`சூர்யாஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

அண்மையில் சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார். திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது.
`சூர்யாஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
Published on

அண்மையில் சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார்.

சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. நானி நடித்த திரைப்படங்களில் மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

படத்தின் ஓடிடி அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை திரையரங்கில் காண தவறியவர்கள் ஓடிடி- யில் பார்த்து மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com