ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்

ஆஸ்கர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 29 படங்களை இந்திய திரைப் பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது.இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன .
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
Published on

ஆஸ்கர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 29 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது.

இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, விக்ரம் நடித்த தங்கலான், சூரி நடித்த கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியில் 12 படங்களும், தெலுங்கில் 6 படங்களும், மலையாளத்தில் 4 படங்களும், மராத்தியில் 3 படங்களும், ஒடியாவில் 1 படமும் உள்பட 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட உள்ளன.

இவற்றில் லாபட்டா லேடிஸ், கல்கி 2898 ஏ.டி., ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகிள் 370, அனிமல் ஆகிய படங்களும் அடங்கும். 

இதில் ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்ப லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com