என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
    • இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார்.

    தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. தற்பொழுது இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    சிரஞ்சீவி இதுவரை 24000 நடன ஸ்டெப்புகளை 537 பாடல்களில் 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.

    இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார். நேற்று இந்த விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதே செப்டம்பர் 22 ஆம் தேதி 1978 - வது வருடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    விருதை பெற்ற சிரஞ்சீவி " என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நடிப்பதைவிட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால் கூட எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்." என கூறினார்.

    சிரஞ்சீவி தற்பொழுது மல்லிடி இயக்கத்தில் விஸ்வம்பரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை. வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதனால் வாடிவாசல் தொடங்க இன்னும் காலாவகாசம் தேவைப்படுகிறது.

    சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வாடிவாசல் அதிக கால அவகாசம் எடுப்பதனால் சூர்யா அதற்குள் வேறொரு திரைப்படத்தில் நடிக்கலாம் என எண்ணியுள்ளார். இதனால் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தனது 45- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மார்ச் மாதம் 8 ஆம் தேதி Blink கன்னட திரைப்படம் வெளியானது.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்ரீனிதி பெங்களூரு இயக்கினார்.

    கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி Blink கன்னட திரைப்படம் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்ரீனிதி பெங்களூரு இயக்கினார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இப்படம் ஒரு Sci-Fi  திரைப்படமாகும். 24 வயது கதாநாயகன் தனித்து வாழ்ந்து வருகிறான். அவனுடைய காதலியின் உதவியால் வாழ்க்கையை நடத்தி வருகிறான். இப்படி சென்று கொண்டு இருக்கும்போது அவனது வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு முதியவரை சந்திக்கிறான். அதன் பிறகு  அவனின் கடந்த காலத்தை பற்றிய உண்மையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

    இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, சைத்ரா, மந்தரா பட்டஹல்லி, கோபால் கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் வரவேற்பை தொடர்ந்து படத்தை தமிழ் மற்றும் பிற மொழிகளில் டப் செய்துள்ளனர்.

    இத்திரைப்படம் தமிழில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டைம் டிராவல் மற்றும் சை ஃபை திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்கும் எனில் இத்திரைப்படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
    • இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டீசர் காட்சியில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இடையே உள்ள உறவை மையப்படுத்தியே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அழகான ஃபீல்குட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    படத்தின் இசை வெள்யீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது அதில் சூர்யா பேசியதாவது " படத்தை படமாக மட்டும் பாருங்க, படத்தோட கலெக்ஷன் பத்தி நீங்க கவலை படாதீங்க. படத்தை ஜாலியா வந்து பாருங்க. அப்பறம் விமர்சனம் செய்யலாம். விமர்சனம் பண்ணனும்ற கண்ணோட்டத்தோட படத்த பாக்காதீங்க. இந்த மாதிரி ஒரு திரைப்படம் அபூர்வமாதான் நமக்கு கிடைக்கும். எல்லாரும் மெய்யழகன் திரைப்படத்த செப்-27 ஆம் தேதி வந்து திரையரங்குல பாருங்க" என்று கேட்டுக் கொண்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹிப்ஹாப் தமிழா தற்பொழுது `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
    • ஹிப்ஹாப் தமிழா தற்பொழுது `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

    ஹிப்ஹாப் தமிழா தற்பொழுது `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.

    இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்திற்கு முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தில் நடராஜ் என்ற நட்டி மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கிங் மேக்கர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் கதாப்பாத்திரத்தை விவரிக்கும் வகையில் அரசியல் அண்டர்டேக்கர் என்ற வீடியோ பாடல் படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்
    • இவர் தற்பொழுது மார்கோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் உன்னி முகுந்தன். சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மார்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹனீஃப் அதேனி இயக்கியுள்ளார். இதற்கு முன் நிவின் பாலி நடித்த மைக்கேல் படத்தை இயக்கியவராவர்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் உன்னி முகுந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் செக்ண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் உன்னி முகுந்தன் மிகவும் ஸ்டைலாக கோட் சூட் அணிந்து வாயில் சுருட்டுடன் இருக்கிறார். ஒரு கை நெருப்பில் எரிவது போலும் கையில் ஒரு வெட்டிய தலை கையில் இருப்பது போலவும் போஸ்டர் காட்சி அமைந்துள்ளது.

    போஸ்டர் மிகவும் வயல்ண்டாக அமைந்து இருக்கிறது. திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    • படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

    படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டீசர் காட்சியில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இடையே உள்ள உறவை மையப்படுத்தியே காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அழகான ஃபீல்குட் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
    • இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ஷங்கர் ராம் சரணின் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 ஆகிய திரைப்படங்களில் இயக்கி வருகிறார்.

    இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " பல திரைப்படங்களில் சு.வெங்கடேசனின் "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலின் முக்கிய காட்சிகள் திருடப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை கண்டு, அந்த நாவலின் உரிமத்தைப் பெற்றவனாக கலக்கமடைகிறேன். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் நாவலின் முக்கியமான காட்சியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். திரைப்படங்கள். வெப் சீரிஸ் என எதிலும் நாவலின் காட்சிகளை பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்கவும். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    • இம்மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், 'நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இம்மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் பிரபுதேவா பேசுகையில், '' இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன்"

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி திரை உலகையே ஆட்டி படைத்து வருகிறது.
    • குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் பெண்கள் கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

    ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி திரை உலகையே ஆட்டி படைத்து வருகிறது. பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மலையாள திரை உலகைபோல் தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பாலியல் கொடுமை நடந்ததாக தகவல்கள் வெளியானது.

    தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காண தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ரோகிணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:-

    நான் திரை உலகில் 12 வருடங்களாக இருக்கிறேன். ஒரு நடிகையாக நான் கவனிக்க வேண்டிய முதல் பிரச்சினை என்னவென்றால் வெளிப்புற படப்பிடிப்பிற்கு செல்லும் போது சரியான கழிப்பறை வசதி மற்றும் எல்லா வசதிகளும் கொண்ட கேரவன் முன்னணி நடிகையான எனக்கு கிடைக்கும்.

    ஆனால் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் பெண்கள் கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். சினிமாவில் இது போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

    நான் திரையுலகில் பாலியல் பிரச்சினைகளை எதிர் கொண்டதில்லை. தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

    பெண்கள் புகார் கொடுத்தால் அதனால் அவர்களுக்கு சினிமாவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.

    அவர்களை பாதுகாக்க வேண்டும். யாராவது குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். திரை உலகில் உள்ள நடிகைகள் தைரியமாகவும் திறமையுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அண்மையில் சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார்.
    • திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது.

    அண்மையில் சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார்.

    சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. நானி நடித்த திரைப்படங்களில் மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

    படத்தின் ஓடிடி அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை திரையரங்கில் காண தவறியவர்கள் ஓடிடி- யில் பார்த்து மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    படத்தின் ரிலீஸ் டிரைலர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் மிகப் பெரிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரிலீஸ் டிரைலர் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×