கின்னஸ் உலக சாதனை பெற்ற நடிகர் சிரஞ்சீவி

இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார்.
கின்னஸ் உலக சாதனை பெற்ற நடிகர் சிரஞ்சீவி
Published on

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. தற்பொழுது இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

சிரஞ்சீவி இதுவரை 24000 நடன ஸ்டெப்புகளை 537 பாடல்களில் 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.

இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார். நேற்று இந்த விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதே செப்டம்பர் 22 ஆம் தேதி 1978 - வது வருடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விருதை பெற்ற சிரஞ்சீவி " என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நடிப்பதைவிட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால் கூட எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்." என கூறினார்.

சிரஞ்சீவி தற்பொழுது மல்லிடி இயக்கத்தில் விஸ்வம்பரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com