கோட் படத்தின் 'மட்ட' வீடியோ பாடல் வெளியானது

கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஈட்டியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான மட்ட வீடியோ பாடல் வெளியானது
MATTA SONG
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இம்மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஈட்டியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோட் படத்தின் "மட்ட" வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் விஜய் திரிஷாவின் நடனத்தை கண்டுகளித்த ரசிகர்கள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com