என் மலர்
நீங்கள் தேடியது "jhonny depp"
- ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தின் மூலம் ஜானிடெப் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
- தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.
ஜானிடெப் தற்போது 'டே ட்ரிங்கர்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயினில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜாக் ஸ்பேரோ உடையில் ஜானிடெப் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேசிஜானிடெப் விளையாடியுள்ளார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
- சமீபத்தில் இவரது இயக்கத்தில் 'மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்' படம் வெளியானது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன. நடிகை ஆம்பர் ஹெட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
கடந்த 1997-ல் தி பிரேவ் படத்தை டைரக்டு செய்து இருந்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் 'மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்' படம் வெளியானது. இந்த நிலையில் ஜானிடெப்புக்கு இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.







