என் மலர்
சினிமா செய்திகள்
‘மூடர் கூடம்’ நவீன் இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தின் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியிருக்கிறார். #AlaudhininArputhaCamera
‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து நவீன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்த படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.
ஆனந்தி பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார். முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
Happy & Proud to announce that @plthenappan sir has acquired the entire copyrights of #AlaudhininArputhaCamera
— Naveen.M (@NaveenFilmmaker) April 6, 2019
Releasing this summer@SreeRaajLakshmi@plthenappan@ryaneaswar@onlynikil@jmrajan@anandhiactress@Natarajanmusicpic.twitter.com/F3daruy7Sq
பட வேலைகள் முடிந்து புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் தனது ஸ்ரீ ராஜலெட்சுமி பிலிம்ஸ் மூலம் கைப்பற்றியுள்ளார்.
ஏப்ரல் 19-ந் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தில் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன் தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய்யை வைத்து அக்னிச் சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். #AlaudhininArputhaCamera #Naveen #KayalAnandhi
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘சேலஞ்ஜ்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இந்த ஆண்டின் இந்திய அழகி பட்டத்தை வென்ற அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். #Challenge #Prashanth #AnuKeerthyVas
ஜானி படத்தை அடுத்து நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு, ‘சேலஞ்ஜ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனு கிரீத்திவாஸ் நடிக்கிறார். இவர், திருச்சியை சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, மாரிமுத்து, ஹரிஸ் உத்தமன், உமாபத்மநாபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரஷாந்த் நடித்த ‘சாக்லெட்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ், இந்த படத்தின் இயக்குகிறார். மனோகரன்-ஷங்கர் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். இந்தி பட உலகின் முன்னணி இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்ஜி, இசையமைக்க, வேல்ராஜிடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்த ஷிவக்குமார், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
பிரஷாந்தின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. ‘‘முன்பின் தெரியாத கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையேயான மோதலில், இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். வெற்றி யாருக்கு? என்பதே ‘சேலஞ்ஜ்’ படத்தின் கதை’’ என்கிறார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ். #Challenge #Prashanth #AnuKeerthyVas
சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் முன்னோட்டம். #GangsofMadras #CVKumar
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'.
பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், டைரக்டர் ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசை - ஹரி டஃபுசியா, இசை (OST) - ஷ்யமளங்கன், இசை மேற்பார்வை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - கார்த்திக் கே.தில்லை, படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால், கலை - விஜய் ஆதிநாதன், சிவா, சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ், சவுண்ட் டிசைன் - தாமஸ் குரியன், நடனம் - சாண்டி, நிர்வாக தயாரிப்பு - எஸ்.சிவகுமார், தயாரிப்பு, இயக்கம் - சி.வி.குமார்.

"மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு.
படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #GangsofMadras #CVKumar
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீசர்:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்தில் மீடூ புகாரில் சிக்கிய நடிகர் அலோக் நாத் நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #DeDePyaarDe
ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது ரகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் ரகுலால் படத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகர் அலோக் நாத் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். அலோக் நாத் நடித்த படம் என்பதால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று இணையதளங்களில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். #DeDePyaarDe #RakulPreetSingh #AlokNath #MeToo
நடிகை ஏமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருப்பதாக அவரே அறிவித்திருந்த நிலையில், தான் கர்ப்பமானது தனக்கே தெரியாது என்று கூறியிருக்கிறார். #AmyJackson
நடிகை ஏமி ஜாக்சன் லண்டன் கோடீஸ்வர தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டோவை காதலிக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத் தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஏமி ஜாக்சன் தனது இணையதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணம் ஆகாத நிலையில் ஏமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததை கண்டு ரசிர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில்,’நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே 6 வாரங்களுக்கு தெரியாது. அதன்பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது.
இந்த விஷயம் தெரிந்தவுடன் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும் நான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றி வருகிறேன். மகனோ அல்லது மகளோ பிறந்தால் என்னுடன் உலகை சுற்றுவார்கள்’ என்று கூறி இருக்கிறார். #AmyJackson #GeorgePanayiotou
பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் ரசூல் பூக்குட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு கதை சொல்லட்டுமா' படத்தின் விமர்சனம். #OruKadhaiSollattuma #ResulPookutty
சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றவுடன், கேரளாவின் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறுகிறார்.
அதன்படி நண்பர் ஒருவர் மூலமாக பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்து அதை ஆவண படமாக உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கான வேலைகளில் ஈடுபடும் போது, ரசூல் பூக்குட்டிக்கும், அவரது நண்பருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அந்த ஆவண படம் தயாரிப்பது கைவிடப்படுகிறது.

இருந்தாலும், தானே அந்த ஆவண படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார் ரசூல். இந்நிலையில், அவருக்கு பல்வேறு வழிகளில் பிரச்சனைகள் வருகிறது. இதையெல்லாம் ரசூல் பூக்குட்டி எப்படி சமாளித்தார்? பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்தாரா? என்பதே படத்தின் அடுத்த பாதி.
சவுண்ட் டிசைனராக ரசிகர்களை கவர்ந்த ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.இப்படத்திற்காக இவரின் உழைப்பு அபாரம். சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்குகளில் இப்படத்தை பார்த்தால், நுணுக்கமான ஒலிகளை கூட ரசிக்க முடியும். அந்தளவிற்கு சிறப்பான ஒலிகளை கொடுத்திருக்கிறார்கள்.

