`வாடிவாசல்' தாமதம் ஆவதனால் சூர்யாவுடன் இணையும் பிரபல இயக்குனர்?

நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
`வாடிவாசல்' தாமதம் ஆவதனால் சூர்யாவுடன் இணையும் பிரபல இயக்குனர்?
Published on

நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை. வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதனால் வாடிவாசல் தொடங்க இன்னும் காலாவகாசம் தேவைப்படுகிறது.

சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வாடிவாசல் அதிக கால அவகாசம் எடுப்பதனால் சூர்யா அதற்குள் வேறொரு திரைப்படத்தில் நடிக்கலாம் என எண்ணியுள்ளார். இதனால் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தனது 45- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com