என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கழுகு படம் மூலம் மிகவும் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் பிரபல நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். #Krishna #HighPriestess
    கழுகு படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கிருஷ்ணா. இப்படத்தை தொடர்ந்து, யாமிருக்க பயமே, வன்மம், யாக்கை, பண்டிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும் இந்த கட்டத்தில் தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.

    இது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கிருஷ்ணா கூறும்போது, ‘நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான "High Priestess" என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது’ என்றார். 



    ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிருஷ்ணா தயாரிக்க, புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    வில்லனாக பல படங்களில் மிரட்டி வந்த டேனியல் பாலாஜி, தளபதி 63 படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து வருகிறார். #DanielBalaji #Thalapathy63
    பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி. குறிப்பாக வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

    இப்படத்தை தவிர தனுஷுடன் அசுரன் மற்றும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம், விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்திலும் நடித்து வருகிறார். 



    தளபதி 63 படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இந்த வில்லன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வில்லனாக இருப்பேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் 167 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக இருக்கிறது. #Thalaivar167 #ARM
    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

    இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.



    இந்நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. #Thalaivar167 #ARM
    கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி வரும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. #SRPrabhakaran
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

    இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 



    இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
    நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா, அவரது அன்பில் வித்தியாசம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Samantha #Majili
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

    கணவன் - மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. இந்த படத்தில் ஜோடியாக நடித்தது ஏன் என்று சமந்தா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ’நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்.



    ‘மஜிலி’ அப்படி ஒரு படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் ‘மஜிலி’.

    இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhanush #Sneha
    எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார்.

    இந்தப் படத்தில் தனுசுக்கு இரட்டை வேடம் எனத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் ஒரு ஹீரோயினாக நடிகை சினேகா கமிட் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியாத நிலையில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


    குற்றாலத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் அப்பா தனுசின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளராக விவேக் மெர்வின் ஒப்பந்தமாகியுள்ளனர். #Dhanush #Sneha

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya38
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.



    இந்த நிலையில், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். #Suriya38 #SudhaKongara #MohanBabu

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான கல்கி கோச்லின் தமிழில் அறிமுகமாகிறார். #NerkondaPaarvai #AjithKumar
    அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு ஏற்றவாறு வினோத் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் வித்யா பாலனின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.



    ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #KalkiKoechlin

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 10-ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

    இதுவிர கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.


    இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கமாவது, ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. தற்போது வரை நயன்தாரா மட்டுமே ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். வதந்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Nayanthara

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி, அனைகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தின் முன்னோட்டம்.
    குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராய் சேவியர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கீ’. 

    ஜீவா நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - அனிஷ் தருண் குமார், படத்தொகுப்பு - நாகூரான், தயாரிப்பு - எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை - அசோக், நடனம்- பாபா பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ்.



    செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பற்றி காலீஸ் கூறும்போது,

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக காலீஸ் கூறினார்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    கீ டிரைலர்:

    இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்த சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் ரொமாண்டிக் கலந்த காமெடி படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan
    `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.



    இந்த படத்திற்கு `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் பற்ணுி பற்றி இயக்குனர் கூறும்போது, 

    "நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசி பலனை அறிய ஆர்வமுடன் இருக்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். 'தனுசு ராசி நேயர்களே' என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது.



    இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது. 

    ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதிசெய்து வருகிறோம்" என்றார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan

    ×