பாலியல் புகார்.. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி - போலீசார் தகவல்

தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார்.ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
jani master
Published on

தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.

இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, என கணவர் ஜானி மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று அவரது மனைவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com