தெரிஞ்ச பசங்க தான் கையை காட்டி பேசுவாங்க.

    இங்கிலீஷே தெரியாம எப்படியோ கடைசி பென்ச்சுல இருந்து படிச்சு வெளியே வந்துட்டோம். அதுக்குப் பிறகு தான் ஒரு வெறி வந்துச்சு.. என்ன இங்கீலீஷ் தானா? இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இங்கீலிஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததற்கு பக்கத்துலயே டிக்ஸ்னைரி வச்சுக்கிட்டு இதுக்கு இதான் அர்த்தம் என தெரிஞ்சுகிட்டேன்.

    கொஞ்சம் கஷ்டமான பிராசஸ்தான். ஆனா படிக்கப் படிக்க கொஞ்சம் சரளமா பேச ஆரம்பிச்சு, ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமாவுக்கு வந்த பின்னாடி தான் ஓரளவுக்கு நல்லா பேச ஆரம்பிச்சேன்.

    எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன். நீங்களும் எங்க போனாலும் தமிழ்-லேயே பேசுங்க. தலைநிமிர்ந்து பேசுங்க. அவங்க உங்கள அவமானமா பார்த்தா முறைச்சுப் பாருங்க.

    தமிழ்ல பேசுவதை ஃபிகர் அவமானமாக பார்த்தால் அப்படிப்பட்ட ஃபிகரே தேவையில்லை விடுங்க. தமிழ்ல பேசுற தமிழ்நாட்டுப் பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் பாருங்க. அவங்க அவங்க தாய் மொழியிலதான் பேசுவாங்க.

    இங்கிலிஷ்ல சப்-டைட்டில்தான் போடுவாங்க. வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான். உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன். காலம் காலமா மனசுக்குள்ள இருந்ததை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்றேன்" என்று பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மகேஷ் பாபு வழங்கினார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.50 லட்சம் ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக நடிகர் மகேஷ்பாபு வழங்கினார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

    மேலும், AMB சினிமாஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுகந்த் ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு டிராவல் விலாக்கர் ஆவார்.
    • அவரது சமீபத்திய வீடியோவில் பெங்களூருவை பற்றி கூறிய வார்த்தை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    சுகந்த் ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு டிராவல் விலாக்கர் ஆவார். அவரது சமீபத்திய வீடியோவில் பெங்களூருவை பற்றி கூறிய வார்த்தை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    அவரது வீடியோவில் அவர் " வட இந்திய மக்களே பெங்களூரு ஊரை உருவாக்கினார்கள். இந்த ஊர் வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் இல்லையென்றால் பெங்களூரு மக்களால் வாழ முடியாது. வட இந்தியர்கள் பெங்களூருவை காலி செய்தால். என்ன நடக்கும் எப்படி பிஜி மற்றும் ஹாஸ்டல் ஓனர்ஸ் எப்படி பணம் சம்பாதிப்பார்கள். மது விடுதியில் யார் நடனம் ஆடுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ தற்பொழுது பேசும் பொருளாகியுள்ளது. இதனை கண்டித்து பல கன்னட திரையுலக நடிகர்கள் எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர். பிரபல நடிகை சைத்ரா ஆசார் " நீங்கள் தயவு செய்து போய்விடுங்கள் பெங்களூரு ஊரை விட்டு. எப்படி பெங்களூர் காலியாக இருக்கிறது நாங்கள் பார்க்க ஆசைப்படுகிறோம். நீங்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியும்." என கூறியுள்ளார்.

    நடிகை வர்ஷ பொல்லாம்மா " தயவு செய்து கிளம்புங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆஸ்கர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 29 படங்களை இந்திய திரைப் பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது.
    • இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன .

    ஆஸ்கர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 29 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது.

    இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, விக்ரம் நடித்த தங்கலான், சூரி நடித்த கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியில் 12 படங்களும், தெலுங்கில் 6 படங்களும், மலையாளத்தில் 4 படங்களும், மராத்தியில் 3 படங்களும், ஒடியாவில் 1 படமும் உள்பட 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட உள்ளன.

    இவற்றில் லாபட்டா லேடிஸ், கல்கி 2898 ஏ.டி., ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகிள் 370, அனிமல் ஆகிய படங்களும் அடங்கும். 

    இதில் ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்ப லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
    • சமீபத்தில் இவரது இயக்கத்தில் 'மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்' படம் வெளியானது.

    பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

    இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன. நடிகை ஆம்பர் ஹெட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    கடந்த 1997-ல் தி பிரேவ் படத்தை டைரக்டு செய்து இருந்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் 'மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்' படம் வெளியானது. இந்த நிலையில் ஜானிடெப்புக்கு இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தும்பத் என்ற வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சமந்தா.
    • இதில் ஆதித்யா ராய் கபூர், வாமிகா கபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பிலும் சிக்கினார்.

    இதனால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகள் பெற்றார். தற்போது உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். வெப் தொடரிலும் நடிக்கிறார்.

    ஏற்கனவே சமந்தா நடித்த பேமிலிமேன் 2 வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தும்பத் பட இயக்குனரின் அடுத்த வெப் தொடரிலும் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஆதித்யா ராய் கபூர், வாமிகா கபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

    தற்போது இதன் படப்பிடிப்பில் இணைந்துள்ள சமந்தா வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், "கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கனவு காண்பதை நிறுத்தாதீர்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
    • மெய்யழகன் திரைப்படும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் டிரைலர் மிகவும் எமோஷனலாக இருக்கிறது. நிச்சயம் இப்படம் 96 படத்தை போன்ற வேறொரு தாகத்தை நம்முள் கடத்த காத்துக் கொண்டு இருக்கிறது. டிரைலர் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×