சாதாரண திரையரங்குகளில் பார்த்தால், இப்படத்திற்கான உழைப்பு உங்களுக்கு தெரியாமல் போய்விடும். கமர்ஷியல் படம் ரசிப்பவர்களுக்கு இப்படம் பிடிக்காது.
அனியன் சித்ரஷாலா மற்றும் நீல் டி குஹன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழாவை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார்கள். ராகுல் ராஜ்ஜின் இசையும் ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ சிறந்த ஒலி. #OruKadhaiSollattuma #ResulPookutty
விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Watchman #GVPrakashKumar
தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது.
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த வீட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழிவர்மன் படம் பற்றி கூறும்போது ‘நாயை பார்த்து பயப்படும் ஒரு இளைஞனுக்கு ஒரு நாயுடன் இரவு முழுக்க தங்க நேரிடுகிறது.

அந்த நாய் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியாமல் அதை பார்த்து பயப்படுகிறான். இதுதான் கதை. படம் முழுக்க சிரிக்கவும் வைக்கும். திகில் அடையவும் வைக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி இருக்கிறது. கோடை விடுமுறையின் தொடக்கமான 12-ந் தேதி ரிலீசாகிறது’. இவ்வாறு அவர் கூறினார். #Watchman #GVPrakashKumar
மணிரத்னமின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
படத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ பெரிய கதை என்பதால் ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவது சாத்தியமில்லை. இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்க வேண்டும். படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குவது குறித்து மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும்.
இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.800 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் அவரது மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் 166-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில், வருகிற 18-ந் தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #NivethaThomas
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். #Shrutihaasan #Kamalhaasan
ஸ்ருதிஹாசன் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
“நான் இங்கிலாந்தில் ஒரு இசை ஆல்பம் தயார் செய்யும் வேலையில் இருக்கிறேன். பாடலை நானே எழுதுகிறேன். சினிமாவில்தான் நடிக்கவில்லையே தவிர ஓய்வு எடுக்கவில்லை. இசை பணிகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பேன். தமிழ் படமொன்றில் நடிக்க இருக்கிறேன்.
இந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன். 10 வருடங்கள் நடித்து விட்டேன். கதாநாயகி போட்டியில் பின் தங்கிவிடுவேன் என்ற பயம் இல்லை. இசை ஆல்பம் வேலைகளை ஆரம்பித்ததால் நடிப்பதை தள்ளி வைத்து இருக்கிறேன்.

எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த பக்கம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து.
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர், நடிகையை பின்னால் தட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். #BoneyKapoor #UrvashiRautela
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர், இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா மற்றும் நடிகர்கள் பலர் மும்பையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது ஊர்வசி ரவ்தெலாவின் பின்பகுதியில் போனிகபூர் கையால் தட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் மகள் வயது பெண்ணை இப்படி செய்யலாமா என்று போனிகபூரை விளாசினார்கள். பின்னால் தட்டியதும் ஊர்வசி ரவ்தெலா முகம் மாறிவிட்டது. இப்படி கேவலமாக போனிகபூர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று சிலர் பதிவிட்டனர்.

திரையுலகில் மூத்தவரான போனிகபூர் இப்படி நடந்து கொள்ளலாமா, சினிமா துறையில் இதெல்லாம் சகஜம்தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு ஊர்வசி ரவ்தெலா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ‘‘சமூக வலைத்தளங்களில் நானும் போனிகபூரும் இருக்கும் வீடியோவை வைத்து கேலி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஜென்டில்மேன். சமூக வலைத்தளங்களில் யோசிக்காமல் கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது. இப்படி செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். நான் போனிகபூர் மீது மரியாதை வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
போனிகபூர் தட்டியபோது அசவுகரியமாக உணர்ந்த ஊர்வசி பட வாய்ப்புகளுக்காக இப்போது அவருக்கு ஆதரவாக பேசுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் 'அக்கா குருவி' படத்தை தமிழ், தெலுங்கில் சாமி இயக்கி வருகிறார். #Akkakuruvi
1997-ம் ஆண்டு உலகப் புகழ்வாய்ந்த ஆஸ்கர் விருது விழாவில் பங்கு பெற்ற படம் 'சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்' (children of heaven). 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு அனைவரையும் நெகிழ வைத்த இந்த படத்தின் தென்னிந்திய மொழி மாற்றும் உரிமையை பெற்று உள்ளார்கள்.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படத்திற்கு 'அக்கா குருவி' என்று பெயர் வைத்துள்ளார்கள்.
'மிருகம்' படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனரான சாமி இப்படத்தின் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இவர் நம்ம ரசிகர்களுக்காக சில காட்சிகளை இணைத்துள்ளார்.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி 'ஷூ' ஒன்று இடம்பெறுகிறது.
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அதனருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் போன்ற இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கியுள்ளார்கள். படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.






