என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் புக் மை ஷோ வில் மட்டும் 46 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். படத்தை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். பாராட்டிய வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து தற்பொழுது படத்தை பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    திரைப்படம் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. பார்க்கிங் திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்தது.
    • சமந்தா அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து.

    நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அண்ணனின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    திருமண நிகழ்வில் சமந்தா தனது தாயார் நினெட் பிரபு மற்றும் அப்பா, அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இதனையடுத்து சமந்தாவின் அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கனகா பிரபலமானார்.
    • 40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார்.

    மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின் சினிமாவை விட்டு விலகினார்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது

    கனகாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே என்று நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
    • தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.

    மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.

    நடிகை கவியூர் பொன்னம்மா 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார்.

    மேலும் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கவியூர் பொன்னம்மா மறைவுக்க நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எல்லா நடிகர்களுக்கும் 'அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.

    தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.

    'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2022-ம் ஆண்டு பிரபல நடிகரான பென் அப்லெக்கை ஜெனிபர் லோபஸ் திருமணம் செய்து கொண்டார்.
    • ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்

    இந்நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில், பென் அப்லெக்கை பிரிவதற்கு ஜெனிபர் லோபஸ் தயாராக இல்லை என்றும், இந்த பிரிவை நினைத்து அவர் தினமும் மது வருந்துவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    பென் அப்லெக்குடன் இணைந்து வாழவே ஜெனிபர் லோபஸ் விரும்பியதாகவும், ஆனால் பென் அப்லெக் அதற்கு தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக எப்போதாவது மது அருந்தி வந்து ஜெனிபர் லோபஸ் இப்போது தினமும் மது அருந்துகிறார் என்று சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார்.
    • ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

    இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

    தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.

    இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, என கணவர் ஜானி மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று அவரது மனைவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.

    படத்தின் அறிமுக விழா இன்று நடைப்பெற்றது அதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் மற்றும் படக்குழு கலந்துக் கொண்டனர். இந்த விழா கூடிய விரைவில் விஜய் டி.வி தொலைக்காட்சியில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த விழாவில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம் " துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு?" என்ற கேட்ட கேள்விக்கு "துப்பாக்கி கனமா தான் இருக்கும். அதை கரெக்ட்டா ஹேண்டில் பண்ணனும்" என பதிலளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
    • தினேஷ் `கெத்து’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ் `கெத்து' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக புக் செய்யப்பட்டு வருகிறது.

    தற்பொழுது நடிகர் அட்டக்கத்தி தினேஷ் எப்படி இந்த கெத்து கதாப்பாத்திரத்திற்காக அவர் பயிற்சி செய்தார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

    இத்திரைப்படம் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. பார்க்கிங் திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.
    • டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் நடிகர்களின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒவ்வொன்றாக அப்டேட் கொடுத்தனர். படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் ப்ரோமோ பாடலாக மை மைமா என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடல் கானா பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை சூப்பர் சுபு மற்றும் ஆஃப்ரோ வரிகளில் கானா குணா, கானா தரணி இணைந்து பாடியுள்ளனர்.

    படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அனைவரும் இப்பாடலில் நடனம் ஆடியுள்ளனர்.

    திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
    • இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

    தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி சிம்பு, கமல்ஹாசன், மணிரத்னம் , சுஹாசினி மற்றும் சிலர் ஒன்றாக புகைப்படக் எடுத்துள்ளனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
    • படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். தற்பொழுது படத்தை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். பாராட்டிய வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

    அதில் வெற்றிமாறன் கூறியதாவது " சமீபத்தின் இவ்வளவு எங்கேஜிங்காக பார்த்த திரைப்படம் லப்பர் பந்து. எல்லாருமே அவங்களுடைய வேலைய அவ்வலவு அழகா பண்ணிருக்காங்க." என கூறியுள்ளார்.

    திரைப்படம் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. பார்க்கிங் திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த திரைப்பட நடிகை ரீமா கல்லிங்கல். 2009-ம் ஆண்டு வெளியான “ருது” என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர்.
    • பின்னணி பாடகி சுசித்ரா வின் இந்த குற்றச்சாட்டை நடிகை ரீமா கல்லிங்கல் மறுத்தார்.

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த திரைப்பட நடிகை ரீமா கல்லிங்கல். 2009-ம் ஆண்டு வெளியான "ருது" என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் 'யுவன் யுவதி', 'சித்திரை செவ்வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

    இந்நிலையில் போதை விருந்து நடத்தியதாக அவர் மீது சமுகவலைதளங்கள் மூலமாக பிரபல பின்னணி பாடகி சுசித்ரா குற்றம்சாட்டினார். நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாகவும், அதில் இளம்பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டதாகவும், போதை விருந்து நடத்தியதால் தான் அவரது சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

    பின்னணி பாடகி சுசித்ராவின் இந்த குற்றச்சாட்டை நடிகை ரீமா கல்லிங்கல் மறுத்தார். பாடகி சுசித்ரா ஆதாரம் இல்லாமல் தன் மீது புகார் கூறியிருப்பதாகவும், அவர் கூறியது போன்று எதுவும் நடக்கவில்லை எனவும், அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    மேலும் மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் தெரிவிப்பேன் என்றும் நடிகை ரீமா கல்லிங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக கொச்சி போலீசில் புகார் செய்திருக்கிறார். நடிகை தனது புகாரை கொச்சி துணை போலீஸ் கமிஷனரிடம் ஆன்லைன் மூலமாக கொடுத்திருக்கிறார்.

    அவர் தனது புகாரில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், சமூகவலைதளங்கள் மூலமாக தனது இமேஜை அழிக்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    நடிகை ரீமா கல்லிங்கல் அளித்துள்ள புகார் மீது விசாரணை நடத்துமாறு எர்ணாகுளம் போலீஸ் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகையின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட அவர், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    நடிகை ரீமா கல்லிங்கல்லின் இந்த புகார் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×