அட்டகத்தி தினேஷ் டு கெத்து தினேஷ் - லப்பர் பந்து படத்திற்காக தயாராகிய வீடியோ

பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.தினேஷ் `கெத்து’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அட்டகத்தி தினேஷ் டு கெத்து தினேஷ் - லப்பர் பந்து படத்திற்காக தயாராகிய வீடியோ
Published on

பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ் `கெத்து' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக புக் செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது நடிகர் அட்டக்கத்தி தினேஷ் எப்படி இந்த கெத்து கதாப்பாத்திரத்திற்காக அவர் பயிற்சி செய்தார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. பார்க்கிங் திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com